Posts

Showing posts from April, 2022

சாந்தனின் ‘சித்தன் சரித’த்தை முன்வைத்து ----

Image
    ‘கதையென்ற சொல்லாடல் தமிழில் புனைவு என்பதாகவே காலங்காலமாய் வழங்கப்பட்டு வருகிறது’ என சீனிவாசன் நடராஜனின் ‘தாளடி’ நாவல் முன்னுரையில் மாலன் மிகச் சரியாகக் குறிப்பிடும் வரியோடு இந்த மதிப்புரையைத் தொடக்குவது சிறப்பு. புனைவு என்பதற்குரிய சங்கத் தமிழ்ச் சொல்லாய் ‘பொய்மொழி’ என்பதை புறநானூற்றிலிருந்து   தருகிறார் அவர். இம் முன்னெடுப்பு காலச்சுவடு வெளியீடாக 2021இல் வெளிவந்த சாந்தனின் ‘சித்தன் சரித’த்தின்   கணிப்பீட்டிற்கு அவசியமாகும் விதத்தை இவ்வுரையீட்டின் இறுதியில் வாசகரால் புரியமுடியுமென நம்புகிறேன். பெரும்பாலும் மனிதக் கரம் படும் எந்தக் கலையிலும் புனைவேறிவிடுமென்று சொல்லப்படுவதுண்டு. எந்தக் கலையுமே ‘போல’ செய்வதான பிரதியாக்கமில்லை.   போலச் செய்வதில் கலைஞனுக்கு இடமில்லாதவரையில் கலைத்துவம் சேர்வது எங்ஙனம்? அதனால்தான் எந்தக் கலையிலும் புனைவுண்டு எனப்படுகிறது. நவீன இலக்கியங்களான சிறுகதை நாவல்கள் புனைவின் அதிகபட்ச உச்சம் தொடுபவை. நாவல்களில் சுயவரலாற்றுப் பாங்கு (Auto biographical Novel), ஆவணப் பாங்கு (Documentary Novel) என்ற வகைமைகளை இலக்கிய விமர்சனம் முன்மொழிகிறது. அவற்றிலும்தான் பு