Posts

Showing posts with the label Ninaivu Kaddutai

(கி.பி.அரவிந்தன் நினைவுக் கட்டுரை)

கனவின் மீதியைக் கொண்டலைந்த பயணத்தின் முடிவு தொடர்ந்தேர்ச்சியான சில முக்கிய ஆளுமைகளின் மரணங்களை கடந்த சில காலமாக இலங்கையின் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சந்தித்துவருகிறது. அந்தவகையில் கடந்த மார்ச் 08, 2015இல் நிகழ்ந்த கி.பி.அரவிந்தனின் மரணமும் இதன் முக்கியமானதொரு இழப்பாகக் கருதப்பட முடியும். இழப்புகள் ஏற்படுத்தும் கனிவுகளில் இறந்தவர்களின் தகைமைகள் ஒளிவட்டங்களாய்க் கீறப்படும் சூழலில், கி.பி.அரவிந்தனின் மறைவு நியாயமான அதிர்வுகளைக்கூட இலங்கைத் தமிழ்ச் சமூகத்திடையே ஏற்படுத்தவில்லையென்பது ஆச்சரியமான விஷயமல்ல. 1970களில் தொடங்கி 2009இல் முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்ற இலங்கையின் இனப் போராட்டம்பற்றி கி.பி.அரவிந்தனின் அவதானங்களில் வெளிப்பட்ட கருத்துக்கள் அச் சமூகத்தில் பரவசங்களை உருவாக்கக்கூடியவையாய் இருக்கவில்லையென்பது இதன் காரணமாய் இருக்கக்கூடும். அவர் வரலாற்றைக் கணிக்கும் நீரோட்டமாய் இருந்தாரென்பது, இனிமேலும் பரவசங்களை உருவாக்காமல் போக  வாய்ப்பிருக்குமென்றாலும், அவர்பற்றிய உண்;மை அதிலேதான் இருக்;கிறது. கி.பி.அரவிந்தனின் மரணம் எதிர்பார்த்திராத திடீர் மரணமல்ல. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுக...

‘சாதலின் இன்னாதது இல்லை’

Image
எஸ்பொவின் மரணம்  நண்பனாயும் இலக்கியவாதியாகவும்  பெரிய இழப்பு இம் மாதம் இருபத்தாறாம் தேதி மாலையில், வடமாகாணத்தைப் பிறப்பிடமாகவும் கிழக்குமாகாணத்தை வாழிடமாகவும் கொண்டிருந்து அவுஸ்ரேலிய குடிமகனாகியிருந்த எஸ்பொ என பரவலாகத் தெரியவந்திருந்த எஸ்.பொன்னுத்துரையின் மரணம் சிட்னி மருத்துவமனையில் நிகழ்ந்தது. அவுஸ்திரேலியாவில் சிட்னி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தபோதே அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததாக செய்திகள் வந்திருந்தன. அதனால் அவரது மரணம் ஒருவகையில் பேரதிர்ச்சியைத் தந்ததாய் இல்;லாவிடினும், ஒருபெரும் இழப்பை அது ஓங்கி அறைந்துகொண்டு நிற்கிறது. அதுவே ஒரு அதிர்ச்சியாகத்தான் தோன்றுகிறது. 1932இல் பிறந்த எஸ்.பொன்னுத்துரை ஆரம்பகாலத்தில் யாழ். புனித பற்றிக்ஸிலும், பின் பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியிலும் தனது கல்வியைத் தொடர்ந்து  பி.ஏ. படிப்பை முடித்தார். தொடர்ந்து அவர் ஆசிரிய நியமனம்பெற்று கடமையாற்றிய இடம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்கிளப்பு.   அதனால்தான் எனது ஆசிரியர் என்று காசிஆனந்தனிலிருந்து எஸ்.எல்.எம்.ஹனீபாவரை பலரும் போற்றுகின்ற நிலையை அவர் எய்தினார். அ...