Posts

Showing posts from January, 2015

‘சாதலின் இன்னாதது இல்லை’

Image
எஸ்பொவின் மரணம்  நண்பனாயும் இலக்கியவாதியாகவும்  பெரிய இழப்பு இம் மாதம் இருபத்தாறாம் தேதி மாலையில், வடமாகாணத்தைப் பிறப்பிடமாகவும் கிழக்குமாகாணத்தை வாழிடமாகவும் கொண்டிருந்து அவுஸ்ரேலிய குடிமகனாகியிருந்த எஸ்பொ என பரவலாகத் தெரியவந்திருந்த எஸ்.பொன்னுத்துரையின் மரணம் சிட்னி மருத்துவமனையில் நிகழ்ந்தது. அவுஸ்திரேலியாவில் சிட்னி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தபோதே அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததாக செய்திகள் வந்திருந்தன. அதனால் அவரது மரணம் ஒருவகையில் பேரதிர்ச்சியைத் தந்ததாய் இல்;லாவிடினும், ஒருபெரும் இழப்பை அது ஓங்கி அறைந்துகொண்டு நிற்கிறது. அதுவே ஒரு அதிர்ச்சியாகத்தான் தோன்றுகிறது. 1932இல் பிறந்த எஸ்.பொன்னுத்துரை ஆரம்பகாலத்தில் யாழ். புனித பற்றிக்ஸிலும், பின் பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியிலும் தனது கல்வியைத் தொடர்ந்து  பி.ஏ. படிப்பை முடித்தார். தொடர்ந்து அவர் ஆசிரிய நியமனம்பெற்று கடமையாற்றிய இடம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்கிளப்பு.   அதனால்தான் எனது ஆசிரியர் என்று காசிஆனந்தனிலிருந்து எஸ்.எல்.எம்.ஹனீபாவரை பலரும் போற்றுகின்ற நிலையை அவர் எய்தினார். அனுர, மித்ர, இந்ர, ப

கனவுச் சிறை நாவல் பற்றிய வெளியீட்டுத் தகவல்

Image
புத்தாண்டின் முதல் மாதத்து 3ஆம் தேதி ( 01.03.2015) சனிக்கிழமை மாலை ஆறு மணியளவில் அண்ணாசாலையிலுள்ள ஜி.உமாபதி கலையரங்கத்தில் காலச்சுவடு வெளியிட்டுள்ள எனது நாவலான ‘கனவுச்சிறை’யின் வெளியீடு ஏனைய  படைப்பாளிகளின்  ஆறு புனைவு நூல்களின் வெளியீட்டோடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஓவியர் கருணாவின் அட்டை வடிவமைப்பில் நூல் அழகாக வெளிவந்திருக்கிறது. தயாரிப்பும் மிக அருமை. ஏற்கனவே நூல்பற்றி தேவிபாரதி, மெலிஞ்சிமுத்தன், இளங்கோ டி சே , மற்றும் அ .இரவி  போன்றோர்  தம் கருத்துக்களை பதிவேற்றியிருக்கிறார்கள். நாவலுக்கு தேவிபாரதி எழுதிய முன்னுரையின் பகுதிகள் சில இம்மாத 'காலச்சுவடு' இதழில் வெளிவந்திருக்கின்றன. நீண்ட கால காத்திருப்பின் பின் வெளிவந்திருக்கும் இந்நாவல் 09 தை 2015 ல் தொடங்கவிருக்கும் சென்னை 38 வது புத்தகக் கண்காட்சியில் தன் மாபெரும் கலா உத்திகளோடு ஈழ அரசியலின் நுண்மையைப் பேசும் நூலாக முன்வருகிறது.