Posts

Showing posts from October, 2010

கலாபன் கதை: 14

காணாமல் போன கடலோடி கடந்த பதின்னான்கு ஆண்டுகளில் இல்லாததுபோல கலாபன் வேலையற்றிருந்த காலம் அந்தமுறைதான் அதிகமாகவிருந்தது. கடைசிக் கப்பலை விட்டுவந்து ஏழெட்டு மாதங்களாகியிருந்தன. அந்தக் கால இடையில் கொழும்புசெல்லும் வழியில் இரண்டு தடவைகள் திருமலை வந்து ஓரிரு நாட்கள் என்னுடன் தங்கிச் சென்றிருந்தான். அவனது தங்குகைகள் முன்னர்போல் அட்டகாசமாக இருக்கவில்லையென்பதில் அதிசயப்பட ஏதுமிருக்கவில்லை. ஆனாலும் மனச்சோர்வுகளும், மன வேக்காடுகளும் அற்று தன்னிலைமையை உள்வாங்கிக்கொண்ட நிறைவோடுதான் அவன் இருந்திருந்தான். வெளித்தோற்றம் இன்னும் போன கிழமை கப்பலைவிட்டு வந்தவன்போல்தான் இருந்தது. அதேயளவு நீளமாக இல்லையெனினும் தலைமயிரை நீளமாகவே விட்டிருந்தான். உடை வி~யங்களிலும் குறைசொல்ல முடியாதேயிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பானால் ஒரு கடலோடியைப் பார்வையிலேயே இனங்கண்டுகொண்டுவிட முடியும். நீளமான தலைமயிர், வெளிநாட்டு உடை, குறிப்பாக லிவைஸ் அல்லது றாங்க்ளர் பான்ட், அடிடாஸ் சப்பாத்துக்களிலிருந்து அதைச் சுலபமாகக் காணமுடிந்தது. ஆனால் நிலைமை பின்னர் அந்தமாதிரி இல்லை. இலங்கையே சுதந்திர வர்த்தக வலயமாகியிருந்தமையும், மக்கள