Posts

Showing posts from May, 2024

காத்திருப்பின் புதிர்வட்டம் (சிறுகதை)

                                                                                                                                     கூடிருந்த மரத்தையும், மரமிருந்த நிலத்தையும் குருவி நிரந்தரமாய் விட்டகன்றதுபோல், அவர் நாடு நீங்கிப்போய் நீண்ட காலம். ஒருமுறை வந்து தன் நிலம் பார்த்துப்போக அத்தனை காலத்தில் அவர் எண்ணியதில்லை. அதில் ஏதோ அவருக்குத் தடையிருக்கிறது. இப்போது ஓய்ந்துபோயிருக்கிறார். உடலாலும் மனத்தாலும் அந்தச் சோர்வு அவரில் இறுகி விழுந்திருக்கிறது. அவரது தனிச் சோபா அந்த இரண்டு பாரங்களையும் சேர்த்து தாங்கிக்கொண்டிருக்கிறது. அப்போது மனத்துள் அவர் வாழ்ந்துகொண்டிருப்பது தன் இறந்த காலத்தின் ஞாபகங்களைத்தான். பவானந்தன் அதை அறிவான்.   அவரது சொல்லிலும், அவரது அனுக்கங்களின் ஒலியிலுமாய் பெரும்பாலும் அவர் சோகம் முழுதும் அவன் அறிந்துகொண்டிருக்கிறான். எனினும் அவர் கதையில் அவன் விளங்காத மிகப்பெரும் கூறும் இருந்தது. இன்னும் சில நாட்களில் தன் நாடு செல்லவிருக்கும் பயணத்தில் அவன் அதை விளங்கிக்கொள்ள முந்;திய பயணத்தைப்போலவே முயல்வான். அது அவனுக்கு அவசியமாயிருக்கிறது. ஒரு கதையின் ரகசியக் கூற