Posts

Showing posts from December, 2014

இலக்கியச் சந்திப்பு 3 ‘காலம்’ செல்வம் அருளானந்தம்

இலக்கியகாரனாக இருப்பது வரமா சாபமா என்று தெரியாமல் ஒரு விடயம் நடந்துகொண்டே இருக்கிறது எழுத்து: கௌசலா சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன் 1. புலம்பெயர்வதற்கு முன்னால் ஈழத்தில் உங்கள் இலக்கிய ஆர்வங்கள், ஈடுபாடுகள் எவ்வாறு இருந்தன, இலக்கியம் தவிர்ந்து பிற கலையார்வங்களுக்குக் காரணமாயிருந்தவை எவை என்பதிலிருந்து இந்த நேர்காணலை நாம் ஆரம்பிக்கலாம். முதலாவது இந்த நேர்காணலில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது.  ஏனென்றால் இதுவரை நாம் எதைச் சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி முன்னால் வந்து ஒரு இடைவெளியாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் நட்பார்ந்த நிலையில் அதை மறுக்கவும் முடியாது. இதுதான் என்னுடைய முதலாவது நேர்காணலாக இருக்கிறது. ஈழத்தில் இருக்கும்போது நான் ஒரு வாசகன் மட்டும்தான். வாசகன் என்று சொல்லப்போனால் தீவிரமான வாசகன் என்றும் சொல்வதற்கில்லை. வாசிக்கும் சூழ்நிலை வீட்டில் இருந்தது. அம்மா ஒரு பெரிய வாசகி. அதனால் வழமைபோல கல்கி, சாண்டில்யன், அகிலன், குமுதம், ஆனந்தவிகடன், ஈழத்தில சுதந்திரன், சுடர், வீரகேசரி இப்படியான சஞ்சிகைகளை வாசிக்கும் ஒரு சராசரி வாசகனாகவே இருந்தேன்.  நான் ஒரு கத்தோலிக்க கிர

பூக்கள் (உருவகக் கதை)

பூக்கள் மல்லிகைக் கொடி சிரித்தது. முற்றத்து மல்லிகைப் பந்தரிலே என்றைக்குமில்;லாதவாறு பூக்கள் இன்றைக்கு கொட்டிக்கிடக்கிறது. அந்த வைகறை வேளையிலே வீட்டின் தலைவி வந்து மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டு போகிறாள். இன்னும் சற்று நேரத்திலே அவளுடைய சுருண்ட கார்க் கூந்தலிலே அவை சரமாகத் தொங்கும். தங்கத்தில் இயன்ற அவளது மென் தோள்களிலும் சரிந்து கிடக்கும். இதை எண்ணுகிறபோது மல்லிகையின் மலர்ச்சி இன்னும் அதிகரிக்கிறது. அதோ, கிணற்றடித் தோட்டத்திலே ஆயிரக்கணக்காக நிறைந்து கிடக்கின்றன கனகாம்பரப் பூக்கள். கனகாம்பரச் செடியின் முகத்திலும் மலர்ச்சி. தங்கச் சிறு ரதமாய் அசைந்துவந்த அந்த வீட்டின் பிஞ்சுக் குழந்தை, அதன் மஞ்சள் வர்ணத்தின் ஆசை மேலீட்டால் ஏற்பட்ட ஆவலோடும் கைகளை நீட்டிப் பறிக்கிறது. தெய்வத்தின் கைகளிலே கிடக்கிற நினைப்பு அவைகளுக்கு. கனகாம்பரத்துக்கு மலர்ச்சி இன்னும் மேலோங்குகிறது. ஆனால்… அதோ, சிவந்த ஓடுகளுக்கு மேலாகத் தலை நீட்டி நிற்கின்ற மாமரத்தின் முகத்திலே இத்தனை ஆரவாரமான மலர்ச்சியைக் காணவில்லை. அதன் கொம்புகளிலும்தான் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. ஆயினும் அடக்கமான புன்முறுவலைத் தவிர

நினைவேற்றம் முனை 3

நினைவேற்றம் -தேவகாந்தன் பனி  புகட்டினால், மழையிலே நனைந்தால், வெய்யில் பட்டால், தூசிக்குள் நின்றால் என எதற்குமே தும்மல் வந்து, தடிமனாக்கி, காய்ச்சலும் இருமலும் பிடித்துவிடுகிற ஒரு நோஞ்சான் பிள்ளையாகவே என் சின்ன வயது இருந்திருக்கிறது. இது காரணமாகவே அண்டை அயல் வீடுகளிலே போய் விளையாட நான் அனுமதிக்கப்படவில்லை என் பெற்றோரால். சாதிபற்றிய காரணம் பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் தரத்ததாகவே இருந்தது. பாடசாலை மெய்வல்லுநர்ப் போட்டிகளில் பங்குகொள்வது அது தேடிச் சென்று பங்குபற்றுகிற சூழ்நிலையில் அமையாததில் அதற்கு நான் அனுமதிக்கப்பட்டேன். இருந்தும் பத்து வயதுவரை என்னால் பெரிதாக எதனையும் செய்யமுடியவில்லை, இந்த வருத்தக்கார உடம்பு இருந்த காரணத்தால். இந்தா, இந்தமுறை விளையாட்டுப் போட்டியில் யூனியர் பிரிவில் சம்பியன் ஆகாவிட்டாலும்,இவனுக்கு எப்படியும் நூறு யார் ஓட்டத்திலோ, நீளம் பாய்தலிலோ முதலாம் அல்லது இரண்டாம் பரிசுகள் கிடைத்துவிடும் என்றிருக்கிற நிலையில், விளையாட்டுப் போட்டியிலன்று நான் சுகவீனமாகி எழும்பமுடியாது கிடந்த சம்பவங்கள்தான் என் வாழ்வில் அதிகமும் நேர்ந்திருக்கின்றன. இவ்வாறு அடிக்கடி ந

நூல் விமர்சனம் -10 ‘ஊழிக் காலம்’

Image
தமிழ்க்கவியின் ‘ஊழிக் காலம்’ (நாவல்) புவிக் கோளத்தில் எங்கெங்கோ, என்றென்றோ நடந்த பல்வேறு ஊழிகளினை நிகர்த்த வன்னிப் போரின் நேர் தரிசனப் பதிவுகளாக மட்டுமே இந்நூல் அடங்கிப் போயிருப்பினும், இதன் ஊடுகளில் அடங்கியிருக்கும் சொல்லப்படாத உண்மைகள்தான் இதை முக்கியமான நூலாக்குகின்றதன. ‘ஊழிக்காலம்’ நூலை வாசிக்க ஆரம்பித்தபோது அதில் இயல்பான வேகத்தில் செல்வது எனக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அது களங்கொண்டிருந்த மண் எனதுமாகும். விளையப் போகிறது என்றிருந்த சோகம் அனைத்தும் விழுந்து மூடிய மண். அதனாலேயே அப்பிய துயரத்தோடு பயணத்தை நின்று நிதானமாகவே செய்ய நேர்ந்தது. இலங்கையின் வடபகுதி பஸ்ஸிலும், ட்ராக்டரிலும், சைக்கிளிலும், நடையிலுமாய் நான் அலைந்து திரிந்து உள்வாங்கிய இடம். யுத்தத்திற்கு முன்னாலேதான். வன்னியின் குடியிருப்புகள் தெரிந்திருந்தன. குடியேற்றப் பகுதிகளின் நாற்சந்திகள் தெரிந்திருந்தன. அத் தெருக்களில் ஓடிய பஸ்களின் தட எண்கள், போக்குவரத்து நேரங்கள் தெரிந்திருந்தன. ஆனால் புதிதாக முழைத்த குடியிருப்புகளும், அவற்றின் விஸ்வரூபம்கொண்ட பெயர்களும் தெரிந்திருக்கவில்லை. இந்தப் பழகிய  மண்ணூ

கலித்தொகைக் காட்சி: 8

‘திங்களைத்  தேன்கூடென எண்ணி  ஏணிகட்டும் குறிஞ்சிநில  மக்கள்’ இலக்கியத்தில் கற்பனை என்பதுபற்றி மேலைநாட்டு விமர்சகர்களிலிருந்து, அவர்களது சிந்தனை அடித்தளத்தில் நின்று இவவ்வகையில் சிந்திக்கின்ற தமிழ்நாட்டு விமர்சகர்கள்வரை ஒத்த அபிப்பிராயம் நிலவுவதாகத் தெரியவில்லை. இலக்கியத்தில் எந்தளவுக்குக் கற்பனையைப் புகுத்தலாம் என்பதுபற்றியும், இலக்கியத்தில் கற்பனையைப் புகுத்தலாமா கூடாதா என்பதுபற்றியும் பலமான விவாதங்கள் கிளம்பி ஓய்ந்திருக்கின்றன. யதார்த்தமான கற்பனையை இலக்கியத்தில் புகுத்துவது இலக்கியரசனைக்கு அவசியமானது என்ற கருத்தைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இலக்கிய விமர்சனம் பண்படுத்தப்பட்டு செழித்து வளர்ந்துள்ள இன்றைய இருபதாம் நூற்றாண்டு முடிவு இது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலித்தொகைக் காலத்திலே கற்பனை ஒன்று வருகின்றது. அது யதார்த்தமானதா என்று கேட்டால் இல்லையென ஒரேயடியாகப் பதில் சொல்லிவிட முடியும். ஆனால் அது இனிமை பயக்கிறதாஎன்று கேட்டால் இனிமை பயக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிஞ்சிநிலத்திலே புணர்தல் நிகழ்தற்கும், அது பகற்குறி, இருவுக்குறிஎன்பதோடு மட்டும் நில்லாமல் த

கலித்தொகைக் காட்சி: 7

‘எமனைஎதிர்த்துநிற்கும் வீரமிக்கதலைவன்’ சங்ககாலத்திலிருந்தவீரமதவழிபாடு -தேவகாந்தன் வேங்கடம் முதல் குமரிவரை பரந்துபட்ட தமிழ் மண்ணிலே ஆடவர், பெண்டிர் அனைவருக்குமே வீரம் ஒரு பொதுமதமாக விளங்கியது. சங்ககாலத்திலிருந்த இந்த மதநெறியை வீரமதமாக மக்கள் போற்றினர். பின்னாளில் வீரம் என்பது ஒரு வெறியாகவும்,  கொலைச் செயலாகவும் கருதப்பட்டதோடு  வீரமத வழிபாடு  மறைந்து  பக்தி மதவாழிபாடு தோன்றியது.  தமிழினத்தின் வீழ்ச்சி  களப்பரரின் ஆட்சியோடு தொடங்குவதும்  கவனிக்கத் தக்கது. ‘நாமார்க்கும்  குடியல்லோம்’ என்று  அரசஆணையை  எதிர்த்து போர்த் துவஜம் தூக்கிய  முதற் தமிழ் மகன் நாவுக்கரசர், ‘நமனை  அஞ்சோம்’ என்று கூறுகிறார். அரன் நிழலைச் சரண் அடைந்த அந்த நெஞ்சத்திலே கூற்றுவனுக்கு எதிர்நிற்கும் ஆற்றல் மிக்கிருந்தது. போற்றுதலுக்குரியதுதான் இது. ஆனால்,  வீரமதத்தை  வழிபாட்டு  நெறியாகக் கொண்டுச ங்ககாலத்திலேயே  யமனுக்கு எதிராக நெஞ்சுநிமிர்த்தி நின்ற சங்கத் தமிழ்மகனை, குறிஞ்சிக்கலி  நமக்குக் காட்டுகின்றது  எனக் கூறின் வியப்புத் தரும். ஆம், வீரத்தை மதமாகவழிபட்ட சங்ககாலத்திலே யமனுக்கு எதிராககநிற்கிறான் ஒரு தமிழ்மகன்.

கலித்தொகைக் காட்சி: 6

‘அறம் அல்லவற்றைச் செய்தால் இயற்கையேபொய்த்துவிடும்’ -தேவகாந்தன் அகனைந்திணையின்படி குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கம் புணர்தல் ஆகும். கலித்தொகையில் இத்திணைக்குரிய இடம் இரண்டாவது. பாலைக்கலியின் பிரிவுத்துயரிலே வாடிய  தமிழ் நெஞ்சங்கள் மலைச் சாரல் அழகையும், அம்மலைகளினடியிலே தவழுகின்ற இளம் குழவியான  தேன் நிலவின் எழிலையும், அதுபற்றிய  புலவனின் கற்பனையையும்,  தலைவியர் கற்பையும், சமுதாய நெறியையும், வாழ்க்கை முறையையும் கண்டு களிப்படையமுடியும். ‘குறிஞ்சிபாடக் கபிலன்’ என்பது முதுமொழி. குறிஞ்சிக் கலியைப் பாடியிருப்பவரும் கபிலரே என்று சில தமிழாராய்ச்சி வல்லுனர் துணிந்துள்ளனர். இன்னும் சிலர் தொகுக்கப்பட்ட அச் செய்யுட்களைப் பல புலவர் பாடினர் என்பர்.  இது ஆய்வுக்குரிய  விடயம். ஆகவே அவ்வாராய்ச்சியை  விடுத்து இங்கு காட்சிகளைக் கவனிப்போம். தமிழிலக்கியங்களை எடுத்துப் பொதுவாக நோக்கினால் ஐந்து ஒழுக்கங்களிலும் ஒருவகைப் பிரிவின் துயரே   காணக்கிடக்கின்றது. தலைவனும் தலைவியும்  ஒருவரை  ஒருவர் சந்திப்பதற்கும் பின்னர் அவர்கள் சந்திக்கும் பகற்குறி இரவுக்குறி  நிகழ்தற்கும் மலைநாட்டிலுள்ள தினப்புனங்கள்  மிக்க

கலித்தொகைக் காட்சி: 5

‘குடும்பதத்துவத்தை விளக்கும் பாலைநிலத்து யானைகள்’ தலைவனைப் பிரிந்ததலைவியர் ‘அறன் இன்றி அயல் தூற்றும்’ நிலையில் மாத்திரமல்ல, சமுதாயத்திலே புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், ஆதரவற்று நடுவீதியிலே கிடப்பவர்களாகவும் கூட ஆகிவிடுகின்றனர். பெண்மை மென்மையானதாகவும், ஆண்மை வன்மையானதாகவும் இருக்கின்றவேளையில், மென்தன்மையுடைய பெண்ணுக்கு ஆணே பாதுகாப்பளிக்க வருகின்றான். இந்நிலையில் தலைவன் பிரிந்துவிட்டால் தலைவியின் நிலை ஆதரவற்றதாவதில் ஆச்சரியமில்லை. ‘தோள்நலம் உண்டுதுறக்கப்பட்டோர் வேணீர் உண்டகுடைஓர் அன்னர், நல்குநர் புரிந்துநலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர், கூடினர் பிரிந்துகுணன் உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ ஓர் அன்னர்’ என்று கலித்தொகையின் இருபத்திரண்டாம் செய்யுள் கூறுகிறது. ஆம், தலைவனைப் பிரிந்த தலைவியர் நீர் அருந்திய பின் வீசப்பட்ட ஓலையில் முடைந்த பாத்திரமாகவும், மக்கள் பிரிந்துவிட வெறிச்சோடிக் கிடக்கும் பாழ்பட்டகிராமமாகவும், வெளியே வீசப்பட்ட வாடிய மாலையாகவும் கணிக்கப்படுவர். அந்த நிலையில் பயனற்று, வெறுத்து, நல்ல தன்மையிழந்து கிடக்கும் அந்தநிலையை, நாம் பார்க்கிறபோது, தலைவியரின