சிறுகதை: ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும்
சிறுகதை: ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும் சித்திரை மாதக் கடூர வெய்யிலின் தாக்கத்தில் கொதி மண்டலமாயிருந்த பூமி குளிரத் துவங்கியிருந்த ஒரு மாலை நேரத்தில் நான் ஸரமகோதாசனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். நித்திரையில் இருந்திருப்பான், நான்கு ஐந்து முறை கதவைத் தட்டிய பிறகு கதவைத் திறந்து, “உள்ளே வா” என்றான். மேலே மாமரக் கிளைகள் கவிந்து நின்றிருந்தன. பக்கத்தேயும் பின்னேயும் ஈரப்பலா மரங்கள். கிணற்றடியில் கமுகுகளும் செவ்விளநீர்க் கன்றுகளும் வாழைகளும். பராமரிப்புக் குறைந்திருந்தாலும் செழிப்பாகவே நின்றிருந்தன. முற்றத்தில் கொழுத்த ஓர் அரசமரம். அந்தமாதிரிக் காட்சிகள் நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிடைத்துவிடாது. அதனால், ‘நான் வெளியிலயே இருக்கிறன்’ எனச் சொல்ல, குளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு விரைந்தான். நான் அவனது அறைக்கு முன்னால் முற்றத்தில் நின்ற அசோகமரத்தைச் சுற்றிப் போட்டிருந்த கொங்கிறீற் கட்டில் அமர்ந்தேன். பெரிய வீட்டின் கதவு சாத்தியேயிருந்தது. மிஸிஸ் பெர்னாண்டோ எங்கோ வெளியே போயிருக்;கிறாள் என்று தெரிந்ததில் மனத்தில் ஓர் ஆசுவாசம். இல்லாவிட்டால் உள்ளே வந்திர...