Posts

Showing posts from August, 2022

‘கவிஞராக இல்லாவிட்டாலும் அவரிடம் ஒரு கவி மனது இருந்தது’

Image
பேரா. செல்வா கனகநாயகத்தின் ஆய்வுலகுபற்றிய                          ஒரு கண்ணோட்டம்  தேவகாந்தன் காலம் தன்னை உன்னதப்படுத்துவதற்கான மாந்தரைத் தேர்ந்து வைத்திருந்து அவரை உரிய தருணத்தில் பிரசன்னப்படுத்துகிறது என்று தோன்றுகிறது. அதனாலேயே ஒவ்வொரு கலை இலக்கிய காலகட்டமும் வரலாற்றில் தன் சுவடுகளை ஆழப்பதித்துச் செல்கின்றது. இலங்கையில் நல்லை நகர் ஆறுமுக நாவல(1822-1879)ரின் தோற்றம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதித் தமிழிலக்கிய வரலாற்றில் பெருஞ்சாதனை படைத்ததாய் இருந்தது. காலத்தின் தேவையுணர்ந்து தமிழுரைநடைக்கு சிறப்பான தொடக்கத்தைச் சமைத்தார் அவர். அதுபோல் இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்கள் தமிழ்க் கவிதை சார்ந்து முக்கியமானவை. எளிய நடை… எளிய பதம்… என எளிமையைக் கூவியழைத்த தமிழின் ஈடிணையற்ற நவீன கவிஞன் மகாகவி பாரதி (1882-1921) தோன்றிய காலமது. ஆயினும் நாவலரும் பாரதியும் தோன்றி அவ்வொப்பற்ற காலத்தை உருவாக்கினார்கள் என்றல்ல, காலம் தன்னை வரலாற்றில் பதிக்க நாவலரையும் பாரதியையும் தோற்றிற்று என்பதே சரியாகவிருக்கும். இருபதாம் நூற்றாண்டில் எண்பதுகளிலிருந்து பூப்பரப்பெங்கும் திசைகெட்டலையத் தொடங்க

நினைவுத் தூபி

    யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த கந்தையா நடேசு (தை 06, 1942 – வைகாசி 22, 2022) காலமாகிவிட்டாரென்பது ஒரு சாதாரணனைப் பொறுத்தவரை ஒரு செய்தி மட்டுமே. ஆனால் இலங்கைத் தமிழ்ப் புலமெங்கும் அறியப்பட்ட ஓர் இலக்கியவாதியான தெணியானின் மரணமென்பது ஒரு வாசகனுக்கும் ஒரு சக படைப்பாளிக்கும் அதற்கும் மேலானது. தெணியானின் மறைவு அவரது உறவினர் நண்பர்களை மட்டுமில்லை, சகபடைப்பாளிகளையும் அதிரவைத்தது. பருத்தித்துறையிலுள்ள நண்பனான பாஸ்கரனின்மூலமாய் வட்ஸ் அப் குறுஞ்செய்தியில் விபரம் ஓர் அதிகாலை என்னை வந்தடைந்தபோது நானுமே அதிர்ந்தேன். அவர் விட்டுச்சென்ற இருபதளவான படைப்புக்களில் சிலவேனும் அவரது ஞாபக தூபிகளாய் நிலைக்கக் கூடியவையென்பது ஆறுதலான விஷயம். ஓர் இலக்கியவாதியைப் பொறுத்தவரை அவையே அவரது சிறந்த ஞாபக தூபிகளாகவும் ஆகவேண்டும். அவற்றை அடையாளப்படுத்த எடுக்கும் முயற்சியின் இத்தருணமானது, கௌரவ மதிப்பீடாய்க் கணிக்கப்படக்கூடிய ஆபத்துக்கொண்டது. அந்த அவதானத்துடனேயே சிலவற்றை இங்கு பதிவிட முயல்கிறேன். 1964இல் ‘காணிக்கை’ சிறுகதையுடன் ஆரம்பிக்கும் தெணியானின் படைப்புலகில் அடையாளப் படுத்தப்படக்கூடிய முயற்சிகள் ந

சாம்பரில் திரண்ட சொற்கள் 4

Image
  வித்துவான் வீரகத்தியின் தம்பி சண்முகராசாவின் வீடு அரசடியில் இருந்ததென்றால், சந்திக்குப் பின்னால் விரிந்து கிடந்த வயல்வெளியின் மறுகரையில் பார்வை புள்ளியாய்ப்படும் தூரத்திலிருந்தது, பொன்னாத்தையென்று அவர்கள் வம்சத்தில் பெருந்தனக்காரியாய் இருந்த முப்பாட்டியின் ஞாபகத்துக்காய் பெயர் வைக்கப்பட்ட அவரது தங்கையின் வீடு. அது வயற்கரைப் பிள்ளையார் கோயிலுக்குக் கிழக்காக நாற்பது பரப்பில் அமைந்திருந்தது. பராமரிப்புப் போதாமையால் சுவர்களில் கரும்பாசி ஏறிக்கொண்டும், அடுக்கு ஓடு போடப்பட்ட அதன் கூரைப் பகுதியில் சேதாரம் அதிகமாகியும் இருந்தாலும், அரண்மனைமாதிரி பொழிகல்லுகள் நிறைய வைத்துக் கட்டப்பட்ட பெரிய வீடுதான் அது. அவளின் கல்யாணப் பேச்சின்போது, குளக்கரை வயலையும், அரண்மனையான வீட்டையும் சீதனமாகக் கொடுக்கவேண்டாம், அதற்கிணையாக தனது தென்னந்தோப்பு வளவையும், தோட்டக் காணியையும்,   இருபாலைச் சீதன வீட்டையும் கொடுக்கலாம், தனக்கு அந்த அரண்மனை வீடு வேண்டுமென நின்ற சண்முகராசாவின் எண்ணத்தை, தனக்கு அந்த வீடுதான் வேணுமென்று பிடிவாதம் பிடித்து சின்னாத்தை தனதாக்கிக் கொண்டாள். முரணின் முதல் முளை சின்னண்ணன் தங்கை