Posts

Showing posts from November, 2021

கத்யானா அமரசிங்ஹவின் ‘தரணி’ (நாவல்) பற்றி

Image
    ‘மொழிபெயர்ப்பானது கருத்தைப்போலவே படைப்பாளியின் அடையாளத்தையும் தவற விட்டுவிடக் கூடாது’   கத்யானா அமரசிங்ஹவின் மூன்றாவது சிங்கள நாவலான ‘தரணி’, எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக சென்றவாண்டு (2020) வெளிவந்திருக்கிறது. சாருலதா அபயசேகர தேவரதந்திரியின் ‘Stories’ போன்ற வலு வீச்சானவை இலங்கை ஆங்கில நாவலுலகில் படைப்பாகிக்கொண்டிருக்கும் தருணத்தில், தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ள சிங்கள மொழி நாவலான ‘தரணி’   ஒரு வாசகனின் வாசிப்பார்வத்தை இயல்பாகவே கிளர்த்துவதாகும். எனது பிரவேசமும் அத்தகைய ஆர்வம் காரணமாகவே ஏற்பட்டது. ‘தரணி’யை விமர்சிப்பதில் ஒரு சிக்கலான நிலைமையை இயல்பாகவே எதிர்கொள்ள நேரும். மொழிபெயர்ப்புபற்றி பல்வேறு வகையானதும் புதிது புதிதானதுமான கருத்துக்கள் கூறப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கான கவிதைப் பெயர்ப்பு கவிஞனுக்கான ஒரு துரோகமென்றுகூட சொல்லப்பட்டுள்ளது. நாவல்கள் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு, தழுவல் என்கிற பிரச்னைகளைத் தாண்டி அவ்வாறான கடுமையான கருத்துக்கள் பகரப்படவில்லையெனினும், ஒரு விஷயத்தை இங்கே அச்சொட்டாகப் பதிந்

புதிர் (கதை)

  புலம்பெயர் தேசத்திலிருந்து வந்து நாட்டில் கால் பதித்த வேளைமுதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் மாற்றங்கள், அவன் பார்வையெங்கும் நிறைந்திருந்தன. தொலைக்காட்சிச் செய்திகள் வழி மனதில் விரிந்திருந்த கட்டமைப்புகள் காட்சி நிஜங்களுடன் மிக ஒத்துப்போனதில் அவன் பெரிய ஆச்சரியமெதனையும் அடைந்துவிடவில்லை. ஆனால் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய தன்னூர் வந்தபோது…? பௌதீகத்தில் எந்த மாற்றமும் அற்றதாய் இன்னும் அது   பழைமையின் பிடியில் இருந்துகொண்டிருந்தது. அவனுக்கு அதிசயம் வந்தது.   இறுதி யுத்தத்தில் விழுந்த ஆழமான வடுக்கள் முற்றாகத் தீர்ந்ததாகவன்றி, யுத்தமே அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவில்லைப்போல, காலமே தன் தடம் பதிக்க அஞ்சி விலகிச் சென்றதான தோற்றங்கொண்டு இருந்தது. செல்வராணியின் புளிமா வளவு இன்னும் வெட்டையாயே இருக்கச் செய்தது. அதனண்டைய வளவுகளிலும் இரண்டொரு ஓலைக் குடிசைகள் அப்போதும் இருந்துகொண்டிருந்தன. ஒருவேளை அவையேகூட   பழைமை மாறாத அந்த உணர்வைத் தன்னுள் தோற்றியிருக்கலாமென ரமணீதரன் சதாசிவம் எண்ணினான். செல்வராணியின் புளிமா வளவு பின்னால் அவனது குணநலன்களை   உருவாக்கிய வகையில் முக்கியமானது. அதுபோல

நாகதடம் (கதை)

    சூரியன் நாளின் அந்தலை தெரிந்து மேற்கில் தன்னைப் புதைத்தது. பகலின் வெம்மை கெலித்திருந்த வறள் வெளியில் மென்குளிர் விரவுவது தெரிந்து, காற்று மனிதர்களை ஆசுவாசிக்க அதைத் தன் தோளேற்றி அசையத் துவங்கியது. அதுவொரு வைகாசி மாத முழுநிலா நாள். நாளின் விசேஷத்தில் நாகதம்பிரான் குடிற்கோயில் முன் பக்தர்கள் குழுமத் துவங்கியிருந்தார்கள். மங்கிய பெரு மஞ்சட் குடமென கீழ் வான விளிம்பில் நிலா எழுந்திருந்தும் மெல்லிய இருள் இன்னும்பாரித்திருந்த அவ்வேளையில், குடும்பங்கள் தொட்டம் தொட்டமாய் அமர்ந்து   தம் வளந்துகள் அடுப்பேற்ற ஆயத்தப்படுத்தின. நெடும்பாதையிலிருந்து பற்றைக் காடு தாண்டியதும் கோயில்வரை வளைந்து வளைந்து சென்ற பாதையில்   விழுந்திருந்த வெண்கோட்டினைக் குறிப்பாய்கொண்டு, மேலும் மேலுமான பக்தர்கள் நடந்தும் வண்டியிலும் டிராக்டரிலுமாய் ஊர்ந்து வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஒரு காலத்தில் பெரும் வனமாயிருந்தது அது. யானை புலி கரடிபோன்ற மிருகங்களது வசிப்பிடத்தின் மய்யம் அதுவென மக்கள்   அச்சம் கொண்டிருந்தார்கள். பின்னாலேதான் வயல்கள் பெருக்கப் பெருக்க வனம் சிறுத்துச் சிறுத்து இன்றைய பரிமாணம் எய்திற்று.