Posts

Showing posts from April, 2023

காந்தப் புலம் - நாவல்- மதிப்புரை

    -          கேள்விகளாய் அமைந்த பிரதி – மெலிஞ்சி முத்தனின் ‘காந்தப் புலம்’ நாவல் குறித்து   166 பக்கங்களில் தன் கதை விரிப்பை நிகழ்த்தும் இப் பிரதியை வித்தியாசமான நாவலாகக் கருதமுடியும். இது, பிரதி மரபார்ந்த நாவல் அல்லவென்பதைச் சொல்லிவிடுகிறது. அதனால், அதன்மீது செலுத்தும் விமர்சனப் பார்வையை அதற்கான இலக்கியக் கோட்பாடுகளிலிருந்து கண்டடையவேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவ்வாறான மிகு நவீனக் கோட்பாடுகள் தமிழில் தொகுப்பாய் இல்லை. பயணத்தின் மனக் குறிப்புகள், மனத்தின் பயணக் குறிப்புகளென இதன் கதைகூறு முறைகொண்டு பிரதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப்பார்க்க முடியுமெனத் தோன்றுகிறது. தன்னிலைப் பாத்திரக் கதைசொல்லலுடன் 11ஆம் பக்கத்தில் துவங்கி மூப்பர் மரிசலின், அருட் தந்தை மரிசலின் சகாயநாதன், போதகரின் சமையலாள் கிறிஸ்தோத்திரம், ‘எழும்புங்கள்’ சுவாமி, கொத்தண்ணர், ஜசிந்தா, மாணங்கி ஆகிய பாத்திரங்களின் கதைகூறலாய்   73ஆம் பக்கத்துடன் இதன் முதலாம் கதைப் பகுதி முடிவுறுகின்றது. இதில் இடம்பெறும் நாகாத்தை பாத்திரம் முக்கியமானது. பிறரின் எண்ண அலைகளைக் கிளப்புவதோடு, நாட்டார் வழக்காற்றிலுள்ள ஐதீகங்களோடும்

சாம்பரில் திரண்ட சொற்;கள் 12

Image
    செங்கறுப்பாயிருந்த வானம் கருஞ்சிவப்பாகி இருளாகும் மாயத்தைத் துவங்குவதை அண்ணாந்த பார்வையில் ஜன்னலூடு கண்டபடியிருந்த சுந்தரத்திற்கு, உட்படிகளில் இறங்கி பாதி வழியிலிருந்து சாந்தரூபிணி, ‘அங்கிள்…!’ என குரலெடுத்தபோதே தெரிந்துவிடட்டது, முக்கியமான செய்தியொன்று பாதி தூரம் கடந்து நிலக் கீழ் வீட்டுள் இறங்கிவிட்டதென. கீழ், மேல் வீட்டுக் குடும்பங்கள் அந்தவகையாக பழக்கத்தின் தத்தம் இடைவெளிகளை வகுத்துக்கொண்டிருந்தமை, விரும்பத்தக்கதாக இருக்கவில்லைத்தான், ஆனால் நன்மை விளைத்தது. வீட்டினுள்ளே அந்தளவு   சுமுகம் போதும் என்பதை சில மாதங்களின் முன் கீழ் வீட்டுக்கும் மேல் வீட்டிற்குமிடையிலான ஊடாட்டத்தில் ஒரு பிரச்னையிலிருந்து வெடித்தெழுந்த ஒரு பிரச்னைமூலம் சந்தரம் புரிந்துகொண்டிருந்தார். ஒருநாள் காலையில் அவர் ஏதோ தேவைகருதி வெளியே சென்றிருந்தவேளை, ‘அன்ரீ….!’யென அழைத்தபடி வெகு சுயாதீனமாக சாந்தரூபிணி கீழே வந்திருந்தாள். பதிலில்லாததில், படியேறமுடியாத அன்ரி வேறெங்கே வாஷ் றூம் தவிர போகப்போகிறாரென உடனடியாகத் திரும்பிவிடாமல் காத்திருக்கக் கருதி கூடத்துள் அமர்ந்தாள். வெளியே வந்து சாந்தரூபிணியை கூடத்துள் அம