Posts

அதை அதுவாக 15

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 15 ‘திருக்குறளில் படிமத்தின் பயில்வுகள்.’ - தேவகாந்தன் - (38) பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். (பொருள், அரசு, ஊக்கமுடைமை 9) குறள் 599 பருத்த உடம்பும், கூரிய தந்தங்களும் உடையதாயினும் புலி தாக்க வந்தால் யானை அஞ்சுமென்பது இந்தக் குறளின் பொருள். வெளிப்படையான அர்த்தத்தில் பார்த்தால் ‘ஊக்கமுடைமை’ என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் பொருத்தம் பெறாது. அதனால் ‘ஊக்கமுடைய’ என்ற பெயரெச்சத்தை வருவித்து ஊக்கமுடைய புலி எனப் பொருள் கொள்ளவேண்டும். இவ்வாறு வருவித்துப் பொருள்கொள்ளும் மரபு தமிழ்ச் செய்யுளியலில் உண்டு. இந்தக் குறளுக்கு இரண்டு குறள்கள் முந்திப் பார்த்தால் அங்கேயும் ஒரு யானை வந்திருப்பது தெரியும். அந்த யானையின் பருத்த மேனியில் அம்புகள் புதையுண்டு நிற்கின்றன. இருந்தும் அது தன் கம்பீரம் குலையாமல் நிற்கின்றது. அப்படிப் பெருமை பார்க்கிற வகையின விலங்குதான் யானை. அப்படிப்பட்ட யானையே ஊக்கம் நிறைந்த புலி தாக்கினால் அஞ்சுமாம். ஊக்கமுடைமையின் சிறப்பை இது இங்கே அழுத்தி நிற்கிறது. உவமை, உருவகம் என்று இயைபு பெறாத இடத்தில...

அதை அதுவாக 14

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 14 ‘தகுந்த மகிழ்ச்சியே எனினும் அளவாகத் திளைக்கவேண்டும்.’ - தேவகாந்தன் - (37) அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. (பொருள், அரசு, தெரிந்துதெளிதல் 3) குறள் 503 அரிய நூல்களைத் தெளிவாகக் கற்றவரிடத்திலும்கூட நன்கு கவனித்தால் சிறிது அறியாமை இருப்பது தெரியவரும். அவர்கள் அரிய நூல்களைக் கற்றவர்கள். அவற்றையும் நன்கு கற்றவர்கள். அப்படியானவர்களிடத்தில்கூட அரிதாகவேனும் சிறிது அறியாமை இருக்கவே செய்கிறது. எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் இந்த வரையறைக்குள் அடங்கியவராகவே இருப்பர். இதை வேறொரு கோணத்தில் விளக்குகிறது அடுத்த குறள். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்பது அது. ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் தெரிந்து அவற்றுள் எது மிகையாக உள்ளதோ அவரை அத் தன்மைத்தவராய்த் தேரவேண்டும் அல்லது தள்ளவேண்டும். சொல்லப்போனால் இந்த இரண்டு குறள்களும் ஒரே அர்த்தத்தின் இரண்டு பகுதிகளே. இன்மை எவரில் இல்லை? அவரவரும் படிக்கும் படிப்பு, பழகும் பண்பு, மனத்தின் வலிமை அளவுக்கு அது அழிந்துகொண்டு வரும். மறைந்துவிடாத...

அதை அதுவாக 13

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 13 ‘புகல் எப்போதுமே இருத்தலின் தளம் ஆவதில்லை.’ - தேவகாந்தன் - (36) எண்ணியார் எண்ண மிழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். (பொருள், அரசு, இடனறிதல் 4) குறள் 494 ஒருவனது செயற் திட்டத்தை வெல்வதற்கான கருத்தெண்ணம் உடையவர்கள், அவன் தக்க இடத்தைச் சார்ந்திருந்து விரைந்து கருமமாற்றும்போது அக் கருத்தெண்ணத்தையே கைவிட்டுவிட வேண்டும். ஒரு செயலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் காலத்தைப்போல், இன்னொரு முக்கியமான அம்சம் இடம். காலம் அல்லது பருவம் எனப்படுகிற அம்சம் அதிகமாகவும் காத்திருத்தலோடு தொடர்புடையதாக இருக்கிறது. இடம் அல்லது தளம் எனப்படுகிற இந்த அம்சமோ பெரும்பாலும் கற்றறிவு பட்டறிவுகள் சார்ந்த நிலைப்பாட்டில் வலிமையைப் பிரயோகித்தலின் தளமான கருத்தாகிறது. ஆனாலும் இந்த இடம் அரணில்லை. அரண் எங்கேயும் ஒரு புகல்தான். புகல் எப்போதுமே இருத்தலின் தளம் ஆவதில்லை. அது ஒரு கால அவகாசத்துக்குக் காத்திருப்பதற்கான இடம் மட்டுமே. தன் தகுதியுடனும் வலிமையுடனும் தன் வாழ்வுக்கான பிரதேசம்தான் தளம் என்ற வகையில் வரும். ‘துன்னி’ என்ற சொல் இங்கே முக்கியம். அது...

அதை அதுவாக 12

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 12 ‘விழித்திருப்பது அறிவும்கூடத்தான்’ - தேவகாந்தன் - (34) எவ்வ துறைவ துலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. (பொருள், அரசு, அறிவுடைமை 6) குறள் 426 சமூகம் எவ்வாறு இயங்குகிறதோ அதற்கேற்றவாறு அமைந்து தானும் நடந்துகொள்வதே அறிவு. ‘ஊரோடு ஒத்தோடு’ என்று ஒற்றை வரியில் அவ்வை சொன்னது இதைத்தான். ஆனால் இதை அறிவென்கிறபோதுதான் புரியாமலிருக்கிறது. அறிவென்பது அறியாமைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அடங்கிப் போக வேண்டுமா என்ற கேள்வி இங்கே விஸ்வரூபம் காட்டி எழுந்துவிடுகிறது. ஊரோடு ஒத்தோடினால் அறிவினால் என்ன பயன்? ‘நான் விழித்திருக்கிறேன்’ என்ற புத்தனின் வார்த்தையில் மிளிர்வது பேரறிவல்லவா? ஜாக்கிரதம் மட்டுமில்லை, விழித்திருப்பது அறிவம்கூடத்தான். அப்படியிருக்கையில், உலகத்தோடு ஒட்டிப் போய்விடு என்று வள்ளுவன் சொல்வது முரணல்லவா? அடங்கிப் போ என்று எப்படிச் சொல்ல முடியும்? தனிமனித நல்வாழ்வுக்கான போதம் சொல்வதே வள்ளுவனின் நோக்கம். அதுதான் அவன் சார்ந்திருந்த சமண மதத்தின் போக்கினுக்கும் உகந்ததாய் இருந்தது. ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய...

அதை அதுவாக 11

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 11 ‘படைப்பின் வெளிப்பாட்டு ஊடகம் எதுவாயிருந்தாலும் அது அறிதலுக்கானது என்ற விவாதத்தை வள்ளுவன் கிளர்த்துகின்றானா?’ - தேவகாந்தன் - (32) கற்றில னாயினும் கேட்க அஃதொருவன் ஒற்கத்தின் ஊற்றாந் துணை ( பொருட்பால், அரசு இயல், கேள்வி 4 ) குறள் 414 ஒருவன் கல்லாதவனாயினும் கற்றார் பேச்சைக் கேட்கவேண்டும். அது தளர்ச்சி ஏற்படும் காலத்தில் ஊன்றுகோல்போல, பிரச்சினைகள் தோன்றும்போது அவற்றை நீக்குவதற்கான சிந்திப்பின் ஆதாரமாக நின்றிருக்கும். 0 ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்றது புறம். கற்பது நல்லதேயெனினும் எத்தனை பேரால் அது சாத்தியப்பட்டுவிடுகிறது? கற்காமல் விட்டுவிடுவதற்கு நிறையப் பேருக்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் தலையாயது வறுமை. எக்காரணத்தை முன்னிட்டு ஒருவன் கற்காமல்விட்டாலும், வசதி கிடைக்கும்போதெல்லாம் அறிவோர் வார்த்தைகளைக் கேட்கவேண்டும் என்கிறான் வள்ளுவன். கதை சொல்லுதல், புராண உரைப்பு, உரை விளக்கம் கூறுதல் போன்ற மரபுகள் பொதுமன்றுகளிலே, கோவிற் சந்நிதிகளிலே அக் காலத்தில் நிறையவே...

அதை அதுவாக 10-1

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 10-1 ‘குறளை ஒரு எண் கணக்கில் வள்ளுவன் பாடிவைத்திருப்பது சாத்தியமா?’ - தேவகாந்தன் - 4 செல்வத்தைச் சேர் என்று அறத்துப் பாலில் ஒருபோது வற்புறுத்திய வள்ளுவன் இங்கே செல்வத்தைச் சேர்ப்பதனை எள்ளிநகையாடுகிறான். இது ஒருவகை எள்ளல்தான். தீயனவெல்லாம் செய்தே செல்வம் சேர்க்கப்படுகிறதென்பது மகா ரசமான எள்ளலும். பணத்தைச் சேர்ப்பதையும், அதைச் சேர்த்தவன் உடைமையாளனாய் ஆவதையும் முதலாளியம்தான் ஊக்குவிக்கும். வள்ளுவன் செய்துவிட முடியாது. அதனால் செல்வச் சேர்ப்பு அவனுக்கு உபகாரம்பற்றியது, அறக் கொடைகள் பற்றியதுமட்டுமே. அப்படியே செல்வந்தனாய் வர முடியாதுபோனாலும் கவலையில்லை என்றிரு என்பதே வள்ளுவ உபதேசம். ஆனாலும் ஒருவன் எவ்வளவுதான் பிரயத்தனம் பண்ணினாலும் செல்வந்தனாகிவிட முடியாது என்கிறான் அவன். ‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ (குறள் 377) என்பதில் இந்த நிச்சயத்தை விழுத்துகிறான் அவன். அதுபோல தனக்கென ஆக வேண்டிய செல்வத்தை வேண்டாமென்றிருந்தாலும் அது போகாது என்பதும் அவன்தான். அந்தக் குறள் இது: ‘பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் ச...

அதை அதுவாக 10

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 10 ‘இந்த உலகம் இருவேறு தன்மைகளை உடையதாக இருக்கின்றது.’ - தேவகாந்தன் - (31) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும். (அறம், ஊழியல், ஊழ் 10) குறள் 380 கெட்ட நிலைமைகளை விலக்குவதற்கான மார்க்கம் குதிர்ந்துவரும் வேளையில், அதை முந்திக்கொண்டும் ஆட்சிசெய்ய வருகிற விதியைவிட வலிமையானது ஏதுமில்லை. 1 பத்துக் குறள்களுமே ஏறக்குறையச் சமமான முக்கியத்துவம் வாய்ந்ததாக வரும் திருக்குறளின் ஒருசில அதிகாரங்களுள் ‘ஊ’ழும் ஒன்று. மேலே காட்டப்பட்டுள்ள குறளில் விதியின் அளப்பரிய மொய்ம்பு தெரியும். காலத்தோடும் ஊரோடும் ஒட்டிச்சென்று நல்லனவெல்லாம் கண்டுணர்ந்து அவற்றை விதிகளாகத் திரட்டித் தொகுத்த நூல்தான் திருக்குறள் எனப்படுகிறது. ஊழ்கூட முற்றுமுழுதாக அக் காலகட்டத்து சமூகச் சிந்தனைகள் அப்படியே தொகுக்கப்பட்ட அதிகாரமென்றுதான் சொல்லத் தோன்றும். ஆனாலும் கூர்ந்து கவனிக்கிறபோதுதான் பாடல்களிடையே நிற்கும் மௌனங்களும், அர்த்தம் உள் வெடிக்கவெடிக்க நின்றிருக்கும் சொல்களும் வள்ளுவனின் கலக மனநிலையை வெளிக்காட்டும். ஊழ் என்பது ‘இயற்கையின் சுழற்சி’ என்ற...