Posts

கலாபன் கதை: 14

காணாமல் போன கடலோடி கடந்த பதின்னான்கு ஆண்டுகளில் இல்லாததுபோல கலாபன் வேலையற்றிருந்த காலம் அந்தமுறைதான் அதிகமாகவிருந்தது. கடைசிக் கப்பலை விட்டுவந்து ஏழெட்டு மாதங்களாகியிருந்தன. அந்தக் கால இடையில் கொழும்புசெல்லும் வழியில் இரண்டு தடவைகள் திருமலை வந்து ஓரிரு நாட்கள் என்னுடன் தங்கிச் சென்றிருந்தான். அவனது தங்குகைகள் முன்னர்போல் அட்டகாசமாக இருக்கவில்லையென்பதில் அதிசயப்பட ஏதுமிருக்கவில்லை. ஆனாலும் மனச்சோர்வுகளும், மன வேக்காடுகளும் அற்று தன்னிலைமையை உள்வாங்கிக்கொண்ட நிறைவோடுதான் அவன் இருந்திருந்தான். வெளித்தோற்றம் இன்னும் போன கிழமை கப்பலைவிட்டு வந்தவன்போல்தான் இருந்தது. அதேயளவு நீளமாக இல்லையெனினும் தலைமயிரை நீளமாகவே விட்டிருந்தான். உடை வி~யங்களிலும் குறைசொல்ல முடியாதேயிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பானால் ஒரு கடலோடியைப் பார்வையிலேயே இனங்கண்டுகொண்டுவிட முடியும். நீளமான தலைமயிர், வெளிநாட்டு உடை, குறிப்பாக லிவைஸ் அல்லது றாங்க்ளர் பான்ட், அடிடாஸ் சப்பாத்துக்களிலிருந்து அதைச் சுலபமாகக் காணமுடிந்தது. ஆனால் நிலைமை பின்னர் அந்தமாதிரி இல்லை. இலங்கையே சுதந்திர வர்த்தக வலயமாகியிருந்தமையும், மக்கள...

‘மூன்றாம் சிலுவை’

ஒரு பாவி அறையப்படுவதிலிருந்து விலகி ஓடிவிட்ட சிலுவை ‘மூன்றாம் சிலுவை’ நூல் குறித்து சில விமர்சனக் குறிப்புகள் நாவல் என்ற முத்திரையோடு வெளிவந்திருப்பினும் நாவல், குறுநாவல் என்ற எந்தவித வகைமைப்பாடுகளுக்குள்ளும் அடங்காது, சில சம்பவங்களின் சேர்த்தியான ஒரு நீண்ட கதையென்பதே சரியான இதன் அடையாளமாகும். ‘மூன்றாம் சிலுவை’ சொல்லுகின்ற செய்தி, அந்தச் செய்தியின் பின்னணியான நிகழ்வுகளைவிடவும், நூல் கொண்டிருக்கக்கூடிய கட்டமைப்பின் விஷயங்களே முக்கியமானவை. இதன் கட்டமைப்பு பலஹீனமானது என்பதோடு, இதிலுள்ள கவிதைகளின் சேர்த்தியும், நாட்குறிப்பின் மூலமான நிகழ்வுகளின் தெரிவிப்பும்கூட எதுவித நன்மையையும் செய்துவிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இதை ஒரு நாவலாக்கும் அத்தனை முயற்சிகளும் இதில் தகர்ந்தே கிடக்கின்றன. பாலியல் சார்ந்த விஷயங்களையும், பாலியல் நிகழ்வுகளையும் எழுதக்கூடாதென்பதில்லை. தமிழிலக்கியத்தின் இறுகிப்போயுள்ள மரபார்ந்த ஒவ்வொரு முறிப்பையும் கரகோஷத்தோடு வரவேற்க தீவிர வாசக உலகம் தயாராகவே இருக்கின்றது. எஸ்.பொ.வின் ‘தீ’ அப்படித்தான் வரவேற்புப் பெற்றது. ஆனால், அது ஒரு தேவையின் அளவுக்கே தொடர்ச்சியைக்...

கலாபன் கதை:13

கைவிடப்பட்ட கப்பல் வழக்கு காலம் எதனையும், எவரையும் மாற்றுகின்றது. கலாபனும் மாறியிருந்தான் என்பதை அவன் போனதடவை வந்திருந்தபோது நான் கண்டிருந்தேன். வீட்டு நிலைமை குறித்த அவனது கவனம் அதிகமும் என்னைக் காண திருமலை வந்திருந்த அவனது பேச்சில் இழையோடிக்கொண்டிருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், தான் கூடவிருந்தால்தான் கல்விச் சிரத்தையும், ஒழுக்க மேம்பாடும் ஏற்படுமென்று அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அதிசயமாகவிருந்தது. ஆனாலும் ஆச்சரியப்படவில்லை. காலம் எவரையும் மாற்றுகின்றதுதான். ‘கொழும்பு செல்கிறேன், கப்பல் வேலையெடுப்பதொன்றும் முன்புபோல் சுலபமானதாக இல்லை, கடலிலே மிகப் பெரும் நவீன கப்பல்களின் வருகை, ஓடிக்கொண்டிருந்த ஆயிரக் கணக்கான சிறிய சிறிய பழைய கப்பல்களை இரும்பு விலைக்கு விற்கும்படியாக ஆக்கிவிட்டது, கன காலமில்லை, கொழும்பில் ஒரு மாதம்வரை தங்கி முயற்சித்துப் பார்ப்பேன், முடியாவிட்டால் பம்பாய் போய்விடுவேன், அங்கேயும் என்ஜினியர் வேலைதான் வேண்டுமென்று காத்திருக்க மாட்டேன், என்ஜின் றூம் வேலை எதுவானாலும் சேர்ந்துவிடுவதே எனது எண்ணம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றவன், ஒரு மாதத்திலேயே பம...

ஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’

‘ஆயிரம் முலைகளோடு வந்த  ஆதித் தாய்’ தமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையிலிருக்கும் மறைந்த முதலமைச்சர் திரு. காமராஜர் ஆரம்பித்துவைத்த சத்துணவுத் திட்டத்துக்கு நிகரான உணவுத் திட்டமொன்று, ஐம்பதுக்களில் வட இலங்கைக் கல்வி வட்டாரப் பள்ளிகளில் நடைமுறையிலிருந்தமை எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது. சின்ன இடைவேளை எனப்பட்ட 10.15 மணி இடைவேளையில் காலை ஆகாரமாக பாலும், மதிய உணவு இடைவேளையான 12.45க்கு பணிஸ_ம் கொடுத்தார்கள். பிரித்;தானியர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த உணவளிக்கும் முறைமைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கந்தர் மடப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்வரை சின்ன இடைவேளையில் பால் கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னால் அது நின்றுபோக மதிய வேளையில் பணிஸ் கொடுப்பது தொடர்ந்துகொண்டிருந்தது. பின்னால் அதுவும் நின்றுபோனது. எப்போதென்று தெரியவில்லை. அதேவேளையிலேயே வட இலங்கைக் கல்வி வட்டார அனைத்துப் பள்ளிகளிலும் நின்றுபோயிருத்தல் கூடும். மதிய உணவு இடைவேளை நேரமளவில் கந்தர் மடப் பள்ளிக்கூட வளாகத்தின் நிறைந்த மாமரங்களிலெல்லாம் ஊரிலுள்ள காக்கைகள் முழுவதும் பறந்துவந்து கூட...

கலாபன் கதை: 12

கூட்டிலிருந்து விடுதலையாக்குதல் எனக்குத் திருமணமான பின்னர் தன் சரீர இச்சைகள் புரியப்பட்ட பெண்கள்பற்றி கலாபன் எனக்கு மிதமாகவேதான் எழுதினான் என்று சொல்லவேண்டும். தான் கொண்டிருந்த உணர்வுகள் என்னையும் ஈர்த்துவிடக்கூடாது என்பதில் அவன் கவனம்கொண்டிருந்தான் என்பதை அந்தத் தவிர்த்தலிலிருந்து நான் புரிந்துகொண்டேன். அவனது கடிதங்களால் எழுச்சியடைந்து கப்பலேற சிறிதுகாலம் முயன்றுகொண்டிருந்தவன்தானே நானும்! அதிகமாகவும் அவன் எழுதியவை உடல் மன இச்சைகளுக்கு இயைந்துவிடும்படியான சூழ்நிலைகளை விளக்குவனவாக மட்டுமே இருந்தன. தாய்லாந்திலிருந்து அவன் எழுதிய கடிதம், அவன் எழுதிய கடிதங்களுள் முக்கியமானது. சரீரார்த்தமான ஆசைகளும், மனோவுணர்வு சார்ந்த காதல் கருணை போன்றனவும் வௌ;வேறு திசைகளில் பயணம் செய்யும்பொழுது வாழ்க்கை தளும்பிவிடுகிறது என அதில் அவன் எழுதியிருந்தான். அவற்றின் ஒரே திசைப் பயணமே ஒருவனை ஏகபத்தினி விரதனாகவும், ஒருத்தியை ஏகபுரு~ விரதையாகவும் ஆக்குவதாக அவன் சொல்லியிருந்தான். ‘ஒரு குடும்பஸ்தனுடைய மன உடல் உணர்வுகளினது வௌ;வேறு திசைகளினூடான வழிப்பயணங்கள் என்னைப்போன்ற ஊதாரிகளினைத்தான் உருவாக்குகின்றது. நீண...

ஒரு முதுபெண் உரைத்த வாழ்வுபற்றிய பாடம்

ஒரு முதுபெண் உரைத்த  வாழ்வுபற்றிய பாடம் வாழ்வின் சஞ்சரிப்பு எல்லைகள் விசாலித்துக்கொண்டே இருக்கின்றன. புவிசார் அறிவுப் புல வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சிகளை இதன் காரணங்களாகக் கொள்ளலாம். வண்டி மாட்டுப் பயணத்திலிருந்து கார், பஸ் பயணங்களாகியமை இதன் ஒரு வெளிப்பாடு. பின்னால் ரயில், விமானப் பயணங்களாக அவை மாற்றங்களைக் கண்டன. சரீரார்த்தமான இச் சஞ்சரிப்புகளும் மாறி, இருந்த இடத்திலிருந்தே பொறிகள் நினைத்த இடமெல்லாம் சஞ்சரித்து வரும் மிகு தொழில்நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்தை இன்று நாம் வந்தடைந்திருக்கிறோம். பத்தாயிரம் மைல் தொலைவிலுள்ளவருடன் முகம் பார்த்துப் பேச சுலபமாக இன்று முடிந்துவிடுகிறது. இவ் அகலுலகச் சஞ்சரிப்பில் எதிர்ப்படும் சம்பவங்கள் கணக்கற்றவை. ஆயினும் வாழ்வின் ஆரம்பம் முதல், கனதிபெற்று அகல மறுத்ததாய் மனத்தில் உறைந்துபோக சில சம்பவங்களேனும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு நினைவினடுக்கில் படைபடையாய் நிறைந்து கிடக்கும் சம்பவங்கள் ஒரு கோடி இருக்குமோ? இருக்கலாம். சம்பவங்கள் நடந்த கணத்தோடு முடிந்து போபவைதாம். ஆனாலும் நினைவுக் குழிக்குள் போய்விடுகிற சம்பவங்கள் தம்முள் மீட்கப்பட்டுக்கொண்ட...

கலாபன் கதை: 11

இருந்தால் மனைவி! போனால் பரத்தை! 1985இல் வீடு திரும்பிய கலாபன் மறுபடி கப்பலெடுப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு புதிய கார் வாங்கி, அதை யாழ்ப்பாணம் முழுக்க முழுவேகத்தில் ஓடித்திரிந்து, ஒருமுறை பருத்தித்;துறை செல்லும் வழியில் ஒரு மினிவானுடன் விபத்துக்குள்ளாகி, இரண்டு மாதங்களாக கராஜ்ஜுக்கு அலைந்து திருத்தியெடுத்து, அடுத்த ஆறாவது மாதம் வந்த விலைக்கு அதை விற்று என்று பல சீரழிவுகளையும் அனுபவித்த பின்னர்தான் அதுவும் முடிந்திருந்தது. கலாபன் எங்கோ அடிபட்டிருந்தான் என்பதை சிலகாலமாகவே நான் புரிந்துகொண்;டிருந்தேன். மெல்லவோ விழுங்கவோ முடியாத ஓர் மனவலியின் விளைவே அந்த அவனது வரம்புமீறிய குடியென்று ஊகிக்க பெரிய அனுபவமொன்றும் வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் வெளிப்படப் பேசி அவனை ஆறுதல்படுத்த அந்த ஊகத்தில் தெரிந்த காரணம்மட்டும் போதுமாயிருக்கவில்லை. மனமென்பதுதான் என்ன? உடலின் எந்தவிதமான உறுப்பாக இல்லாதும், உணர்வுகளின் ஊற்றாய் முழு மனித வாழ்வியக்கத்துக்குக் காரணமாயுமிருக்கிற ஒரு புள்ளிதானே! அது பலருக்கு நீராலானதாய் அமைந்திருப்பது விந்தைகளின் உச்சம். நீர் சிறிய காற்றினலைவுக்கும் சலனமாக...