Posts

Showing posts from July, 2015

உண்மையைத் தேடுதல்…:2

உண்மையைத் தேடுதல்… Bhopal: A Prayer for Rain (போபால்: ஒரு மழைக்கான பிரார்த்தனை) போன வாரத்தில் ஒருநாள் முன்னதாக அறிய வந்திராத ‘போபால்: ஒரு மழைக்கான பிரார்த்தனை’ என்ற ஒரு வரலாற்றுப் புனைவு வகைச் சினிமாவை எதிர்பாராதவிதமாக பார்க்கிற சந்தர்ப்பமொன்று எனக்கு நேர்ந்தது. விருப்பத்தோடுதான் பார்க்கச் சென்றிருந்தேன். அந்த பெயரின் ஆதர்~ம், அந்தச் சினிமாவில் சம்பந்தப்பட்டிருந்த இந்தியக் கலைஞர்களின் ஆற்றல்பற்றிய முன்னறிகை, ஏனைய உலகக் கலைஞர்களின் பங்களிப்புகள் யாவும் அந்த விருப்பத்தை என்னில் ஏற்படுத்தியிருந்தன. அன்றைய எனது இரவின் பெரும்பொழுதையும் தூக்கமற்று கலங்கியிருக்கும்படி செய்துவிட்டது சினிமா. இந்தியாவின் மத்தியபிரதேசத்திலுள்ள போபால் என்ற இடத்தில் 1984 மார்கழி 2ம் மற்றும் 3ம் திகதிகளில் யூனியன் கார்பைட்டின் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவினால், அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் மரணம்பற்றியதும், இற்றையவரை ஒன்றரை லட்சம் மக்கள்வரை பாதிக்கப்பட்டிருப்பது பற்றியதுமான சினிமா அது. அச் சம்பவம் நடந்தபோது நான் இந்தியாவில் நின்றிர

மதிப்புரை: ‘விலங்கில்லா அடிமைகள்’

செ.கணேசலிங்கனின் ‘விலங்கில்லா அடிமைகள்’ சமுதாய விமர்சன நாவல் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியத்தை டாக்டர் நா.சுப்பிரமணியன் பகுத்த காலவாரிப்படி, அதன் சமுதாய விமர்சன காலத்தில்-1956ம் ஆண்டளவில்- பலரது கவனத்தையும் கவர்ந்த எழுத்தாளராக வளர்ந்த செ.கணேசலிங்கனனின் அண்மையில் வெளிவந்திருக்கும் சமூக நாவல் இது. சமகால வரலாற்றுப் புதினம் என்ற முத்திரையுடன் இது வெளிவந்திருப்பினும், இது சமூக நாவல்தான். சமகால வரலாறு என்பது Contemporary  history  என்ற ஆங்கிலப் பதத்தின் நேரடி மொழியாக்கமே. ஆயினும், ‘சமூக நாவல் என்று நாம் மேலெழுந்தவாரியாகக் கூறும் நாவல் வகையானது உண்மையில் சமகால வரலாற்று நாவலாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் வரலாறு என்பது சமூக ஆய்வை ஆதாரமாகக்கொண்டது. ஒரு  குறிப்பிட்ட காலத்து சமூக நிலைமையின் பிரத்தியேகமான பண்புகளுக்கமைய பாத்திரங்களைக் கண்டறிந்து படைப்பவனே சமூகநாவல் ஆக்குகிறான். அதாவது சமகால வரலாற்றின் தன்மைகள் சிலவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கிறான்’ என்று க.கைலாசபதி கூறுவதிலிருந்து சமகால வரலாற்றுப் புதினம் என்றாலே சமூக நாவல்தான் என்பது பெறப்படுகிறது. நாவல், பிரச்சினைகள் மலிந்த இலங்கையின்

புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்:

  புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு (இது அக்டோபர் 06 2012இல் தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்ற கருத்திலான இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாள் நிகழ்வின் முதல் அமர்வில் வாசிக்கப்பட்ட உரைக்கட்டு. இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன்.) பகுதி ஒன்று புலம்பெயர் இலக்கியம் என்ற விடயத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் , சிங்கள , ஆங்கில இலக்கியம் என்ற கூறுகளும் , ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பில் ஈழத்து தமிழ் , சிங்கள , முஸ்லிம் , மலையக இலக்கியம் என்ற கூறுகளும் இத் தலைப்பிலான ஓர் உரைக்கட்டில் தலையிடும் தவிர்க்கமுடியாமை இயல்பாகவே எழும். அவ்வாறு அது எழுந்தாக வேண்டும். அதுவே சரியான பார்வையாக இருக்க முடியும்.          புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு   நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற