Posts

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

Image
விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். ஒன்பது நாவல்கள் உட்பட பதினேழு நூல்களின் படைப்பாளி. அவரது நண்பரும் முதுகலை மாணவருமான அரவிந்த (தமிழ்நாடு) னின் மின்னூல் மூலமான கேள்விகளுக்கு அளித்த நேர்காணல் இது.) கேள்வி 1: தமிழின் முக்கியமான ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டுள்ளீர்கள். இந்நிலையில் அண்மையில் உங்கள் 'கலிங்கு' நாவல் வெளிவந்திருக்கிறது. வடிவம், உள்ளடக்கம், அதன் சமூகச் செயற்பாடுகள் சார்ந்து நவீன நாவலின்மேல் காத்திரமான கேள்விகள் உருவாகியுள்ள இன்றைய நிலையில், பொதுவாக நாவல்களைப் பற்றியும் குறிப்பாக உங்களது முக்கியமான நாவல்கள்பற்றியுமே இந்நேர்காணலில் முக்கியப்படுத்த எண்ணியிருக்கிறோம். உங்களது முக்கியமான நாவல்கள்பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் முதல் நாவல்பற்றிய எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா? பதில்: இந்த வித்தியாசமான ஆரம்பம் எனக்குப் பிடித்திருக்கிறது. பள்ளியில் வினாக்களுக்கான விடையெழுதுதல், தமிழ்ப் பாடத்தில் கட்டுரை மற்றும் சுருக்கம் எழுதுதல...

கனடாவில் இலக்கியச் சஞ்சிகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…

பிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்கிறது. தான் அலைவுற்ற வழிநெடுகிலும் கண்ட துன்ப துயரங்களின் வடிகாலாக அது எழுத்தையே கதியென நினைக்கிறது. பிறந்த நாட்டில் இனவழிப்பு மூர்க்கமாகச் செயற்படுத்தப்படும்போது உயிரபயம் கேட்டுவரும் அச் சமூகம், குடிபுகுந்த மண்ணில் தம் வாழ்விருப்பை உறுதிப்படுத்தும் அவசியம் நேர்கிறபோது அது தனக்கான ஒரு அரசியலையும், அதற்கான கருத்துநிலைகளையும், சமூக கட்டமைப்புக்கான வழிமுறைகளையும் எழுத்தின்மூலமே வகுத்துக்கொள்வதுதான் காலகாலமாக புலம்பெயர் சமூகங்களின் செயற்பாடாக இருந்து வந்திருக்கிறது. அது தன்னை உரசிப் பார்க்க ஒரு தளம் வேண்டியிருக்கிறது. அது எழுத்தூடகமான பத்திரிகைகள், சஞ்சிகைகளாக இருக்கிறது. அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் தம்மிருப்பை எழுத்தூடகமான பத்திரிகை சஞ்சிகைகளில் அது பயில்வு செய்யும்போது, பத்திரிகை சஞ்சிகைகளுக்கு  சொந்த மண்ணிலிருந்த பொறுப்பையும் தேவையையும்விட மிகக்கூடுதலான பங்காற்றுவது தவிர்க்கமுடியாதது. இலங்கைத் தமிழ் மக்களின் புலப்பெயர்வு 1983இன்...

மனம்

‘நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தான்?’ விடை தேடிக்கொண்டு ஏற்கனவே கிடந்த கேள்விகளோடு, அப்போது இன்னொரு கேள்வியும் இராஜலிங்கத்தின் மனத்துள் சேர்ந்துகொண்டது. ‘அதெல்லாம் கள்ளக் கூட்டம். கறுவல்களோடெல்லாம் சேர்ந்து நீ இனிமேல் விளையாடப் போகவேண்டாம்’ என மகன் அனூஷனுக்கு கண்டிப்புச் சொன்ன ஆனந்தி, கூடத்துள்ளிருந்து எல்லாம் கண்டுகொண்டிருந்த தந்தையிடம் திரும்பி, ‘பாத்தியளேயப்பா, அதுகள் செய்த வேலையை? நாளைக்கு ஸ்கூலுக்குப் போய் இதைப்பற்றி கொம்பிளெய்ன் பண்ணியிட்டு வந்திடுங்கோ. எல்லாத்தையும் இப்பிடியே சும்மா விட்டிடேலாது’ என்றுவிட்டு மேலே போய்விட்டாள். மூன்று நாட்களுக்கு முதல் பள்ளி லொக்கரில் வைத்த அனூஷனின் ஜாக்கெற் அன்றைக்கு திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியை அவள் கொஞ்சம்கூட பட்டுக்கொள்ளவில்லையென அவருக்குத் தெரிந்தது. அதில் சிறிது நியாயமிருப்பதாக இராஜலிங்கம் எண்ணினார். அந்த ஆண்டில்மட்டும் அனூஷனின் இரண்டு ஜாக்கெற்றுக்கள் காணாமல் போயிருக்கின்றன. திரும்பக் கிடைத்திருந்தாலும் அது மூன்றாவது சம்பவம். அனூஷனுக்கு இட்ட கட்டளையின் பின்னாலிருந்த ஆனந்தியின் தீர்மானத்தையா அவரும் அது விஷயத்தில் கொண்டுவிடப் ...

வாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…-தேவகாந்தன்-

Image
2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில்லை, இதை வாசிக்க ஆரம்பித்தபொழுதில். அது பழக்கமும் இல்லை. வாசித்து முடிந்த பிறகு எழுத மனம் உந்தினால்தான் உண்டு. சீனிவசன் நடராசனின் ‘விடம்பன’த்தை இரண்டரைத் தடவையாக வாசித்த பிறகு இன்றைக்கு எழுத மனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை வாசித்து மூடிவைத்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழிய புத்தகத்தை தொடர முயன்றபோது முடியாமல்போனது. பக்கங்களை பின்னோக்கி நகர்த்தியபோதும் தொடுப்பை பிடிக்க முடியவில்லை. மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் அலுப்புத் தோன்றவில்லை. புதியதான தோற்றம். அது மீண்டும் மீண்டும் தன் ரகசியங்களைக் கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தது. சுகம் எச்சமாய் வந்தது. அதுவே இப்பிரதியின் அறுதியான பலன். ‘விடம்பன’த்துக்கு அடையாளமொன்று தேவைதான். அவ்வகையில் இதை நாவலென்று கொள்ளமுடியும். இதன் முன்னுரையில் சுகுமாரன் வகைப்படுத்துவதுபோல் picaresque வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். Picaresque வகையினத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றிரண்டு பண்புகளையே அது இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்...

சுகுமாரன்: கவிதையின் இரு தளங்களிலான பயணத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமை

Image
- தேவகாந்தன் - 1. ‘ தினமணி கதி ’ ரில் எழுதத் தொடங்கிய காலத்தில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் மூலமாக தொடர்பேற்பட்ட முக்கியமான நண்பர்களில் ஒருவர் ராஜமார்த்தாண்டன் . எனக்கும் அவருக்குமிடையில் இணைவான பழக்கங்களும் , இலக்கிய ஆர்வங்களும் இருந்தவகையில் அந்தத் தொடர்பு மேலும் விரிவு கண்டது . ராயப்பேட்டை நாகராஜ் மேன்சனில் ராஜமார்த்தாண்டன் தங்கியிருந்த காலப் பகுதியில் , அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் சந்திப்பதாக அது வளர்ந்திருந்தது . கும்பகோணத்தில் நடைபெற்ற நிறப்பிரிகை சார்பான புதுமைப்பித்தன் கருத்தரங்கில் இருவரும் ஒன்றாகவே சென்று நிகழ்வில் கலந்துகொண்டிருந்தோம் . இவை இன்னொரு நெருங்கிய வட்டத்தில் எம்மை இழுத்திருந்தன . அக்காலத்தில் ராஜமார்த்தாண்டன் மூலமாக அவரது நண்பராக எனக்கு அறிமுகமான பெயர்தான் கவிஞர் சுகுமாரன் . சில ஞாயிறுகளில் சுமுமாரனும் வரவிருப்பதாக ராஜமார்த்தாண்டன் சொல்லியபோதும் , என்றைக்கும் அவரை அங்கு சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை . நிறைய எழுதுகிறவரில்லை சுகுமாரன் . அவரின் எழுத்தின் ஆழங்களால் இன்னுமின்...