Posts

சே குவேரா: ஒரு வரலாற்றுச் சோகம்

சே குவேரா: ஒரு வரலாற்றுச் சோகம் கடந்த இரண்டாயிரமாண்டுச் சரித்திரம் பல்வேறு புதைபொருள் ஆய்வுகள், மற்றும் நவீன அறிவியல் ரீதியிலான அறிமுறைகளால் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றிலிருந்து எமக்கு இக்காலகட்டத்திய அண்ணளவான வரலாறு கிடைத்திருப்பதாகச் சொல்ல முடியும். இதன் உண்மைத் தன்மை சந்தேகத்துக்கு உரியதாயினும், சொல்லப்பட்ட அந்த வரலாற்றினடியாகவே இச் சந்தேகங்கள் தோற்றமெடுக்கின்றன என்பதும் கவனம் கொள்ளப்படவேண்டும். உண்மையின் தவிர்க்கவியலா அழுத்தம் காரணமாய் இவ்வரலாறுகள் மாற்றியெழுதப்பட்டும் வருகின்றன. இல்லையெனில் மாற்றுவரலாறாய் விஸ்வரூபமெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த வரலாறு முழுக்க அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிற நன்மைகளும், நல்லவர்களும் அழிக்கப்பட்ட சோகங்கள்தான் விரவிக்கிடக்கின்றன. வரலாறு அறிந்துள்ள முதல் புரட்சியாளன் யேசுநாதர்தான். அந்த மரிப்பு – கொலைப்பாடு – தாங்கொணாத் துக்கம். கொடுமையின் உச்சம். அதைச் சினிமா மொழியில் வெளிக்கொண்டுவந்தது ‘THE PASSION OF CHRIST’. மனித இனம் இன்றும் யேசுநாதர் சிலுவையையே கடவுளாய் வணங்கி ஆன்ம வேதனை தணிகிறது. அன்றைய கத்தோலிக்க மதத்துக்க...

என் நினைவில் சுஜாதா

என் நினைவில் சுஜாதா ஆண்டுத் தொடக்கத்தில் அந்த மரிப்பு நிகழ்ந்தது. திரு. சுஜாதாவின் மறைவை முதன்முதல் கேள்விப்பட்டபோது அதிர்ச்சிதான் அடைந்தேன். ஆனாலும் மெல்ல அந்த நினைப்பு மனத்தைவிட்டு அகன்று அகன்று போய்க்கொண்டிருந்துவிட்டது. அவரது ஞாபகங்களைப் பதிவாக்கவேண்டுமென்ற எண்ணம் பெரிதாக என்னை அலைக்கழிக்கவில்லை. சுஜாதா மறைந்து இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. உயிர்மை, காலச்சுவடு இதழ்கள் அவருக்கான நினைவுப் பக்கங்களையும் வெளியிட்டுவிட்டன. இன்னும் ஆனந்தவிகடன் போன்ற வாராந்தரிகளில் அவர்பற்றிய ஞாபகங்கள் அவ்வப்போது பகிரப்படுவதோடு, அவரது எழுத்துக்களும் ஒரு தேர்வில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இப்போது பார்த்து எனக்கு இப்படியொரு தவிப்பு எழுந்திருக்கிறது. சிலவேளைகளில் மனத்துக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நினைவுகளை ஒன்றுதிரட்டிப் பார்க்கும்போது திடுக்கிடும்படியாய் ஆகிவிடுகிறதுதான். சிலரது ஞாபகங்களும் அப்படியே. நம்மோடு மிகநெருக்கமில்லையென்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒருவகையில் அவர்களுடனான பழக்கம் ஆழமாக இருந்திருப்பதை எண்ணி வியக்கின்ற தருணம் வாழ்க்கையில் எப்போதாவது ஒருவருக்கு ஏற்படவ...

இயல் விருது

இயல் விருது 1. எந்தப் பரிசின் பின்னணியிலும் ஒரு அதிகார நுண்ணரசியல் உள்ளூர ஓடியிருக்கும் என்பது சரியான வார்த்தைதான். மிகப்பெரும் இலக்கியப் பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கலின் பின்னணியிலும், அதன் தெள்ளத் தெளிவான நுண்ணரசியலின் வெளிப்பாட்டை ஒருவரால் உணர முடியும். பல்வேறு தருணங்களிலும் கம்யூனிச நாடுகளாயின் அவ்வரசியல் கட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் நாடுகளாயின் இஸ்லாத்தின் இறுகிய சமூக அரசியல் தீவிரப் போக்குகளை மறுதலித்தும் எழுந்த இலக்கிய மயப்படுத்தப்பட்ட எழுத்துக்களே பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இவ் அமைப்பின் 1901ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்துவரும் நூற்றாண்டுக் கால வரலாறு தெரிவித்து நிற்கின்றது. புலிச்சர் (Pulitzer ), புக்கர், க்ரொஸ் வேர்ட் என்பவை மட்டுமல்லாது, கனடாவின் அதிகூடிய பரிசுத் தொகையை (ஒரு லட்சம் கனடா டொலர், தேர்வு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை) பிரெஞ்சுமொழியில் படைக்கும் எழுத்தாளருக்கு அவரின் வாழ்நாள் சாதனையை முன்வைத்து வழங்கும் கில்-கொர்பெய்(Gilles- Corbei) விருது, இருபத்தையாயிரம் டொலர்களை ஆண்டுதோறும் அவ்வாண்டின் சிறந்த ஆங்கில இலக...

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

கொழும்பு வந்து ஒரு மாதத்தின் பின் யாழ்ப்பாணம் சென்றேன். புதுவை இரத்தினதுரையின் 'உலைக்களம்' நூல் வெளியீடு அப்போதுதான் நடந்தது. கலாநிதி கைலாசபதி அரங்கில் நடைபெற்ற அக் கூட்டத்திற்கு நிறைந்த சனம். அது ஓர் இலக்கிய விழாவாக மட்டும் நடக்கவில்லையென்று இரு சில இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் முணுமுணுத்தனர். விழாவின் முற்பகுதி அரசியல் சார்ந்தும் , பிற்பகுதி நூல் வெளியீடு , மதிப்புரைப் பகுதியாக நடந்தது என்பதும் சரிதான். ஆனால் ஏன் அப்படி நடக்கக் கூடாது என்று கேட்டபோது நண்பர்களிடம் பதில் இருக்கவில்லை. புதிய காலங்களில் அமையும் புதிய களங்கள் முந்திய காலங்களின் பெறுமானங்களால் அளக்கப்படுவது சாத்திய மில்லையென நான் சொன்னபோது நண்பர்கள் பேசாமலிருந்தனர். யோசிப்பார்களென அப்போது தோன்றிற்று. உலைக்களம் நூலை வாசிக்கப் பெரு விருப்போடு இருக்கிறேன். வாழ்வின் ஓடும் அவசரங்களுள் எப்பவோ ஓரிரு முறை 'எரிமலை'யில் உலைக்களம் வாசித்த நினைப்பு. வீச்சான அதன் வரிகளால் ஞாபகமாயே இருக்கிறது. நூலை வாசித்தால் விமர்சிக்கத் தடையிருக்காது. அதுவரை நூல் விமர்சனம் கூடாது. ஆனால் பின்னால் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெள...

இரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......

இம் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி ஆறாம் தேதி வரை ஐந்து நாட்கள்  கொழும்பிலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன உலக இந்து மகாநாட்டின் நிகழ்வுகள். முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதியும் , பிரதமரும் பங்கேற்றிருந்தனர். இரண்டாம் நாள் பகலில் ஆய்வு அமர்வுகள் நடைபெற பல இடங்களிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. மாலையில் கலை கலாச்சார நிகழ்வுகள். ஞாயிறு மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை கலை கலாச்சார நிகழ்வுகளுக்கான மேடை காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டிருந்தது. கடல் போல் நிறைந்திருந்தது கூட்டம். சமுத்திர ஓங்கார ஓசையை அடக்கி எழுந்துகொண்டிருந்தன, சுவர் போல் அமைக்கப்பட்டிருந்த மேடையின் இருபுறத்து ஒலிபெருக்கிகளின் ஊடாக நிகழ்ச்சிகளின் ஒலிப்பு. இரு திரைகளில் தூர இருப்போருக்கான வீடியோ படப்பிடிப்பு நகர்ந்துகொண்டிருந்தது. திங்கள் மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபம் சென்றேன். வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி எங்குமே 'ஓம் நமசிவாய' என்ற  ஐந்தெழுத்து மந்திரம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. மனதை ஏதோ செய்து பரவசமாக்கிற்று. மகாநாட்டின் பூரண வெற்றியை அறிவி...

இரண்டாம் புலப் பெயர்ச்சி

மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கிக்கொண்டு அகதியாய் ஓடியவர்கள்தாம் நாம். ஆனாலும் அந்த மண் இந்த வேர்களுக்கும் ஒத்துப் போக அங்கு பெரிய பிரச்சனைகளற்ற ஒரு வாழ்வு எங்களுக்குச் சித்தித்தது. யுத்தமும் மேற்குலகும் சம ஈர்ப்புச் செய்த வேளையில் ஒரு போராட்டமே நடத்தி எங்குமில்லாமல் இந்திய மண்ணிலேயே தங்க முடிந்தது. அதில் நிறைய காயங்கள் பட்டிருந்தேன். தழும்புகளை விழுப்புண்களாய் நிச்சயமாக நான் மட்டுமாவது மதிக்கவே செய்வேன். கவலைப்பட்டு சில காரியங்களை நான் மட்டுமாவது செய்யாமலிருக்கவேண்டும்தான். இரண்டு தசாப்தங்கள் எப்படிக் கடந்தன? ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன்? என் படைப்பின் உந்து விசைகள் என்னை அங்கு அடையாளப்படுத்தின. அந்த படைப்பாற்றல் இன்னும் க்ஷீணமடையவில்லை. என் சாதனைகள் குறித்து எப்போதும் எனக்கு கரிசனமுண்டு. காலம் நாளை அதைச் செய்யும்போது புறவுலகம் அறியட்டும். எவ்வளவு இலக்கிய நண்பர்கள்! எவ்வளவு இலக்கிய ஆர்வலர்கள்! எவ்வளவு வாசகர்கள்! தாயகத்திலிருந்து ஓடியபோதுகூட பெரிய வலி தெரியவில்லை என்பது சத்தியமான வார்த்தை. பின்னர் மெல்ல வலி ச...

நிமிர்ந்தே திரிந்தவர்

சென்ற மாதம் சு.சமுத்திரமவர்கள் ஒரு கார் விபத்தில் காலமானார் என்ற செய்தி எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஓர் இழப்பின் பாரிய தாக்கம். 'கடிதோச்சி மெல்ல எறி'கிற நண்பராக இருந்தார் அவர். அவர் எழுத்தாளராகவும் இருந்தார். அவருடனான என் அறிமுகம் ஒரு கலகத்திலேதான் ஆரம்பித்தது. எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் வைரவிழா நிகழ்வில் அவரது நாவல்கள் பற்றி மதிப்பிட்டு கட்டுரை வாசித்த நான் , இடதுசாரி எழுத்தாளர்களின் நூல்களை என் தேர்வில் சேர்த்துக்கொள்ளவில்லையென ஓங்கிக் குரலெடுத்தார் அவர். சேர்ப்பதும் சேர்க்காததும் என் வாசிப்புச் சார்ந்த சுதந்திரங்களென நான் வாதாட அடங்கி என் நண்பரானவர். 'தேவகாந்தனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு சண்டையில் ஆரம்பித்தது' என்று எல்லோரிடமும்லொரு குழந்தைபோல் சொல்லிக்கொண்டிருந்தார். உயர்ந்த, சற்று தடித்த, உடல்ரீதியான தாக்குதலுக்கும் தயங்காதவர்போல் எப்போதும் நிமிர்ந்தே திரிந்த அவர் இப்போது இல்லை. ஓர் வீறு தமிழிலக்கையத்தில் எங்கோ அழிந்துபோனதுபோல் உணர்கிறேன். கொடிது கொடிது , மரணம் கொடிது. 000