தொன்மத்தின் மீதான காமம் : இராகவன்

தேவகாந்தனின் “மேகலை கதா” வை முன்வைத்து சில குறிப்புகள் தென்மத்தின் மீது தேவகாந்தனுக்கு இருப்பது தீராக் காதலல்ல் தீராக்காமம். தொன்மத்தை மையப்படுத்திய தேவகாந்தனின் புனைகதைகளில் இரு விடயங்கள் அடிப்படையாக இருப்பதனை எடுத்துக் காட்டலாம். முதலில் ஏற்கனவே உள்ள நமக்கும் தெரிந்திருக்கும் தொன்மத்தை முன்வைத்தல். அடுத்தது அந்தத் தொன்மத்துக்கு சமாந்தரமாக இன்னொரு தொன்மத்தை உருவாக்கி இடைபுகுத்துதல். இதைத்தான் “பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம்” என்ற கருத்தியல் வழியாகச் சமூகத்தில் ‘ஊடு நிகழ்த்துகை’ (ஐவெநச எநவெழைn) அவரால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஊடு நிகழ்த்துகையோடு இணைந்த மீள் வாசிப்பின் கலைப புனைவாக நாவல் நீண்டு செல்கிறது. ‘கதை சொல்லல்’ (ளுவழசல வுநடடiபெ) ‘கதை இணக்குதல்’ (ளுவழசல ஆயமiபெ) ஆகிய இருவகை நுட்பங்களிலும் நுண்ணாற்றல் மற்றும் நுண் அனுபவம் கொண்ட தேவகாந்தனின் கதை விசையூட்டற் செயற்பாடு வாசிப்பை நேர்பட நடத்திச் செல்கின்றது… “ என பேராசிரியர் சபா .ஜெயராசா குறிப்பிட்டுள்ளார். இங்கே கதை சொல்லல் என்பது ஏற்கெனவேயுள்ள நமக்குத் தெரிந்திரு...