தமிழ் வென்ற கடலும் கலை தந்த மழையும்!
தமிழ் வென்ற கடலும் கலை தந்த மழையும்! நாட்டிய கலாலயத்தின் பொன்விழாவையொட்டி 'தமிழ்: வென்றெழும் தொன்மொழி' (Thamizh: Resilience of the oldest Language) என்ற நிகழ்வு மார்க்கம் தியேட்டரில் கடந்த 14ஆம் திகதி (ஆடி 2018) மாலை 6.30 மணிக்கு மேடையேறியிருந்தது. மனத்தைச் சிலிர்க்கவைத்த ஒன்றரை மணிநேர நிகழ்வு அது. அதன் பிரதியாக்க(Script)த்திலும் பொருண்மை(Concept)யின் தேர்விலும் நடன அமைப்(Choreograph)பிலுமென நுண்ணிய சில அம்சங்களை கவனமாக முடிந்திருந்தது. தமிழ் என்ற சொல்லிலிருந்து வியாபித்தெழுந்த அதன் வென்றெழுதலின் தீர்க்கம் நிகழ்வு முழுக்கப் பரந்திருந்தது. காட்சிகளின் சிறப்புக்கு ஓவியர் மருதுவினது கைத்திறனும் பின்னணியில் இருந்திருக்கிறது. தொல்காப்பியன், இளங்கோவடிகள், சிவனும் விஷ்ணுவும், சோழப் பேரரசன் ஆகிய ஓவியங்கள் நிகழ்வையும், சிறுவிவரணைநூ(Brochure)லையும் மிகவும் அழகும் அர்த்தமும் படுத்தியிருந்தன. காட்சிகளின் பிரமாண்டத்துக்கும் மிக்க உறுதுணையாயிருந்தன அவை. இசை நாட்டியத்தின் எழுத்துப் பிரதியின் சில இடங்களிலான சரிவுகளையும் சரி...