‘உட்கனலின் வேகம் இயக்கிக்கொண்டு இருக்கிறது’
நேர்காணல்: தேவகாந்தன் நேர்கண்டவர்: கருணாகரன் (‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் அதிக கவனிப்பைப் பெற்றவர் தேவகாந்தன். இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்த தேவகாந்தன், சிலகாலம் (1968-74) யாழ்ப்பாணத்தில் வெளியான ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார். பிறகு, 1984 முதல் 2003 வரை அநேகமாக தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தார். தமிழ்நாட்டில் இருந்தபோது ‘இலக்கு’ சிற்றிதழை நடத்தினார். இதுவரையில் ‘கனவுச் சிறை’, ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’, ‘கதாகாலம்’, ‘லங்காபுரம்’ உள்பட ஆறு நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் பரிசு (1998), திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது (1996), லில்லி தேவசிகாமணி விருது (1996) , தமிழர் தகவல் விருது (2003) உள்பட பல இலக்கியப் பரிசுகளைப் பெற்றவர். 2003இல் இலங்கை திரும்பிய தேவகாந்தன் சில ஆண்டுகள் கொழும்பிலிருந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார். என்றாலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அடிக்கடி வந்து தன்னுடைய வாழ்களத்தைப் புதுப்பித்துக் கொண்டிருப...