Posts

Showing posts from July, 2023

சாம்பரில் திரண்ட சொற்கள் 15

Image
  வெய்யில் கொழுத்திய பதினொரு மணிப் பொழுதில் வீடு வந்துசேர்ந்தனர். சாய்வான பின்முற்றப் பாதையால் கீழிறங்கியிருந்தார் சிவயோகமலர். கூட வந்திருந்த செல்லத்தம்பு, சாந்தரூபிணி, சுந்தரமென யாரின் உதவியுமின்றி, வீட்டின் முன்புற கார் நிறுத்தத்கிலிருந்து தன்னறைவரையான சுமார் நூறு அடி தூரத்தை, நடந்து கடந்ததிலான ஒரு திருப்தி அவர் முகத்தில் ஜோதித்துக்கொண்டு இருந்தது. அதன் பிரதிபலிப்பு மற்றவர் முகங்களிலும் காணக் கிடந்தது. மூன்று நாட்களுக்கு முந்தி இருள் சூழும் ஒருபொழுதில் அதே வழியில் தான் ஸ்ட்றெச்சரில் வைத்துக் காவிக்கொண்டு செல்லப்பட்டதையெண்ண அத் திருப்தியின் அலைகள் மகிழ்ச்சியாய்ப் பரிணமிக்கத் துவங்கின. உண்மையில் இன்னும் தன்னால் சிறிதுதூரம் யாரின் கைத் தாங்கலுமின்றி கைத்தடியுடன்மட்டும் நடந்துசெல்ல முடியும்போல் சிவயோகமலர்   உணர்ந்துகொண்டிருந்தார். முதல்நாள் மதியமளவில் மகேந்திரசிவம் அவரைப் பார்க்க ஒட்டாவாவிலிருந்து வந்;திருந்தான். தனியாகத்தான். ‘அங்கயிருந்து காரில தனியவே வந்தனீ?’ என்ற தாயின் கேள்வியில், தன் மனைவி பிள்ளைகளை அழைத்து க்வரவில்லையேயென்ற ஆதங்கம் பொதிந்திருந்தது அவன் கண்டான். அதை   உணர்ந்த