யுத்தம் (சிறுகதை)

யுத்தம் (சிறுகதை) கிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது. இரவு முழுதும் அதனால் உறங்க முடியவில்லை. சிறிதுநேரம் படுத்திருந்தது. சிறிதுநேரம் கண்களை மூடி தூக்கம் கொள்ளப் பார்த்தது. முடியாது…முடியாதென எண்ணிக்கொண்டுபோல் தலையை ஆட்டியவாறு மறுபடி எழுந்து நின்றுகொண்டது. தன்னை உறுதிப்படுத்த, தெளிவுபடுத்த நீண்டநேரம் தேவைப்படுமென நினைத்துப்போல் மீதி இரவு நெடுக நின்றுகொண்டே இருந்தது. எவ்வளவு யோசித்தும் அதனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எவ்வாறு தன் அரசன் உறுகுணை அரசனுடனான ஒரு நேர்நேர் யுத்தத்திற்குச் சம்மதித்தான் என்ற வினா நெடுநேரத்தின் பின்னரும் ஒரு புதிராகவே அதனுள் இருந்துகொண்டிருந்தது. முதல்நாள் மதியத்துக்குள்ளேயே அனுராதபுரக் கோட்டையினை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடமிருந்து வெண்கொடியேந்திய தூதொன்று வந்த சேதி அதன் காதில் விழுந்துவிட்டது. கடந்த பல மாதங்களின் நிகழ்வுகளில் ஒரு தோல்வியும் அழிவும் தமிழர் அரசைநோக்கி முன்னேறியவண்ணமிருந்த சூழ்நிலை, ஒரு பிரதான சம்பவத்தின் ஏத...