உண்மையைத் தேடுதல்\ சாளரம்:3
தேசாந்திரி பக்கத்து வீட்டிலிருந்து லீசாவோடு வெளியே வந்த ரோனி என் வீட்டுக்கு முன்னால் வந்ததும் லீசாவின் இழுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டு வழக்கம்போல் சற்றுநேரம் அதிலேயே தாமதித்து நின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நாய் என்னை நன்கு அறி ந்திருந்தது. மாலையில் உலாத்துகைக்காக அழைத்துச் செல்லும்போது வந்து ஒரு முறை என் கால்களை மணந்து பார்த்தும், என் முகத்தில் முகர என்மீது தாவ முயன்றும், தன் காலை என் கையில் போட்டு குசலம் விசாரித்தும்விட்டு அப்பால் செல்லுகிற நாய் அது. லப்ராடர் இனம். மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்தில் இரண்டடி உயரத்தில் மிக அழகாக இருந்த ஆண் நாய். சிலநாட்களுக்கு முன்னால் ஒரு மாலை நேரத்தில் உலாத்துகை வெளிக்கிட்ட ரோனி என் வீட்டுக்கு முன்னால் வந்ததும் நின்றது. சற்று இருட்டாக இருந்ததால் என்னைக் காணாமல்தான் தேடுகிறதோவென நினைத்து அசைவைக் காட்டினேன். உள்ளுக்குள்ளாய் என்னோடு தன் நாய்க்கிருக்கும் நட்பை விரும்பாத லீசா முடிந்தவரை முயன்று ரோனியை அப்பால் இழுத்துச்செல்லவே அப்போதும் முயன்றுகொண்டிருந்தாள். ஆனால் என் அசைவைக் கண்டுகொண்ட நாய் வழக்கம்போல குழைந்துகொண்டு ...