தேவகாந்தன் பக்கம் 9
சிமோன் டி போவுவா’வின் The Blood of others இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் பின்பாதியினது போக்கினை நிர்ணயித்த முக்கியமான நாவலாகக் கருதப்படும் சிமோன் டி போவுவாவின் ‘அடுத்தவர் குருதி’ (The Blood of Others) என்ற தத்துவார்த்த நாவலை அண்மையில்தான் வாசித்தேன். சிமோன் டி போவுவாவின் The Secnd Sex என்ற இரண்டு தொகுப்பு பெண்ணியச் சிந்தனைபற்றிய முக்கியமான நூலோடு சில காலத்துக்கு முன்னரே தொடர்பு ஏற்பட்டிருந்தபோதும், அவரது படைப்பிலக்கிய நூல்கள்பற்றித் தெரிந்திருந்த நிலையில்கூட, அவரது நாவல்களுள் பிரவேசிப்பதற்கான பெரிய ஆர்வமேதும் என்னிடம் எழுந்திடவில்லை. ‘அடுத்தவர் குருதி’யின் வாசிப்பு தற்செயலானதுதான். வழக்கம்போல் டவுண்ரவுணில் எனக்குத் தெரிந்த ஒரு பழைய நூல் விற்பனைக் கடைக்குள் நேரத்தை மறந்திருந்த வேளையில் என் பார்வையில் அகப்பட்டது சிமோன் டி போவுவாவின் அந்த நூல். வாசிப்பை மெதுவாகவே செலுத்த முடிந்திருந்தது. அத்தனைக்கு நாவலின் வசீகரத்தையும் மீறி அதன் நடையும், அது தாங்கி வந்திருந்த சிந்தனைப் போக்குகளும் அடர்த்தியானவையாக இருந்தன. மடித்துவைத்து வாசிக்கையில் முதலில் அட்டைகளும், பின...