உண்மையைத் தேடுதல்….
உண்மையைத் தேடுதல்…. -தேவகாந்தன் உண்மையைத் தேடுதலென்பது அகம் சார்ந்த வி~யமாக காலகாலமாகப் பார்க்கப்பட்டு வந்ததென்பiதைத்தான், இதுவரையான மனித குல சிந்தனை வரலாறு தெரிவிக்கின்றது. அந்த உண்மையைக் கண்டடைவதற்கான ஞானம் தனிதனிதனின் இருப்பும், வாழ்வும், மறைவும், மறைவின் பின்னான வாழ்வுமென்ற தளங்களில் தேடப்பட்டதை மதம் சார்ந்த ஞானிகளில் வெளிப்பட்ட கருத்துக்கள் தெளிவாகக் சொல்லிநிற்கின்றன. சத்தியத்தைக் காண காந்தியடிகள் நடத்திய ஒரு பெரும்வாழ்வு சத்திய சோதனையாக அறியப்பட்டது. ஷஅஹம் பிரஹ்மாம் அஸ்மி’ என்ற வாக்கியத்தின் அடிச்சிந்தனையாய்த் தொடர்ந்த தேடல் அது. தனிமனித உண்மையன்றியும் ஒரு உண்மை இருப்பதனை கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ சமூக உண்மையாக முன்வைத்தது. சாதாரணன் இப்போது குழம்புகிறான், உண்மை என்பது எதுவென. உண்மை எப்போதும் ஒவ்வொருகாலத்தின் தேவைக்குமேற்ப கட்டமைக்கப்பட்டு வந்ததென்பதே சமூக விஞ்ஞானத்தின் அறிகை. நேற்றைய சமூகத்தின் உண்மையல்ல, இன்றைய சமூகத்தில் இருப்பது. வரலாறானது எவ்வாறு அதிகாரத்தினால் எழுதப்பட்டதோ, அதுபோல் அதிகாரத்தை விரும்பிய குழுக்கான உண்மைகளையே அவை கட்டமைத்தன. மதம் முடியைவிட அதிகார...