Posts

Showing posts from January, 2023

சாம்பரில் திரண்ட சொற்கள் – 9

Image
  9   காலை பத்து மணியளவில் தான் வெளியே போய்வருவதாக தனக்கேபோல் சொல்லிக்கொண்டு சுந்தரம் போவதை மலர் கேட்டிருந்தார். சாப்பாட்டு நேரத்துக்கு முன்னம் வந்துவிடுமென்று தெரியும். அனுமானம்தான். வாழ்க்கை கடந்த சில வருஷங்களாக அவ்வாறுதான் அவருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. சலிப்பு என்பதன் முழு அர்த்தத்தோடு தன் வாழ்க்கை அவ்வாறு அடங்கிக்போனதேனென்று அவருக்குத் தெரிந்திருந்தும் விடுபடும் வழியைத்தான் காணாதிருந்தார். உடல் வாதை, பெருவுடம்பின் அசைவிறுக்கம், மனவீறலெல்லாம்தான் அதற்குக் காரணம். தன் பார்வையின் கடூரங்களும், தெறிக்கும் வார்த்தைகளின் வெம்மையும் அப்போதெல்லாம் அதிகமோவென சிலவேளை எண்ணினாலும், ஏதோ சுந்தரம்தான் அதற்கான காரணஸ்தரென அவர் கொதித்துவிடுகிறார். அதற்காக சுந்தரத்திற்காக வருத்தமேதும் கொள்ளவும் மாட்டார். தன் தோழி சிவத்திக்கு இரங்குமளவுகூட அவர் சுந்தரத்திற்கு இரங்கிவிடுவதில்லை. அவளோடான நட்பு மிஞ்சிப்போனால் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு மேலேயில்லை. சுந்தரத்தோடான பந்தமோ சற்றொப்ப அரை நூற்றாண்டு. எனினும் இப்போது ஒட்டு   விட்டுப்போன உறவாகிவிட்டது அது அவரளவில். அந்த ஒட்டுவிட்ட ஸ்திதியில் இருந்துகொ