Posts

Showing posts with the label arasiyal

தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம்

மார்க்ஸியர், இடதுசாரிகள், தேசியவாதம்: தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம் எப்போதும் கேட்பதற்குப் புதிது புதிதாக கேள்விகள் பிறந்துகொண்டே இருக்கின்றன. இது சுவாரஸ்யமானதும், அதேவேளை முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். புதிய கண்டுபிடிப்புக்களும், புதிய சிந்தனைகளின் தோற்றமும் இந்தக் கேள்விகளின் அவசியத்தை மனிதர்கள் மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன என்பதாக இதற்கான விடையை நாம் கண்டடைய முடியும். தேசியவாதம் அல்லது தமிழ்த் தேசியவாதம் குறித்து இன்றெழுந்திருக்கும் கேள்விகளும் புதிய சூழ்நிலைமைகளின் தாக்கத்தினால் விளைந்தவையே என்பது தெளிவு. தேசியவாதம் என்ற கருத்தாக்கம் ஓரளவு முதலாளித்துவ அமைப்பின் ஆதிக்கம் அரசியலில் வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் உருவானதென்றாலும், அது குறித்த சிந்தனை பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு மேலேயே அரசியற் புலத்தில் காலூன்றிவிட்டது. சரியாகச் சொன்னால் பதினெட்டாம் நூற்றாண்டின் எழுபதுகளில். இந்தச் சொல்லை ஒரு கருத்துருவத்தின் வெளிப்பாட்டுக்காக செதுக்கியெடுத்தவர் ஜோஹன் கொட்பிறைட் ஹெடர் என்பவர். எவ்வாறு  போஸ்ட் மாடனிஸம் என்ற சொல், வரலாற்றாசிரியர் ஆர்னால்ட் ரொயின்பீ எ...

இனப் படுகொலைகளும் உலக நாடுகளின் மவுனமும்

அமெரிக்கா தனது நலங்களுக்காக அன்றி வேறு காரணங்களுக்காக எந்த நாட்டின் கோர நிகழ்வுகளுக்குமெதிராக  இதுவரை குரல் கொடுத்ததில்லை யுத்த காலக் குற்றங்களுக்காக சிறீலங்கா அரசு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்கள் உட்பட சில அமைச்சரவை உறுப்பினர்களும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைப் படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்படுகின்ற தருணத்தில், யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் எந்த சர்வதேச அமைப்பின் முன்னரும் சாட்சியமளிக்கத் தயாராகவிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசினால் கைதுசெய்யப்பட்ட செய்தி புதியதில்லை. புதுமையானதும் இல்லை. இதுவும் இன்னும் இதுபோன்ற பலவும் எதிர்பார்க்கப்பட்டவைதான். ஏறக்குறைய சர்வாதிகார ஆட்சியின் நிலைமையை அடைந்திருக்கும் சிறீலங்காவுக்கெதிரான சர்வதேசத்தின் குரல் மவுனித்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம். ஆனாலும் இந்த உரைக்கட்டில் அதுபற்றி நான் அலசப் போவதில்லை. திட்ட  இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கும் சிறீலங்கா, சர்வதேசத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறதா என்பதுபற்றியும், உலகின் பல பாகங்களிலும், குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இரு தசாப்த ...

இனப் படுகொலைகளும்

இனப் படுகொலைகளும் உலக நாடுகளின் மவுனங்களும் -தேவகாந்தன்- யுத்த காலக் குற்றங்களுக்காக சிறீலங்கா அரசு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்கள் உட்பட சில அமைச்சரவை உறுப்பினர்களும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைப் படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்படுகின்ற தருணத்தில், யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் எந்த சர்வதேச அமைப்பின் முன்னரும் சாட்சியமளிக்கத் தயாராகவிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசினால் கைதுசெய்யப்பட்ட செய்தி புதியதில்லை. புதுமையானதும் இல்லை. இதுவும் இன்னும் இதுபோன்ற பலவும் எதிர்பார்க்கப்பட்டவைதான். ஏறக்குறைய சர்வாதிகார ஆட்சியின் நிலைமையை அடைந்திருக்கும் சிறீலங்காவுக்கெதிரான சர்வதேசத்தின் குரல் மவுனித்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம். ஆனாலும் இந்த உரைக்கட்டில் அதுபற்றி நான் அலசப்போவதில்லை. திட்டமிட்ட ஓர் இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கும் சிறீலங்கா, சர்வதேசத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறதா என்பதுபற்றியும், உலகின் பல பாகங்களிலும், குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இரு தசாப்த காலத்துள் நடந்துள்ள இனப்படுகொலைகளையும், அக்காலங்களில் இந்த சர்வதேச சம...

இனியும், தமிழர் அரசியலும்

வரலாற்றிலிருந்து எவரும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் தொடரும் வரலாற்றுப் போக்குகளிலிருந்து நாம் அறிந்துகொண்டிருப்பது என்ற பிரபலமான கருதுகோள் ஒன்றுண்டு. வராலாறு திரும்பத் திரும்ப ‘போல’ வருவதின் காரணம் அதன் இயங்கு திசையின் காரணமாயுமிருக்கலாம் என்பது சரியானதாகவே தோன்றுகிறது. இலங்கைத் தமிழரின் வரலாறும் திரும்பத் திரும்ப ஏமாற்றத்தோடும், 2009இல் பெரிய அழிவோடும், முடிந்திருப்பதனையும் இந்தத் தடத்தில் வைத்துப் பார்க்கமுடியும். சற்றொப்ப இரண்டரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் தடைமுகாங்களில் படும் அவஸ்த்தைகளை தினமும்தான் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்துகொண்டிருக்கிறது. இதற்கும் மேலாக ஐம்பதினாயிரம் தமிழர்கள் குழந்தைகள், பெண்கள், ஆண்களாக கொலைப்பட்டிருக்கிறார்கள் என்பது அதற்கும் மேலான துயரத்தை விளைப்பது. மட்டுமா? ஒரு நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட முடியாத பொருளாதார, கல்விப்புல, ஆள்புல இழப்புக்கள் நேர்ந்துள்ளதை எந்த இழப்புக் களத்தில் வைத்துப் புரிந்துகொள்வது என்பது புரிபடவேயில்லை. ஆக, திரும்பத் திரும்ப வரும் இந்த அழிச்சாட்டியங்களுக்;கான ஒரு தவறு தமிழர் அரசியலில் ஆரம்ப காலம்தொட்டு இருந்து வந்திருப்பதைய...