Posts

கலாபன் கதை 3

கடலில் தொலைந்த ஒருநாள் அதுவரை இல்லாதவாறு அவன் கடலோடியாக மாறிய காலத்திலிருந்துதான் அவனுக்கும், அவனது மனைவிக்குமிடையிலான மனஸ்தாபங்கள் உருவாகியிருந்தன என்பதை அப்போதெல்லாம் அவன் அதிகமாக உணரத் துவங்கியிருந்தான். எந்தக் கடலோடித் தொழிலினால் அந்த முரண்கள் உருவாகினவோ, அதன்மூலமாகவே அவற்றினை நீக்குவதற்கு அவன் தன்னை ஒரு திடசங்கற்பத்துள் ஆட்படுத்திக்கொண்டான். அவள் எதிரே இருந்தபோது தன்னுள் எழுந்திருந்த தாபம், அவளில்லாத அப்பொழுதில் ஒரு சுரமாகத் தன்னைத் தேய்க்க ஆரம்பித்திருப்பதையும் அவனால் நினைக்க முடிந்திருந்த கணங்கள் அவை. காணாதபோது தலைவனின் குறைகளையும், கண்டபோது அவனின் பிரியத்தையும்மட்டுமே தரிசித்ததாக திருக்குறளில் ஒரு தலைவி கூறுவதை எங்கோ படித்திருந்த ஞாபகம் அவ்வப்போது நினைவில்வந்து சலனம் விளைத்துக்கொண்டிருந்தது. அது தலைவனுக்கும்கூட பொருந்துவதுதான் என ஒரு சிரிப்போடு, சிகரெட்டின் புகை சூழ்ந்த தன் கபினுக்குள் வேலை முடிந்து சிறிது போதையோடு இருக்கும் தருணங்களில் அவன் நினைப்பது அடிக்கடி நிகழ்ந்தது. அவளுக்காகவும், தன் குழந்தைக்காகவும் இனி தான் அதிகமாக வாழவேண்டுமென்று அவன் தீர்மானித்துக்கொண்டான். ...

கலாபன் கதை 2

நிறுதிட்டம் : இரண்டு ஆண்டுகளாகியிருந்தன அந்த முதல் கப்பலிலிருந்து கலாபன் திரும்பிவருவதற்கு. ஊரே அவனை வியந்து பார்த்துக்கொண்டிருந்தது. அவன் வாங்கிவந்திருந்த சான்யோ திறீ இன் வண் செற்றைப் பார்க்க இளமட்டமெல்லாம் வீட்டைச் சுற்றி அலைந்தது. அவனது நீண்ட தலைமுடியும், டெனிம் ட்ரவுசரில் அவனது கம்பீரமான கப்பல் நடையும், அவ்வப்போது கிரேக்க ஆங்கில சொற்கள் கலந்த உரையாடலும் பலரை வசீகரித்தேவிட்டிருந்தன. இரண்டு கிழமைகளாக வீடு ஒரு சொர்க்கத்தில்போல் திளைத்துக்கொண்டிருந்தது. மூன்றாவது கிழமை அவனது மனைவி மனோவின் தங்கை ரூபிணி இரண்டு நாட்கள் வந்து வீட்டிலே தங்கிவிட்டுப் போனாள். இரண்டு வருடக் காத்திருப்பு ஒட்டுமொத்தமும் ஏமாற்றமாகிவிட்டதைப்போல ஆகிப்போனாள் மனோ. அவன் கப்பலிலிருந்து கொண்டுவந்த வீடு ஏதோ விமானநிலையத்தில் இருப்பதாகவும், அதை எடுத்துக்கொண்டுவர கலாபன்தான் தாமதிப்பதுபோலவும் அந்தரப்பட்டுக்கொண்டு திரிந்தவளின் முகம் பின்னால் கறுத்துச் சிதைந்தே போனது. கலாபன்கூட மாறித்தான் போனான். குழந்தையைத் தவிர வேறெவரிடமிருந்தும் ஒரு சிரிப்பொலி எழவில்;;;;;;;லை அந்த வீட்டிலே. ரூபிணி காரணமாயிருக்கலாம் என்பதுதான் பேச்சாய...

கலாபன் கதை 1

குருவிக்கு ஒரு கூடு வேண்டும் : அது ஒரு 1974இன் ஆடி மாதத்து இரவு. செறிந்து விழுந்து கிடந்தது இருள். ஆனாலும் தலைநகரின் மின்வெளிச்சம் வானத்தை ஓர் ஒளிப்பரவலில் கிடத்தியிருந்தது. படுக்கையில் படுத்திருந்த கலாபன் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். பின் உறக்கம் வராதென்று உறுதியாக, எதையாவது அமைதியாகக் கிடந்து யோசிப்போம் என்ற முடிவோடு நிமிர்ந்து கிடந்தபடி தலையுயரத்தில் இருந்த வட்ட இரு கண்ணாடி ஜன்னல்களினூடு பார்வையை வெளியே எறிந்தான். வானம் தெரிந்தது. நிலா இல்லாத, நட்சத்திரங்களும் இல்லாத வானம். அவ்வப்போது ஒன்றிரண்டு நரைத்த முகில்கள் மிதந்தோடின அதில். பிறகு ஒரே வெளிர் நீலம். அதைப் பார்ப்பதுகூட அவனுக்கு வெகுநேரமாக அலுக்கவில்லை. பார்வை பரவெளியில் பதிந்திருந்தாலும் சிந்தனை அவ்வெளியினூடு சிறகடித்து வீடுநோக்கிப் பறந்துகொண்டிருந்தது. அவன் தனது இளமனைவியையும், குழந்தையையும் ஊரில் தனியே விட்டு வந்திருக்கின்றான். கொழும்பு வந்து பதினான்கு நாட்கள். உடலில் விளைந்திருந்த தாபம் அவனது மனைவியின் அருகை இச்சித்தது. அது ஒரு தகன மண்டபத் தகிப்பை அனுபவிக்கச் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளம் உணர்ந்த காதலின் ...

அம்பை

 நவீன தமிழிலக்கியத்தில்  மிகவுயர்ந்து ஒலித்த பெண்ணியக் குரல் ஒரு விருது பற்றிய அறிவிப்புக்குப் பின்னால் அது குறித்த சலசலப்போ சர்ச்சையோ தவிர்க்க முடியாதபடி எழுந்தே வந்திருக்கிறது. எங்கேயும்தான்;. இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது இவ்வாண்டு அம்பைக்குக் கிடைத்திருப்பதான அறிவிப்பு வெளிவந்தபோது அபூர்வமாக அவ்வாறான சலப்பையோ சர்ச்சையையோ அவதானிக்க முடியவில்லை. நவீன தமிழிலக்கியத்தில் தெளிவுடன் மிகவுயர்ந்தொலித்த பெண்ணியக் குரலாக அவரது எழுத்துக்கள் (மற்றும் செயற்பாடுகளும்) ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் அந்த சலனமின்மையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். அம்பையை எனக்கு நேரில் பழக்கமில்லை. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சிறிதுகாலம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தது மட்டும்தான். அதுவும் நான் ‘இலக்கு’ சிற்றிதழை நடாத்திய காலத்தில் இதழ்கள் அனுப்பியதாலும், கட்டுரை கேட்டு கடிதம் எழுதியதிலும் ஏற்பட்ட தொடர்பே. மே 1996 இல் ‘இலக்கு’வின் ஆறாவது இதழ் தி.ஜானகிராமன் சிறப்பு மலராக வந்தது. நான் கேட்டதற்கு உறுதி அளித்திருந்தபடி அம்பை தி.ஜா.நினைவு மலருக்கு கட்டுரை அனுப்பியிருந்தார். ‘பசு,பால்,பெண்:தி.ஜா...

ஈழம்: கொடிதுகளின் நிகழ் களம்

நால் திசையும் அளாவியெழுந்த ‘நாடாளுமன்ற’ சர்வாதிகாரங்களின் உக்கிர யுத்தபூமிகளாக பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈழம் ஆகிய நாடுகளெல்லாமே ஆகியிருக்கின்றன என்றபோதிலும், ஈழம் எனது பிறப்பைச் சுமந்த மண் என்ற வகையில், அதை முன்னிறுத்திய உரைக்கட்டாக இது அமைவது தவிர்க்க முடியாததாகின்றது. ஆனாலும் மற்ற நாடுகளின் துயரவெளி சற்றொப்பவும் இதற்குக் குறைந்ததில்லையென்பதில் எனக்கு மாறுபாடான கருத்தில்லை. அதனால் அந்நாடுகளின் யுத்த கொடூரங்களது வெளிப்பாடுகள் இதில் தவிர்க்கமுடியாதபடி இடம்பெறவே செய்யும். இவ்வாறான உரைக்கட்டொன்றினை சிறிதுகாலத்துக்கு முன்னரே நான் எழுதியிருக்கவேண்டும். எண்ணமிருந்தும் நடவாது போயிருக்கிறது. சிறுவயது முதலே பொருள்மையக் கருதுகோள்களில் கொண்டிருந்த பற்று, இதற்கான ஒரு தடையாக ஆகியிருந்திருக்க முடியும். ஆனாலும் எவ்வாறோ அது தவறிப்போய்விட்டது என்பது இப்போது நினைக்கத் துக்கமாகவே இருக்கிறது. பொருண்மியக் கருதுகோள்களையும் மேவிய கலாச்சார, தேசிய இன அடையாளங்கள் முன்னிலைப்பாடடையும் ஓர் அசாதாரண சந்தர்ப்பத்தின் பிறப்பும், பொருண்மியக் கருதுகோள்களின் ஆதாரத்தில் எழுந்த அரசியல் கட்சிகளினதும் மற்றும...

ஒரு மரணமும் சில மனிதர்களும்

‘விடுவிக்கப்பட்ட பகுதிக’ளிலிருந்து எழும் அவலங்களின் இலக்கிய சாட்சியம் அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த நூல் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’. தாட்சாயணி எழுதியது. பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு. இதை எழுதியவரைப்பற்றி ஏற்கனவே கேள்வியில் பட்டிருந்தபோதும், இந்நூலைக் கண்டபோது மணிமேகலைப் பிரசுரமாக இது வெளிவந்திருந்த காரணம் சுட்டியே இதை வாங்க மனம் பின்னடித்துவிட்டது. வாசிப்பு என்பது தொழில் சார்ந்த விஷயமல்ல. மனம் சார்ந்தது. பசி வந்தால் ருசி வேண்டாம், நித்திரை வந்தால் பாய் வேண்டாம் என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடையுண்டு. பசிக்கு ருசி வேண்டாமென்றாலும், மனப் பசிக்கு ருசியும் தேவை. அந்த ருசியை அடைவதற்கான பண்டத்தின் பரிமாற்றமும் அழகியலோடு இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும்தான் இருக்கிறது. பண்டத்தின் தன்மையைக்கூட இந்தப் பரிமாற்றத்தின் அழகியல் காட்டிக்கொடுத்துவிடுகிறது என்பதையும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். இந்த அடிப்படையில் என் தயக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன். வாசிப்பை, மைதுனத்தின் கிளர்ச்சி தரும் கூறாகக் கூட விமர்சகர்கள் சிலர் சுட்டியிருக்கிறார்கள். என்றாலும்...

ஈழத்துக் கவிதை மரபு:

 ஈழத்துக் கவிதை மரபு:  மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதை ஈறாகத் தொடரும் கவிதை மரபு 1. ஈழத்துப் பூதந்தேவனாரிலிருந்து நமது இலக்கிய வரலாறு தொடங்குவதாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். அதுவே ஈழத்துக் கவிதை வரலாற்றின் தொடக்கமும் ஆகும். பூதந்தேவனிலிருந்து அரசகேசரி ஊடாக ஐரோப்பியர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் வரை இலக்கிய வரலாறு மட்டுமன்றி கவிதைபற்றிய வரலாறும் இருண்டே கிடக்கிறது. சின்னத்தம்பிப் புலவர் காலத்திலிருந்து அச்சொட்டாகக் கவிதை வரலாற்றைக் கூறமுடியும். சின்னத்தம்பிப் புலவரின் கவிதை வீறும் அற்புதமானதுதான். எனினும் அதற்கு முன்னாலும் ஆற்றல் மிக்க இலக்கியங்கள் சில எழுந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பூதந்தேவனின் சங்கப் பாடலிலிருந்து, அரசகேசரியின் ‘இரகுவம்ச’த்துடன் பின்னால் ‘கோட்டுப் புராணம்’, ‘தால புராணம்’, கனகி புராணம்’ ஆகிய படைப்புகளினூடாக இன்றைய பா.அகிலன்வரையும் உள்ளோட்டமாய் ஒரு மரபின் தொடர்ச்சி ஓடியிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. இது ஈழத்துக் கவிதைக்கு மட்டுமில்லை, எந்த நாட்டுக் கவிதைக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய உள்ளோட்டத் தொடர்புதான். ஆனால் துல...