நேர்காணல்: தேவகாந்தன் 1
‘அகதிகளிலிருந்து படைப்பாளிகள் உருவாவதைத் தடுக்கும் அக-புற காரணிகள் வலிமையானவை’ (நேர்காணல்: தேவகாந்தன் இன்தாம்(வானவில் -2002) இணைய தளத்துக்காக நேர்கண்டவர்: சூரியசந்திரன்) ‘போர் எந்த நிலையில், எத்தகைய நியாயத்தின் பின்னணியில் இருப்பினும் கொடுமையானதுதான்’ என்று கூறும் தேவகாந்தன், ஈழத்து எடுத்தாளர்களில் முக்கியமானவர். இப்போது சென்னையில் வசித்துவருகிறார். போர்ச்சூழலில் அவதியுறும் ஈழத்தமிழர்களின் துயரமும் சோகமும் நிறைந்த வாழ்வை இவரது பெரும்பாலான கதைகள் பேசுகின்றன. அகிலமெங்கும் பரவியிருக்கும் தமிழ் அகதித் தன்மையை விவரித்து ஐந்து பாகங்களைக் கொண்ட மாபெரும் நாவலை எழுதியுள்ளார். இந்நாவல், புலம்பெயர் இலக்கிய வகையில் முக்கியமான படைப்பாக உள்ளது. சில கவிதைகளையும் எழுதியுள்ளார். ‘இலக்கு’ எனும் இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார். அவருடன்… 0 தமிழ் நாட்டிலுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை எந்த அளவுக்கு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது? சே.யோகநாதனின் ‘இரவல் தாய்நாடு’ நாவல், ‘அகதியின் முகம்’ குறுநாவல் போன்றவையும் , எனது ‘விதி’ நாவலும், ;மனுதர்மம்’ குறுநாவலும், இன்னும் சில சிறுகதைகளும் ...