‘கவிஞராக இல்லாவிட்டாலும் அவரிடம் ஒரு கவி மனது இருந்தது’

பேரா. செல்வா கனகநாயகத்தின் ஆய்வுலகுபற்றிய ஒரு கண்ணோட்டம் தேவகாந்தன் காலம் தன்னை உன்னதப்படுத்துவதற்கான மாந்தரைத் தேர்ந்து வைத்திருந்து அவரை உரிய தருணத்தில் பிரசன்னப்படுத்துகிறது என்று தோன்றுகிறது. அதனாலேயே ஒவ்வொரு கலை இலக்கிய காலகட்டமும் வரலாற்றில் தன் சுவடுகளை ஆழப்பதித்துச் செல்கின்றது. இலங்கையில் நல்லை நகர் ஆறுமுக நாவல(1822-1879)ரின் தோற்றம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதித் தமிழிலக்கிய வரலாற்றில் பெருஞ்சாதனை படைத்ததாய் இருந்தது. காலத்தின் தேவையுணர்ந்து தமிழுரைநடைக்கு சிறப்பான தொடக்கத்தைச் சமைத்தார் அவர். அதுபோல் இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்கள் தமிழ்க் கவிதை சார்ந்து முக்கியமானவை. எளிய நடை… எளிய பதம்… என எளிமையைக் கூவியழைத்த தமிழின் ஈடிணையற்ற நவீன கவிஞன் மகாகவி பாரதி (1882-1921) தோன்றிய காலமது. ஆயினும் நாவலரும் பாரதியும் தோன்றி அவ்வொப்பற்ற காலத்தை உருவாக்கினார்கள் என்றல்ல, காலம் தன்னை வரலாற்றில் பதிக்க நாவலரையும் பாரதியையும் தோற்றிற்று என்பதே சரியாகவிருக்கும். இருப...