Posts

Showing posts with the label vimarsanam

‘மூன்றாம் சிலுவை’

ஒரு பாவி அறையப்படுவதிலிருந்து விலகி ஓடிவிட்ட சிலுவை ‘மூன்றாம் சிலுவை’ நூல் குறித்து சில விமர்சனக் குறிப்புகள் நாவல் என்ற முத்திரையோடு வெளிவந்திருப்பினும் நாவல், குறுநாவல் என்ற எந்தவித வகைமைப்பாடுகளுக்குள்ளும் அடங்காது, சில சம்பவங்களின் சேர்த்தியான ஒரு நீண்ட கதையென்பதே சரியான இதன் அடையாளமாகும். ‘மூன்றாம் சிலுவை’ சொல்லுகின்ற செய்தி, அந்தச் செய்தியின் பின்னணியான நிகழ்வுகளைவிடவும், நூல் கொண்டிருக்கக்கூடிய கட்டமைப்பின் விஷயங்களே முக்கியமானவை. இதன் கட்டமைப்பு பலஹீனமானது என்பதோடு, இதிலுள்ள கவிதைகளின் சேர்த்தியும், நாட்குறிப்பின் மூலமான நிகழ்வுகளின் தெரிவிப்பும்கூட எதுவித நன்மையையும் செய்துவிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இதை ஒரு நாவலாக்கும் அத்தனை முயற்சிகளும் இதில் தகர்ந்தே கிடக்கின்றன. பாலியல் சார்ந்த விஷயங்களையும், பாலியல் நிகழ்வுகளையும் எழுதக்கூடாதென்பதில்லை. தமிழிலக்கியத்தின் இறுகிப்போயுள்ள மரபார்ந்த ஒவ்வொரு முறிப்பையும் கரகோஷத்தோடு வரவேற்க தீவிர வாசக உலகம் தயாராகவே இருக்கின்றது. எஸ்.பொ.வின் ‘தீ’ அப்படித்தான் வரவேற்புப் பெற்றது. ஆனால், அது ஒரு தேவையின் அளவுக்கே தொடர்ச்சியைக்...

ஒரு மரணமும் சில மனிதர்களும்

‘விடுவிக்கப்பட்ட பகுதிக’ளிலிருந்து எழும் அவலங்களின் இலக்கிய சாட்சியம் அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த நூல் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’. தாட்சாயணி எழுதியது. பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு. இதை எழுதியவரைப்பற்றி ஏற்கனவே கேள்வியில் பட்டிருந்தபோதும், இந்நூலைக் கண்டபோது மணிமேகலைப் பிரசுரமாக இது வெளிவந்திருந்த காரணம் சுட்டியே இதை வாங்க மனம் பின்னடித்துவிட்டது. வாசிப்பு என்பது தொழில் சார்ந்த விஷயமல்ல. மனம் சார்ந்தது. பசி வந்தால் ருசி வேண்டாம், நித்திரை வந்தால் பாய் வேண்டாம் என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடையுண்டு. பசிக்கு ருசி வேண்டாமென்றாலும், மனப் பசிக்கு ருசியும் தேவை. அந்த ருசியை அடைவதற்கான பண்டத்தின் பரிமாற்றமும் அழகியலோடு இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும்தான் இருக்கிறது. பண்டத்தின் தன்மையைக்கூட இந்தப் பரிமாற்றத்தின் அழகியல் காட்டிக்கொடுத்துவிடுகிறது என்பதையும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். இந்த அடிப்படையில் என் தயக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன். வாசிப்பை, மைதுனத்தின் கிளர்ச்சி தரும் கூறாகக் கூட விமர்சகர்கள் சிலர் சுட்டியிருக்கிறார்கள். என்றாலும்...

பொறியில் அகப்பட்ட தேசம்’

‘பொறியில் அகப்பட்ட தேசம்’ மு.பொ.வின் கவிதை நூல் மூலம் சர்வதேசியமாய் விரிந்த தமிழ்க் கவிதைப் பரப்பு 2002 இல் வெளிவந்த மு.பொ.வின் நீண்ட கவிதை நூலான ‘பொறியிலகப்பட்ட தேசம்’, அது வெளிவந்த காலத்திலேயே பலத்த எதிரும்   சார்புமான  விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தது. அமெரிக்காவின் வர்த்தக வலயமான இரட்டைக் கோபுரங்களின் தகர்வின் உடனடிப் பின்னாக வெளிவந்த நூல் என்ற வகையில் இதன் வரவும், இது முன்வைத்த கருத்துக்களும் மிகமுக்கியமானவையாக இருந்தன. அந்த இரட்டைக் கோபுரங்களின் தகர்வின் பின் கடந்தோடிய இத்தனை ஆண்டுகளில் தகர்ப்பு விளைத்த அரசியலின் பயங்கரவாதங்களையே உலகத்தின் மய்ய அரசியல் நிகழ்வுகளாக இந்த உலகம் கண்டுவந்துகொண்டிருந்தது. 2008 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியை இந்தக் கலம்பகங்களின் ஒட்டுமொத்தமான விளைச்சல் எனலாம். இதன் சார்புநிலை நாடுகள்கூட இந்தப் பொருளாதாரச் சிக்கலில் ஆழமாகச் சிக்குண்டுபோயுள்ளதை நிதர்சனம் தெரிவிக்கிறது. இப்போது ‘பொறியிலகப்பட்ட தேசம்’ காலகாலத்துக்கும் தமிழ்க் கவிதையுலகில் நினைக்கப்பெறும் தகவுடையதாகியிருக்கிறது. நியூயோர்க் உலக வர்த்தக மய்யமான இரட்டைக் கோபுரங்க...

புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள்

தமிழ்ப் புனைகதைப் பரப்பில் புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள் இரு கவிதைத் தொகுப்புக்களை முன்வைத்து  தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிக்க எதிர்ப்பார்ப்போடும் நம்பிக்கையோடும் கவனிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற கருதுபொருள், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளின் பின்னரான இக் காலகட்டக் கணிப்பில் எந்தத் தளநிலையை அடைந்திருக்கிறது என்பதை ஒரு வரைகோட்டு விழுத்தலாக அமைத்துப் பார்க்கிறபோது, முன்பிருந்த எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் சறுக்கலடைந்து இருப்பதையே ஒருவரால் காணமுடியும். அதன் காரணங்களையும், காரணங்களின் பின்னணிகளையும் சுருக்கமாகவேனும் அலசுகின்ற தேவையிருக்கிறது. தொண்ணூறுகளில் ஒரு நூலைத் தயாரிப்பதற்கான செலவை இந்திய ரூபாயில் வெளிநாட்டுப் பண மாற்றாகக் கணித்த நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது மிகவும் குறைவாகத் தென்பட்டதாயே கொள்ளக்கிடக்கிறது. ஒரு நூலை எவராவது எழுதிவிட்டிருந்தால் அதன் அச்சாக்கத்துக்கு பெரிய தடையேதும் ஏற்பட வாய்ப்பிருக்கவில்லை. அச்சாக்கமல்ல, எழுதுவதுதான் தேவையானதாக இருந்தது அன்றைய நிலையில். அதன்படி சிலபல நூல்களும் வெளிவந்தன. அவை வந்த சுவடுமில்லாமல் மறைந்தன. ஆக நம்பிக்கை அள...

சம்பூர்ண நிராகரணம்: 2

விசாரணை 2. இறுதிப் பகுதி இந்தக் காலம்வரையும் இலங்கைப் பத்திரிகைகளில் இந்திய எழுத்தாளர்களே எழுதினார்கள். அதுவும் மோசமான எழுத்துக்கு உதாரணமாய்ச் சொல்லப்படக் கூடியவர்கள் எழுதினார்கள். நமது எழுத்தாளர்கள் கூட கல்கி, குமுதம் வகை எழுத்துக்களையே எழுதிவிட்டு பெருமையும் அடைந்து கொண்டார்கள். 1956 வந்ததும் ஏற்பட்ட மாற்றத்தால் ஒரு புதிய வட்டம் எழுத்துத் துறைக்குட் பிரவேசித்தது. அவர்களாலும்தான் இலக்கியரீதியான அடையாளத்தை தாபிக்க முடியவில்லை. காரணம் வெளிப்படையானது. 'கார், பங்களா, உத்தியோகம்' என்று துரைத்தனக் கனவுகளோடு வெளிவந்த பேர்வழிகள்தான் இவர்கள் ('ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு.த்.பக்.33). இந்த அவர்களோடு அ.முத்துலிங்கத்தையும் உள்ளடக்குவார் மு.த. (7) இந்த பொருளாதார , அரசியல் மாற்றங்களின் அடியாக முகிழ்ந்தெடுத்ததுதான் முற்போக்கு இலக்கிய இயக்கம். அதுதான் மண்வாசனை பற்றி பேசியது. அதுதான் தேசிய இலக்கியத்தைப் பேசியது. இது கண்டு யாழ்ப்பாணத்து சைவ வேளாளர் இலக்கிய உலகம் கொதித்தெழுந்தது. மக்களின் பேச்சு மொழியைக் கையாண்டு அவர்களின் வாழ் நிலைமைகளைப் பற்றிப் பேசிய படைப்புகளை இழிசனர் இலக்கிய...

சம்பூர்ண நிராகரணம்: 1

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மதிப்பீடு பற்றிய வேதசகாயகுமாரின் கட்டுரை குறித்தான விசாரணை. விசாரணை 1 பகுதி 1: 1) காலம் இதழ் 15இல் வெளியான எம்.வேதசகாயகுமாரின் 'ஈழத் தமிழ்ச் சிறுகதை' பற்றிய கட்டுரை எனக்கு 2001 மார்கழியிலேயே வாசிக்கக் கிடைத்து விட்டது. அதன் மறு வாசிப்பு சிந்தனைகளுக்கும், அவசியமான தொகுப்புகளினதும், விமர்சனக் கட்டுரைகளின் மீள் வாசிப்பு யோசனைகளுக்குமாக இத்தனை கால விரயம் அவசியமாயிற்று. இப்போது ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் ஒருங்கே வைத்துப் பார்க்கிறபோது ஒன்று துலக்கமாகத் தெரிகிறது. கிடைத்த தொகுப்புகளையும், சொல்லப்பட்ட தகவல்களையும் மட்டும் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த்மான ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய மதிப்பீட்டுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்பதே அது. அது ஈழத் தமிழ்ப் பரப்புக்குச் செய்யும் சகாயமாக நிச்சயமாக இருக்கவே இருக்க முடியாது. முன் முடிவுகளை நோக்கிய வாசிப்பு, ய்வுமுறைச் செலுத்துகைகள் அறிவுலகத் துரோகமாகவே கணிக்கப் படும். தான் பயிலாத கவசதாரியான துரியோதனன் யுத்த களத்தில் பட்ட அவஸ்தையும், அவமானமும் பற்றி வியாசர் அழகாக எழுதியிருப்பார்.கருத்தளவிலும் கவசதாரிகள் இருக...

LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து

கப்ரியேல் கர்சியா மார்க்வெய்ஸின் LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து சமீபத்தில் நாவல்களை மூலக்கதைகளாகக் கொண்ட மூன்று சினிமாக்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இது வாய்ப்பானது ஓர் எதிர்பாராத அமைவில் ஏற்பட்டதுதான். முதலில் NO COUNTRY FOR OLD MEN. கொர்மாக் மக்கார்தியின் அதே தலைப்பிலான நாவலைச் சினிமாவாக்கியது. அடுத்தது கப்ரியேல் கர்ஸியா மார்க்வெய்ஸின் நாவலான LOVE IN THE TIME OF CHOLERA சினிமாவாகி வந்திருந்தது. மூன்றாவது ATONEMENT. இது இயன் மக்கீவானின் ATONEMENT நாவலைப் படமாக்கியது. இவை மூன்றும் அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து ஆகிய மூன்று பெரும் நாடுகளை மய்யமாகக் கொண்டவை. மட்டுமில்லை, பெருவாரியான மற்றைய நாவல்கள் சினிமாவாகியபோது தலைப்பு மாற்றம் பெற்றதுபோலன்றி, இவை நாவலின் தலைப்புகளையே சினிமாவாக்கத்திலும் கொண்டிருந்தன. நாவலின் மூலத்திலிருந்து மிகவும் மாறுபட்டுவிடாதபடி இம் மூன்று சினிமாக்களும் எடுக்கப்பட்டிருந்ததை தலைப்புகள் சுட்டிநிற்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டும். ஒரு நாவலைப் படமாக்குவது எப்படியென்பதற்கு இம்மூன்றுமேகூட உதாரணமாகக் கூடியவை. ஆனாலும் மிகச் சமீப...