உள்ளதை உணர்ந்தபடி… நூல் விமர்சனம் 1 ‘கடவுளின் மரணம்’ (சிறுகதைத் தொகுப்பு) இலக்கியம் சார்ந்த வடிவம் மற்றும் மொழியாடல்களும், அரசியல் சார்ந்த போரினது மூலம் மற்றும் இயங்குவிதங்களும் பற்றியவையான ஒரு விசாரணை -தேவகாந்தன்- கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’ சிறுகதைத் தொகுப்பு மிக்க கவனம்பெறவேண்டிய ஒரு படைப்பு என்று தோன்றுகிறது. அதன் வெளியீடும் கருத்தாடலும் 2013ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் கனடாவின் ரொறன்ரோ நகரில் நடைபெற்ற உடனடிப் பின்னால் ஒருமுறையும், அதன் நினைவுத் தாக்கத்தில் அண்மையில் மேலும் ஒருமுறையுமாக வாசித்த பின்னர் முதல் வாசிப்பில் அதன் மேலெழுந்திருந்த உணர்வுரீதியான மதிப்புகள் அடங்கி, ஏற்பட்டுள்ள விமர்சனரீதியான மனநிலையில் அதுபற்றி எழுதுவது அவசியமென்று பட்டது. பதினாறு கதைகளை உள்ளடக்கியுள்ள இந்தத் தொகுப்பின் முதலாவது கதையினதே மொத்தத் தொகுப்புக்குமான தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது, இதுவே இத்தொகுப்பின் சிறந்த கதையென்று அறுதியிட முடியாதபோதும். எந்த ஒரு தொகுப்பும்போலவே இதுவும் மிகச் சிறந்த, சிறந்த, மற்றும் சாதாரண கதைகளைக் கொண்டிருப்பினும், இதன் மிகச் சிறந்த கதைகள் கட்டவிழ்க்கும் அர்த்...
Posts
Showing posts from January, 2014