இனப் படுகொலைகளும்
இனப் படுகொலைகளும் உலக நாடுகளின் மவுனங்களும் -தேவகாந்தன்- யுத்த காலக் குற்றங்களுக்காக சிறீலங்கா அரசு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்கள் உட்பட சில அமைச்சரவை உறுப்பினர்களும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைப் படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்படுகின்ற தருணத்தில், யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் எந்த சர்வதேச அமைப்பின் முன்னரும் சாட்சியமளிக்கத் தயாராகவிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசினால் கைதுசெய்யப்பட்ட செய்தி புதியதில்லை. புதுமையானதும் இல்லை. இதுவும் இன்னும் இதுபோன்ற பலவும் எதிர்பார்க்கப்பட்டவைதான். ஏறக்குறைய சர்வாதிகார ஆட்சியின் நிலைமையை அடைந்திருக்கும் சிறீலங்காவுக்கெதிரான சர்வதேசத்தின் குரல் மவுனித்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம். ஆனாலும் இந்த உரைக்கட்டில் அதுபற்றி நான் அலசப்போவதில்லை. திட்டமிட்ட ஓர் இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கும் சிறீலங்கா, சர்வதேசத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறதா என்பதுபற்றியும், உலகின் பல பாகங்களிலும், குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இரு தசாப்த காலத்துள் நடந்துள்ள இனப்படுகொலைகளையும், அக்காலங்களில் இந்த சர்வதேச சம...