Posts

Showing posts from 2026

நினைவுக் குளிப்பு 1

  நினைவுக் குளிப்பு   நினைவுகளைத் தேடித் தேடி ‘திகம்பர நினைவுக’ளாகவும், ‘கலாபன் கதை’களாகவும், ‘காலக் கனா’ மற்றும் ‘குருடர்க’ளாகவும் எழுதி தொகுப்புகளாக்கிய பின்னரும், மனத்தின் ஆழவும், அதன் பக்கங்களில் ஒட்டிக்கொண்டும் கிடந்து நினைவுகள் இன்னும் வெடித்தெழவே செய்துகொண்டிருக்கின்றன. அவை, திகைக்க வைக்கும்படி முக்கியமான, என்னை உருவாக்கிய மூலாதாரமான சம்பவங்களாகவும் இருக்கின்றன. அவை, எவ்வாறு இதுவரை காலத்தில் எனக்குள் தவறிப்போய்க் கிடந்தனவென நானறியேன். அதனால் மேலும் ஒரு நினைவுக்குளிப்பை நடத்த நான் தீர்மானித்தேன். அந்த எழுச்சி முகிழ்ந்த கணம் இது.   1.     பொன்னம்மா ரீச்சர் முகங்கள், குறிப்பாக அதிலுள்ள கண்கள், உள்ளங்களின் கண்ணாடி எனப்படுகின்றன. எனக்கு மிக அணுக்கமாயிருந்த பழைய முகங்களென்று தேடினால் இரண்டு முகங்களே உடனடியாகத் தோற்றமாகின்றன. ஒன்று, எனது அம்மாவினுடையது. மற்றது, பொன்னம்மா ரீச்சருடையது. பொன்னம்மா ரீச்சர் என்னை அரிவரியில் படிப்பித்த ஆசிரியர். நான் அரிவரி படிக்கப் போன காலத்தில், எங்கள் வீட்டுக்கு அண்மையிலிருந்த பள்ளிக்கூடம், நிர்வாக ...