Posts

Showing posts with the label நேர்காணல் 4

தேவகாந்தன் நேர்காணல் 4

(என் குறிப்பு: இது எனது மொழியில்லை. அம்பலம் இணைய தளத்துக்காக என்னை நேர்கண்ட நிருபரின் மொழி. எமக்கிடையிலான உரையாடலிலிருந்து இந்த நேர்காணலை அவர் வடிவமைத்திருக்கிறார். கடந்த எனது தமிழகத்து பயணத்தின்போது (ஆனி 2014) களஞ்சியம்.காம் பகுதியிலிருந்து எடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதி  என் பார்வையில் தட்டுப்பட்டது. இதைப் பதிவாக்கவேண்டுமா என்று முதலில் யோசித்தேனாயினும், இதிலுள்ள இலக்கியம், அரசியல் சார்ந்த கருத்துக்கள் சிலவற்றின் முக்கியத்துவம்; கருதி பதிவேற்ற முடிவு செய்தேன். இது ஒரு நேர்த்தி குறைந்த நேர்காணல் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடு இல்லை. இது வெளிவந்த காலமும் படியிலிருந்து கண்டுபிடிக்க முடியாதிருந்தது. சுமாராக 1999 அல்லது 2000 ஆண்டளவில் வெளிவந்திருக்கலாம்.   -தேவகாந்தன்) ‘புலம்பெயர்ந்த இலக்கியத்தில் பெரிதான வித்தியாசமில்லை’ தேவகாந்தன் நேர்காணல் நேர்கண்டவர்: ஆர்.டி. பாஸ்கர் (இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் வெகுவாக மாறுபட்டது. இலங்கையில் இனப் பிரச்னை கிளம்பியதில், அங்கிருந்து பெரும்பாலோர் புலம்பெயர்வதற்கு முன்பு தமிழக இலக்கியச் சூழல் வேறுமாதிரி இருந்தது.இன்று பல்வேறு நாடுகளி...