Posts

Showing posts from April, 2010

இனப் படுகொலைகளும்

இனப் படுகொலைகளும் உலக நாடுகளின் மவுனங்களும் -தேவகாந்தன்- யுத்த காலக் குற்றங்களுக்காக சிறீலங்கா அரசு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்கள் உட்பட சில அமைச்சரவை உறுப்பினர்களும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைப் படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்படுகின்ற தருணத்தில், யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் எந்த சர்வதேச அமைப்பின் முன்னரும் சாட்சியமளிக்கத் தயாராகவிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசினால் கைதுசெய்யப்பட்ட செய்தி புதியதில்லை. புதுமையானதும் இல்லை. இதுவும் இன்னும் இதுபோன்ற பலவும் எதிர்பார்க்கப்பட்டவைதான். ஏறக்குறைய சர்வாதிகார ஆட்சியின் நிலைமையை அடைந்திருக்கும் சிறீலங்காவுக்கெதிரான சர்வதேசத்தின் குரல் மவுனித்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம். ஆனாலும் இந்த உரைக்கட்டில் அதுபற்றி நான் அலசப்போவதில்லை. திட்டமிட்ட ஓர் இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கும் சிறீலங்கா, சர்வதேசத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறதா என்பதுபற்றியும், உலகின் பல பாகங்களிலும், குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இரு தசாப்த காலத்துள் நடந்துள்ள இனப்படுகொலைகளையும், அக்காலங்களில் இந்த சர்வதேச சம

கலாபன் கதை: 10

கப்பல், சமுத்திரம், பெண் எண்பதுகளின் ஆரம்பத்தை கப்பற்றொழில் படுமோசமாக வீழ்ச்சியடைந்த காலமாகச் சொல்லமுடியும். தானியம் ஏற்றிச் செல்வதற்கும், எண்ணெய் ஏற்றிச் செல்வதற்கும் உதிரிச் சாமான்களை கொன்டெயினர் எனப்படும் பெரும் உலோகப் பெட்டிகளில் போட்டு அவ்வாறான நூறு நூறு பெட்டிகளை ஏற்றிச் செல்வதற்குமான மிகப்பெரும் கப்பல்கள் கட்டப்பட்ட காலம் அது. புதிய கப்பலை பழைய கப்பலின் பாதித் தொகை மாலுமிகளோடேயே செலுத்த முடிந்திருந்தது. மட்டுமில்லை. கடற் பயண காலமும் முக்கால் பங்காகக் குறைந்தது. அதனால் கப்பல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பன்னூறு கப்பல்கள் தொழிலிழந்தன. பழைய கப்பல்கள் இரும்பு விலைக்கு விற்கப்பட்டன. நடுத்தரப் புதிதான கப்பல்களே ஏற்றிச் செல்ல சாமான்கள் இன்றி துறைமுகங்களுக்கு முன்னால் நங்கூரங்களில் தூங்கிக்கொண்டு கிடந்தன. ஒரு காலத்தில் கப்பற்றொழிலில் ஏக சக்கராதிபத்தியம் செலுத்திவந்த கிரேக்கம்கூட அதனால் ஆட்டம் கண்டது. அக்காலப் பகுதியில் நடுத்தரப் புதிதான எம்.வி.எக்செலேன்ட் என்ற ஒரு கிரேக்கக் கப்பலில் வேலைசெய்து கொண்டிருந்தான் கலாபன். அதுவரையான கப்பற்றொழில் காலத்தில் கலாபன் அலுப்படைந்திருந்தது அ