Posts

Showing posts from February, 2009

இன்னும் ஒருமுறை

இன்னும் ஒருமுறை எண்ணிப்பார்க்க வேண்டியதிருக்கிறது   பிரெஞ்சுப் புரட்சி சொல்லிக்கொண்டிருக்கும் பாடங்கள் பதினெட்டாம் நூற்றாண்டு இங்கிலாந்தைப் பொறுத்தவரை பாரினை ஆண்டுகொண்டிருந்த மன்றத்துக்கு (பாராளுமன்றத்துக்கு) கூடுதலான ஆட்சியதிகாரங்களைக் கொடுத்துவிடுகின்ற தேவையை, மன்னராட்சிக்கு ஏற்படுத்திய கேடுகாலமாகக் கொள்ளலாம். ஏனைய நாடுகளின் முடிகளுக்கும் இதுவே பொதுநியதியாக இருந்ததென்று சுருக்கமாகக் குறிப்பிட முடியும். பிரபுக்கள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் பிரநிதிகள் அடங்கிய இந்த மன்றத்துக்கு படிப்படியாகச் சேர்ந்த அதிகாரம், மன்னராட்சியுடனான எந்தப் போராட்டங்களினதும், புரட்சிகளினதும் காரணமாய் வந்துசேர்ந்ததில்லையென்ற உண்மையை இங்கே வலுவாகப் பதிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான், நாடாளுமன்றத்தின் தன்மையை நாம் முழுமையாகப் விளங்கிக்கொள்ள முடியும். அறிவுலகில் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றங்களும், விஞ்ஞான வளர்ச்சியும், கல்விப் பரம்பலும் முடிசார்ந்த வர்க்கத்துக்கு ஓர் அச்சுறுக்கையாக இருந்தன என்பது ஓரளவுக்குத்தான் நடந்தது. அதை மிக்க சாதுர்யமாக மன்னராட்சி, தன் உரிமைகளைப் பகிர்வதன் மூலம் தீர்