எதிர்க் குரல்கள்
காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன். சாசுவத உண்மைகள்மீது தீவிரமாகஎழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்குத் தக தம் இருப்பை நெகிழ்வித்துக்கொண்டன என்பதுதான் அது. அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவேசாத்;தியமாக இருந்திருக்கின்றன. கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா.அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை. ஒவ்வொரு கட்டசமூக காலத்திலும் அவைவௌ;வேறு தளங்ளிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரேமாதிரியே இருந்திருக்கின்றன.அவ்வக்காலசமூகம் வேறுஎந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்காது. ஒருகாலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அதுதன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தைமட்டுமே சொல்லும். பின்நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப்படவேண்டும். மாற்றை அது எப்போதும் சொல்லாது. கலகக் குரலின் மூர்க்கத்தில்தான் சமூகங்கள் நகர்ந்திருக்கி...