கலாபன் கதை: 2-8
அலையும் கடல் -தேவகாந்தன்- தரையோடும் வாகனத்துக்குப்போல், கடலோடும் நாவாய்க்கும் காப்புறுதி அவசியம். அந்தக் காப்புறுதி அதன் கடலோடும் தகுதியின்மேலும், கப்பலிலிருப்போரின் பாதுபாப்புக்கான சகல உபகரணங்களினதும் கப்பல் பராமரிப்பினதும் பூரணப்படுகையின்மேலும் வழங்கப்படுகிறது. அவ்வாறான ஒரு காப்புறுதி இல்லாத அல்லது காலாவதியாகும் கப்பல் கடலோடும் தகுதியை இழந்துவிடும். அக் கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு ஏற்படும் சேதத்துக்கோ, கப்பலுக்கே சேதம் ஏற்படுமாயினும்கூட, காப்புறுதி ஸ்தாபனம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. அந்தவகையில் கப்பலின் காப்புறுதி மிகமுக்கியமான அம்சம். அவ்வாறான தகுதியான காப்புறுதி இல்லாதவகையில் தனது கடலெல்லைக்குள் அணுகிய கப்பலை தடுத்துவைக்கவும், துறைமுகத்தில் நிற்கும்போது காப்புறுதியின் காலம் முடிந்தது தெரியவந்தால் அல்லது பாதுகாப்பு உபகரணங்களின் குறைபாடு கண்டுகொள்ளப்பட்டால் அதை அங்கேயே நிறுத்திவைக்கவும் துறைமுக நிர்வாகத்துக்கு அதிகாரமுண்டு. இவ்வாறான கப்பல்கள் சவப்பெட்டிக் கப்பல்கள் (Coffin Ships) என்று வழக்கில் குறிக்கப்படுகின்றன. இத்தகைய ஏற்பாடுகள் நாட்டுக்கு நாடு சற்று வித்த...