Posts

Showing posts from August, 2021

கதை: சகுனியின் சிரம்

    1 கிருஷ்ணனால்   தூங்க முடியவில்லை. அன்று மாலை முடிவுற்றிருந்த முதலாம் நாள் பாரதப் போரின் அவலங்களெல்லாம் மீள மீளவெழுந்து அவன் மனத்தை உலுப்பிக்கொண்டிருந்தன. கையிழந்த காலிழந்த மெய்பிளந்த மனிதர்கள் எழுப்பிய வதைப்பாட்டின் பெருவோலம், குலைந்த சுருளின் விசையுடன் விரிந்தெழுந்துகொண்டு இருந்தது. போலவே, சரங்களைத் தம் தொண்டைக் குழிகளிலும் பழுவிலும் வயிற்றிலும் தாங்கிய யானை குதிரை ஆதியாம் படை மிருகங்களின் பெருந்தொனி அவனால் தாங்கமுடியாததாய் இருந்தது. அர்ச்சுனனுக்கான சாரதியத்தைச் செலுத்தியபொழுதிலும் கிருஷ்ணன் கவனம் கள நிகழ்வுகளில் பிசகாதேயிருந்தது. அந்த அவலமும் ஓலமும் தன்னுள் நினைவுகளாய் உறையவிட்டு தான் எப்போதும் எவர்க்கும் எடுத்துரைக்கும் கருமத்தில் கண்ணாயிருத்தலை மேற்கொண்டான். இரவின் படுக்கையில் உடல் களைத்துக் கிடந்திருந்தபோது அவை மறுசுழல் கொண்டெழுந்து தாங்கமுடியாமையின் எல்லைக்கு அவனை நகர்த்தின. அன்றைய யுத்தத்தின் தோல்வி முகம்கூட எந்த அழுத்தத்தையும் அவனில் செய்திருக்கவில்லை.   அவன் போர்கள் கண்டவன்; யுத்தங்கள் புரிந்தவன். ஆயினும் அவன் அதுவரை கண்டதும் புரிந்ததும் இரண்டு, அதிகமானால் அவற்றின

மு.த. பற்றிய கட்டுரை

  ‘மு.தளையசிங்கத்தின் எழுத்துக்களை விளங்குதலென்பது அவரது காலத்தை   விளங்குதலே ஆகும்’                                                             -தேவகாந்தன்-   மறைந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துக்களை சமகாலத் தமிழ் வாசகனுக்குப் பரிச்சயமாக்குதலென்பதும், புதிய சூழ்நிலைமைக்கேற்ப அவர்களது படைப்புக்களை விமர்சனார்த்தமாக அணுகுதலென்பதும், இலங்கைத் தமிழ் இலக்கியத்தையும் புலம்பெயர் இலக்கியத்தையும் உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லும் விழுமிய நோக்கத்துக்கு   அனுகூலமாகக் கூடுமாயினும், அப் பணி மிகச் சிரமமானதென்பதில் ஐயமில்லை. இந்த இலக்கிய நோக்கினை   நிறைவேற்றுதல் நாளதுவரையில்லாத ஒரு   கோட்பாட்டுத் தளத்திலேயே இயலுமாயிருக்குமென்பதை முதலில் கருத்திலிருத்தல்வேண்டும். தற்கால விமர்சனவெளியின் பல்திசை விகசிப்பு   இச் செயற்பாட்டின் சிலாக்கியத்தை முன்னறிவிப்புச் செய்வதாகக் கொள்ளமுடியும். அதாவது சோஷலிச யதார்த்தம், விமர்சன யதார்த்தம், பின் அமைப்பியல் அல்லது பின் நவீனத்துவமென்ற   புதிய விமர்சனக் கோட்பாடுகளினூடான ஆய்வின் வாசல் திறப்பை காலம் சாத்தியமாக்கியிருக்கிறது. அவ்வாறன்றி, ஆழ் விமர