Posts

மதிப்புரை:விமர்சனத் தமிழ்

விமர்சனத் தமிழ் தி.க.சி. 1959-92 காலப் பகுதியில் தி.க.சி. அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய முப்பாத்தாறு கட்டுரைகளின் தொகுப்பு  இது. மாநாடுகளில், கருத்தரங்குகளில் வாசித்து பத்திரிகைகளிலும், நூல்களிலும் இடம்பெற்ற ஆய்வுரைகளும் இதில் அடங்கும். நூல் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது. அப்படி அது பேசவேண்டும். சுமார் கால் நூற்றாண்டுக் காலத்திய பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள், வேறுவேறு இலக்கியப் போக்குகள், இலக்கியவாதிகளின் மறைவுகள் யாவும் சமகால விமர்சகனின் பார்வையில் பட்டு தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்கக்கூடியதல்ல. செஸ்டார்டன் குறிப்பிட்ட ‘Good bad literature’ என்ற எழுத்துவகைகளையும், இன்னும் கீழ்த்தர எழுத்துக்களையும் நோக்கி தீவிரமான எதிர்ப்புக் கணைகளைச் செலுத்தும் தி.க.சி.யை நூலின் முற்பகுதிக் கட்டுரைகளில் காணமுடிகிறது. தி.மு.க.வின் பிரிவினை வாதம், அதன் இலக்கியப் போக்குகளுக்கு எதிராக காரமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார் ஆசிரியர். ‘அறிஞர்-கலைஞர் கூட்டம் சிருஷ்டித்த இலக்கியங்கள் அனைத்தும் நச்சு இலக்கியங்களே’(பக்:35). ‘வேலைக்காரி’ சினிமாவுக்காக அண்ணா கல்கியில் பாராட்டப் பெற்றதைக்கூட கண...

முதல் பிரசவம்:

முதல் பிரசவம் 1968 ம் ஆண்டு ‘ செய்தி ’ வார இதழில் வெளிவந்த ‘ குருடர்கள் ’ தான் எனது முதல் சிறுகதை . அப்போது எனக்கு வயது 21. வாழையடி வாழையாகத் தொடர்ந்த ஒரு பண்டித மரபில் வந்திருந்ததனால்போலும் பதினைந்து வயதுக்குள்ளாகவே சங்க இலக்கியங்களுடனான பரிச்சயமும் , ஈழத்து செய்யுள் இலக்கியங்களின் வாசிப்பும் எனக்குச் சித்தித்துவிட்டன . பாலைக்கலி முழுவதையும் அந்த வயதிலேயே படித்திருந்தேன் . நன்னூல் பெரும்பகுதியும் மனப்பாடமாயிருந்தது . தக்க ஓர் ஆசானுக்காக நான் காத்திருந்த காலமாக அதைச் சொல்லலாம் . புதுமைப்பித்தனையும் , ஜெயகாந்தனையும் , ஜானகிராமனையும் கல்லூரிப் பாடத் திட்டத்துக்கான தமிழிலக்கிய வரலாற்றில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு புதுமைப்பித்தனின் ‘ காஞ்சனை ’, ‘ ஆண்மை ’ போன்றனவற்றின் வாசிப்பு எதிர்பாராதவிதமாத்தான் ஏற்பட்டது . நான் அதுவரை அறியாத யதார்த்த உலகத்தின் திறவாக அது   இருந்தது . பழந்தமிழ் இலக்கியத்தின் சுவடு கண்டு , சத்தியம் , அன்பு , அகிம்சைபற்றிப்   பேசிய நாவல்களின்   ஒருவகைக் கற்பனோலயத்திலிருந்த என்னை அ...

மதிப்புரை:: ‘மக்கத்துச் சால்வை’

Image
   எஸ்.எல்.எம்.ஹனீபாவின்  ‘மக்கத்துச் சால்வை’ 1967 தொடங்கி 1991வரை பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பதினைந்து சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நூலாகத் தந்திருக்கிறார் அதன் ஆசிரியர் எஸ்.எல்.எம்.ஹனீபா. 1992இல் வெளிவந்திருக்கும் இந்நூல் ஈழத்தில் வெளியான சிறுகதைத் தொகுதிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒன்றென துணிந்து கூறலாம். ‘மக்கத்துச் சால்வை’ என்பது ஈழத்து வட்டாரச் சொல். மட்டக்கிளப்பில் முஸ்லீம் மக்களிடையே வழக்கில் இருக்கிறது. இந்த தொகுப்பிலுள்ள ஒரு கதையின் தலைப்பையே நூலின் தலைப்பாக இட்டிருக்கிறார் ஆசிரியர். ‘இந்தப் பெயர் என் மரபையும் சம்பிரதாயங்களையும் பேணுவதாக அமையும்’ என்பதால் ஆசிரியர் நூற்பெயருக்கான சிறுகதையைத் தெரிந்திருப்பாரானால், அதுபற்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் ‘மக்கத்துச் சால்வை’யை விட ‘வேலி’, ‘சலனம்’, ‘மருமக்கள்’, ‘நாயம்’, ‘மருத்துவம்’ போன்ற கதைகள் கலைநேர்த்தியும், சமுதாயப் பார்வைத் தீட்சண்யமும்  கூடியவை என்பதும், தலைப்புக்கதையாகச் சிறக்கக்கூடியவை என்பதுமே என்னளவிலான முடிவு. தமிழகத்தின் சிறந்த திறனாய்வாளர்களில் ஒருவரான தி.க.சி. பா...

‘சாதலின் இன்னாதது இல்லை’

Image
எஸ்பொவின் மரணம்  நண்பனாயும் இலக்கியவாதியாகவும்  பெரிய இழப்பு இம் மாதம் இருபத்தாறாம் தேதி மாலையில், வடமாகாணத்தைப் பிறப்பிடமாகவும் கிழக்குமாகாணத்தை வாழிடமாகவும் கொண்டிருந்து அவுஸ்ரேலிய குடிமகனாகியிருந்த எஸ்பொ என பரவலாகத் தெரியவந்திருந்த எஸ்.பொன்னுத்துரையின் மரணம் சிட்னி மருத்துவமனையில் நிகழ்ந்தது. அவுஸ்திரேலியாவில் சிட்னி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தபோதே அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததாக செய்திகள் வந்திருந்தன. அதனால் அவரது மரணம் ஒருவகையில் பேரதிர்ச்சியைத் தந்ததாய் இல்;லாவிடினும், ஒருபெரும் இழப்பை அது ஓங்கி அறைந்துகொண்டு நிற்கிறது. அதுவே ஒரு அதிர்ச்சியாகத்தான் தோன்றுகிறது. 1932இல் பிறந்த எஸ்.பொன்னுத்துரை ஆரம்பகாலத்தில் யாழ். புனித பற்றிக்ஸிலும், பின் பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியிலும் தனது கல்வியைத் தொடர்ந்து  பி.ஏ. படிப்பை முடித்தார். தொடர்ந்து அவர் ஆசிரிய நியமனம்பெற்று கடமையாற்றிய இடம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்கிளப்பு.   அதனால்தான் எனது ஆசிரியர் என்று காசிஆனந்தனிலிருந்து எஸ்.எல்.எம்.ஹனீபாவரை பலரும் போற்றுகின்ற நிலையை அவர் எய்தினார். அ...

கனவுச் சிறை நாவல் பற்றிய வெளியீட்டுத் தகவல்

Image
புத்தாண்டின் முதல் மாதத்து 3ஆம் தேதி ( 01.03.2015) சனிக்கிழமை மாலை ஆறு மணியளவில் அண்ணாசாலையிலுள்ள ஜி.உமாபதி கலையரங்கத்தில் காலச்சுவடு வெளியிட்டுள்ள எனது நாவலான ‘கனவுச்சிறை’யின் வெளியீடு ஏனைய  படைப்பாளிகளின்  ஆறு புனைவு நூல்களின் வெளியீட்டோடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஓவியர் கருணாவின் அட்டை வடிவமைப்பில் நூல் அழகாக வெளிவந்திருக்கிறது. தயாரிப்பும் மிக அருமை. ஏற்கனவே நூல்பற்றி தேவிபாரதி, மெலிஞ்சிமுத்தன், இளங்கோ டி சே , மற்றும் அ .இரவி  போன்றோர்  தம் கருத்துக்களை பதிவேற்றியிருக்கிறார்கள். நாவலுக்கு தேவிபாரதி எழுதிய முன்னுரையின் பகுதிகள் சில இம்மாத 'காலச்சுவடு' இதழில் வெளிவந்திருக்கின்றன. நீண்ட கால காத்திருப்பின் பின் வெளிவந்திருக்கும் இந்நாவல் 09 தை 2015 ல் தொடங்கவிருக்கும் சென்னை 38 வது புத்தகக் கண்காட்சியில் தன் மாபெரும் கலா உத்திகளோடு ஈழ அரசியலின் நுண்மையைப் பேசும் நூலாக முன்வருகிறது.

இலக்கியச் சந்திப்பு 3 ‘காலம்’ செல்வம் அருளானந்தம்

இலக்கியகாரனாக இருப்பது வரமா சாபமா என்று தெரியாமல் ஒரு விடயம் நடந்துகொண்டே இருக்கிறது எழுத்து: கௌசலா சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன் 1. புலம்பெயர்வதற்கு முன்னால் ஈழத்தில் உங்கள் இலக்கிய ஆர்வங்கள், ஈடுபாடுகள் எவ்வாறு இருந்தன, இலக்கியம் தவிர்ந்து பிற கலையார்வங்களுக்குக் காரணமாயிருந்தவை எவை என்பதிலிருந்து இந்த நேர்காணலை நாம் ஆரம்பிக்கலாம். முதலாவது இந்த நேர்காணலில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது.  ஏனென்றால் இதுவரை நாம் எதைச் சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி முன்னால் வந்து ஒரு இடைவெளியாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் நட்பார்ந்த நிலையில் அதை மறுக்கவும் முடியாது. இதுதான் என்னுடைய முதலாவது நேர்காணலாக இருக்கிறது. ஈழத்தில் இருக்கும்போது நான் ஒரு வாசகன் மட்டும்தான். வாசகன் என்று சொல்லப்போனால் தீவிரமான வாசகன் என்றும் சொல்வதற்கில்லை. வாசிக்கும் சூழ்நிலை வீட்டில் இருந்தது. அம்மா ஒரு பெரிய வாசகி. அதனால் வழமைபோல கல்கி, சாண்டில்யன், அகிலன், குமுதம், ஆனந்தவிகடன், ஈழத்தில சுதந்திரன், சுடர், வீரகேசரி இப்படியான சஞ்சிகைகளை வாசிக்கும் ஒரு சராசரி வாசகனாகவே இருந்தேன்.  நான் ஒரு கத்தோ...