கனவுச் சிறை நாவல் பற்றிய வெளியீட்டுத் தகவல்





புத்தாண்டின் முதல் மாதத்து 3ஆம் தேதி (01.03.2015) சனிக்கிழமை மாலை ஆறு மணியளவில் அண்ணாசாலையிலுள்ள ஜி.உமாபதி கலையரங்கத்தில் காலச்சுவடு வெளியிட்டுள்ள எனது நாவலான ‘கனவுச்சிறை’யின் வெளியீடு ஏனைய  படைப்பாளிகளின்  ஆறு புனைவு நூல்களின் வெளியீட்டோடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

ஓவியர் கருணாவின் அட்டை வடிவமைப்பில் நூல் அழகாக வெளிவந்திருக்கிறது. தயாரிப்பும் மிக அருமை.

ஏற்கனவே நூல்பற்றி தேவிபாரதி, மெலிஞ்சிமுத்தன், இளங்கோ டி சே , மற்றும் அ .இரவி  போன்றோர்  தம் கருத்துக்களை பதிவேற்றியிருக்கிறார்கள். நாவலுக்கு தேவிபாரதி எழுதிய முன்னுரையின் பகுதிகள் சில இம்மாத 'காலச்சுவடு' இதழில் வெளிவந்திருக்கின்றன. நீண்ட கால காத்திருப்பின் பின் வெளிவந்திருக்கும் இந்நாவல் 09 தை 2015 ல் தொடங்கவிருக்கும் சென்னை 38 வது புத்தகக் கண்காட்சியில் தன் மாபெரும் கலா உத்திகளோடு ஈழ அரசியலின் நுண்மையைப் பேசும் நூலாக முன்வருகிறது.

Comments

Popular posts from this blog

ஈழத்துக் கவிதை மரபு:

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

தமிழ் நாவல் இலக்கியம்