Posts

Showing posts from April, 2016

நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’பற்றி…

கலகம் விளைத்து வந்த நாவல்: நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’பற்றி… -தேவகாந்தன் ஈழத்து நாவல் இலக்கியம் தன்னளவிலான முயற்சிக்கும், சிந்தனைக்குமேற்ப இலக்கியப் பாதையில் முன்னேறிச் சென்றுகொண்டிருப்பினும், அது தன்மேல் பூட்டப்பட்ட விலங்குகளையும் சுமந்துகொண்டேதான் செல்கிறதென்று ஒரு விமர்சகனால் சொல்லமுடியும். இலகு யதார்த்தப் போக்கில் மூழ்கி, கருத்துநிலையால் தன்னைச் சுற்றி முன்னேற்றத்தின் சகல சாத்தியங்களையும் சிரமமாக்கிக்கொண்டேதான் அது நடந்திருக்கிறதென்பது கசப்பானதெனினும் உண்மையானது. ஆரம்ப காலங்களில் மரபு சார்ந்து நடந்த ஈழத்து தமிழ் இலக்கியம், பின்னால் முற்போக்குப் பாதையில் திரும்பிய வேளையிலும், நவீனத்துவத்துக்கான ஒரு மொழியையும் நடையையும் பார்வையையும் கண்டடைந்து தொடர்ந்துசெல்ல முடியாமற்போனமை துர்ப்பாக்கியமே. அதனுடைய முன்னேற்றமென்பது அளந்து அளந்து வைக்கப்பட்டதாக ஆயிற்று. யதார்த்தத்திற்குப் பின்னால் நவீன யதார்த்தம் தோன்றியதென்பதையோ, பின்நவீனத்துவப் போக்கு பரீட்சிக்கப்பெற்றதென்றோ, அதன் வழி இலக்கியம் மொழியால் நடத்தப்படுகிறதென்பதையோ அது இன்றைவரைக்கும் புரிந்ததாய்ச் சொல்லிவிட முடியாதே இருக

நேர்காணல்: தேவகாந்தன்- முதலாம் பகுதி

நேர்காணல் : தேவகாந்தன் சந்திப்பு : வ . ந . கிரிதரன் ( பதிவுகள் இணையதளத்துக்காக ) அதை   ஒரு   அரசியல்   சித்தாந்தமாக   மட்டும்தான்   நான்   பார்த்திருந்தேன் 1.    பதிவுகள் : வணக்கம்,   தேவகாந்தன் . அண்மையில்தான் நீங்கள் உங்களது நீண்ட பயணத்திலிருந்து   திரும்பியிருக்கின்றீர்கள் . இந்தியா , இலங்கை , இங்கிலாந்து என்று உங்களது இலக்கியப் பயணம் இனிதே முடிந்து திரும்பியிருக்கின்றீகள் .  மேற்படி நாடுகளில் உங்களது ' கனவுச்சிறை ' நாவலுக்கான வெளியீட்டு நிகழ்வுகள் , விமர்சனக் கூட்டங்கள் பல நடைபெற்றிருக்கின்றன . ' கனவுச்சிறை ' நாவல் சிறப்பான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் அறிகின்றோம் . உங்களது வெற்றிகரமான இந்த இலக்கியப்பயணத்தைப்பற்றி என்ன கருதுகின்றீர்கள் ? ' பதிவுகள் ' வாசகர்களுடன் அவற்றைச்சிறிது பகிர்ந்து கொள்ள முடியுமா ? தேவகாந்தன் : வணக்கம், கிரி. ஏறக்குறைய அய்ந்தரை மாதங்களாக நீடித்திருந்த இந்தப் பயணத்தின் நோக்கமே அதுவாக இருக்கவில்லை . குடும்ப காரணம் முதன்மையாக இருந்தது. அதை இலக்கியரீதியிலும் பயனுள்ளதா