Posts

Showing posts from March, 2019

உட்கனல்

Image
நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிருந்த நினைவுகள் திடீரென சுழிப்பெடுத்துப் பெருகின.       நாவற்குழிப் பாலம், செம்மணி உப்பளம், அப்பால் மயானவெளி தாண்டி நல்லூர்ப் பாதையில் முதல் வருகிற குடிமனைத் தொகுதி நாயன்மார்கட்டு. சுமார் இருபது வருஷங்களுக்கு முந்தி சுற்று மதிலும், வாசல் கொட்டகையும், வெளியே தெருமடமும் கொண்ட அந்த வீடிருந்த இடத்தில் அப்போது வேறொரு வீடு இருந்துகொண்டிருந்தது. மட்டுமில்லை. சற்றுத் தள்ளி நல்லூர்த் தெருவிலிருந்து அரியாலைக்கு கிளை பிரிந்த சந்தியிலிருந்த கிணற்றுக் கட்டும் மேடையும், அருகிலிருந்த சுமைதாங்கியும்கூட இல்லாது போயிருந்தன. இருந்தும்  செம்மணி தாண்டி கார் குடிமனைக்குள் பிரவேசித்ததுமே அந்த இடத்தை நவநீதம் துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டார்.       அப்போதுள்ள, குடும்பத்தின் நிம்மதி, செழிப்பு எல்லாமும் ஒரு பொறியில் பஸ்மமாகவிருந்த ஒரு காலத்தை அப்போது அவர் எண்ணினார். அதிலிருந்தான மீட்சி அப்பொழுது இல்லாமல் போயிருக்கிற அந்த வீட்டிலேதான் சாத்தியமாயிற்று.       புலம்பெயர் தே