Posts

Showing posts from December, 2022

சாம்பரில் திரண்ட சொற்கள் 8

Image
    15 வெளியே சுந்தரம் தூங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள் மலர். அது தூங்குகிற நேரமது. தூங்கி, விழித்த பின் படுக்கையில் கிடந்து என்ன செய்யுமோ? அப்போதும் தூங்குமென்றுதான் அவள் நினைத்திருக்கிறாள். கூடத்துள் அமைதி நிலவியிருந்தது. வெளி மரங்களில் குருவிகள் சில துயிலருண்டு கிலுகிலுத்து மறுபடி அமைதியாயின. தூரத்து நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களின் ‘சர்…’ரென்ற பேரிரைச்சல் அவ்வப்போது மெதுவாய் காற்றில் வந்தடைந்தது. அத்தகு சூழ்நிலை அவளுக்குப் பிடிக்கும். மனப் பறவையை கதவு திறந்து அவள் வெளிவிடுகிற சமயமது. அவளே கூட்டின் கதவு திறந்து பறவையை வெளிவிடும் சுதந்திரப் பிரகடனப்படுத்தல் இல்லையது. பறவையே தன் கூடு திறந்து வெளிவந்து அவள் கால காலமும் உலவிய இடமெல்லாம் பறந்துசென்று , அவள் கண்ட கனவுகளெல்லாம் மீளக் கண்டு, அவளனுபவித்த இன்பம் துன்பம் ஏக்கம் ஆதியவற்றுள்ளெல்லாம் மீண்டும் திளைத்துவிட்டு திரும்ப ஒரு சத்தத்தில்    ‘டபக்’கென கூட்டுக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்டு கதவைச் சாத்திவிடும் பெற்றி கொண்டது. அவளும் யதார்த்தத்தில் வந்து விழுந்து சமகால உடல் உபாதைகளையும் மன வேக்காடுகளையும் அனுபவிக்கத் துவங்கிவிடுவாள்.

சமகால இலங்கை நாவல்களில் முக்கியமான வரவு!

  தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் ‘பீடி’: (சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு)   தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும்   கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘பீடி’ நாவலைப்