Posts

(கதை) அவனது தம்பி இன்னும் கீழே இறங்கவில்லை

    அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவளது தொண்டைக் குழியிலிருந்து   விடுபட்ட சொற்களில் அவன் சிதறிப்போனான். அவை நுழைந்து சென்ற செவிவழியெங்கும் பொசுங்குண்டதுபோல் இன்னும் எரி செய்துகொண்டிருந்தன. அம்மாவா சொன்னாள்? அத்தகைய வார்த்தைகள் அவளுக்கும் தெரிந்திருந்தனவா? அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் அது நடந்துதானிருந்தது. அவனுக்கே நடந்திருந்ததில் அவன் அய்மிச்சப்பட அதில் ஏதுமில்லை. அவனுக்குள் நீண்டகாலமாக ஒரு ஆசை இருந்திருந்தது. நியாயமான ஆசைதான். அதை வெளியிட ஒரு சமயம் வாய்த்தபோது அவன் தயக்கம் காட்டவில்லை; அல்லது வார்த்தைகளே அவனுள்ளிருந்து படீரென வெடித்துக் கிளம்பிவிட்டன. அது இரவுச் சாட்டின் பின்னான நேரம். அநேகமாக, விஷயங்கள் கரடுமுரடாக வந்து விழுந்தாலும், கனதிகொண்டு உறைந்திருப்பதில்லை அந்த நேரத்தில். தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருக்கும் செய்தி, சினிமா, கார்ட்டூன், சீரியலென எதுவும் அதைத் சடுதியாகவே அய்தாக்கிவிடுகிறது. நடந்தது இதுதான். கூடத்துள் அம்மா, அவனது வளர்ப்புத் தந்தை தோமா, குண்டுத் தம்பி மிஷேல், தாத்தா எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். அவரவர் காரியங்களில் கருத்தூன்றி அன...

மலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம்

Image
1 ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், அதை மரபார்ந்த வழியில்; மலையகத் தமிழிலக்கியமெனல் தகும். தேயிலைப் பரப்பின் அழகும் வளமும் கருதி மலையகப் பெண்களின் இச் சிறுகதைத் தொகுப்பையும் ஒரு பெண் படிமமாக்கி ‘மலையகா’வெனப் பெயரிட்டிருக்கிறார்கள். இருபத்துமூன்று பெண் படைப்பாளிகளின் நாற்பத்திரண்டு கதைகள் அடங்கிய இத் தொகுப்பு, அதன் தொகுப்பாகிய தேவை விதந்துரைக்கப்பட்ட அளவுக்கு, அதன் உள்ளுடன் விசாரிக்கப்படவில்லை. அது தொகுப்பின் சிறுகதைகள் சமகால இலக்கிய கட்டுமானம் சார்ந்ததும், விஷயம் சார்ந்ததுமான காத்திரத்தன்மை அற்றுள்ளதன் அடையாளமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. இலங்கைப் படைப்புகள் குறித்து விசேஷ கவனம் எனக்கு இருந்தவகையில் ஏப்ரலில் நூல் கையில் கிடைத்ததுமே வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்பில் அதன் மொழி சார்ந்ததும், கட்டுமானம் சார்...

காத்திருப்பின் புதிர்வட்டம் (சிறுகதை)

                                                                                                                                     கூடிருந்த மரத்தையும், மரமிருந்த நிலத்தையும் குருவி நிரந்தரமாய் விட்டகன்றதுபோல், அவர் நாடு நீங்கிப்போய் நீண்ட காலம். ஒருமுறை வந்து தன் நிலம் பார்த்துப்போக அத்தனை காலத்தில் அவர் எண்ணியதில்லை. அதில் ஏதோ அவருக்குத...