இனியும், தமிழர் அரசியலும்
வரலாற்றிலிருந்து எவரும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் தொடரும் வரலாற்றுப் போக்குகளிலிருந்து நாம் அறிந்துகொண்டிருப்பது என்ற பிரபலமான கருதுகோள் ஒன்றுண்டு. வராலாறு திரும்பத் திரும்ப ‘போல’ வருவதின் காரணம் அதன் இயங்கு திசையின் காரணமாயுமிருக்கலாம் என்பது சரியானதாகவே தோன்றுகிறது. இலங்கைத் தமிழரின் வரலாறும் திரும்பத் திரும்ப ஏமாற்றத்தோடும், 2009இல் பெரிய அழிவோடும், முடிந்திருப்பதனையும் இந்தத் தடத்தில் வைத்துப் பார்க்கமுடியும். சற்றொப்ப இரண்டரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் தடைமுகாங்களில் படும் அவஸ்த்தைகளை தினமும்தான் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்துகொண்டிருக்கிறது. இதற்கும் மேலாக ஐம்பதினாயிரம் தமிழர்கள் குழந்தைகள், பெண்கள், ஆண்களாக கொலைப்பட்டிருக்கிறார்கள் என்பது அதற்கும் மேலான துயரத்தை விளைப்பது. மட்டுமா? ஒரு நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட முடியாத பொருளாதார, கல்விப்புல, ஆள்புல இழப்புக்கள் நேர்ந்துள்ளதை எந்த இழப்புக் களத்தில் வைத்துப் புரிந்துகொள்வது என்பது புரிபடவேயில்லை. ஆக, திரும்பத் திரும்ப வரும் இந்த அழிச்சாட்டியங்களுக்;கான ஒரு தவறு தமிழர் அரசியலில் ஆரம்ப காலம்தொட்டு இருந்து வந்திருப்பதைய...