மு.த.வும் ‘புதுயுகம் பிறக்கிறது’ சிறுகதைகளும்
படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்: மு.த.வும் ‘புதுயுகம் பிறக்கிறது’ சிறுகதைகளும் ஈழத் தமிழிலக்கியத்தில் மு.த. என அழைக்கப்படும் மு.தளையசிங்கத்தின் இடம் நாற்பதாண்டுகளின் முன்னாலேயே வாசகப் பரப்பில் நிர்மாணம் பெற்றுவிட்டது. ஆனாலும் அது ஈழத்து இலக்கிய வரலாற்றில் போதுமான அளவு பதிவாகவில்லையென்பது தீவிர வாசகர்களிடையே கடந்த சில பத்தாண்டுகளாக நிலவி வரும் மனக் குறையாகும். ஒருவகையில் மு.த.வின் பெயர் ஓர் இருட்டடிப்புக்கு உள்ளாகும் நிலைமையையும் அடைந்துகொண்டிருப்பதாய் அவர்கள் கருதினார்கள். இதற்கெதிரான முன்முயற்சிகள் சிறுபத்திரிகைகள் அளவிலேயே முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டன. ‘அலை’ சஞ்சிகை இதை பல தடவைகளில் முன்மொழிந்திருக்கிறது. அதன் ஆரம்ப கால ஆசிரியர்களில் ஒருவரான அ.யேசுராசா காட்டிய அக்கறை இவ்விஷயத்தில் முக்கியமானது. இவரே மு.த.வின் எழுத்துக்களை முதன்முதலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டுபோய்ச் சேரத்;தவர். இது நடந்தது எண்பதுகளின் ஆரம்பத்தில். உடனடியாக சுந்தர ராமசாமியும் மு.த.வின் எழுத்தாளுமை குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அது அவர் ஆசிரியராக இருந்த காலாண்டிதழ்க் ‘காலச் சுவடு’ இதழில் வந்தது. அது ஒரு ...