Posts

சாம்பரில் திரண்ட சொற்கள் - 10

Image
  அன்று முழுக்க பனி கொட்டிக்கொண்டிருந்தது. பஞ்சுப் பொதியை அவிழ்த்து கவிழ்த்து வைத்துக் குலுக்குவதுபோல் காற்றில் அலைப்புண்ணாத பனி இறங்கியது. நிலக் கீழ் வீட்டின் தன் அறையில் சோபாவில் அமர்ந்திருந்தபடி எல்லாம் சிவயோகமலராலும் கண்டுகொள்ள முடிந்திருந்தது. நிலத்தில் படியத் துவங்கிய பனி ஜன்னலின் கீழ்மட்டத்தை எட்டுமளவு உயர்ந்துவிட்டிருந்தது. இவ்வாறு தொடர்ந்து பெய்தால் கண்ணாடியை மூடும் திரையாகிவிடவும் கூடும். அப்போது அவளிருந்த அறைக்கு கல்லறையென்றில்லாமல் வேறு பெயர் என்ன? ஜீவசமாதி! மலருக்கு மனம் துண்ணென்றது. உடம்பில் ஒரு பதற்றம். ஆரம்பத்திலிருந்தே அம்மாதிரி வீட்டில் குடியேறுவதை அவர் மறுத்து வந்திருந்தாலும், சுந்தரத்தின் பொருளாதார அனுகூலத்தின் விளக்கத்தில் நடராஜசிவம் ஒத்துக்கொண்டுவிட மறுப்பதில் தனக்கான ஆதாரம்   அவர் அற்றுப்போனார். இன்னும் கொஞ்சம் அழுத்தமாய்   தான் இருந்திருக்கலாமென அப்போது நினைத்தார். நிலைமைக்குத் தகுந்ததான அந்த முடிவை, மேலே பெரிய பிணக்கின்றி அவர் ஒத்துக்கொண்ட முதல்   சந்தர்ப்பம் அதுவாகவே இருந்தது. வெளியே பனித் தூவல் கண்டதுமே உடனடியாக வெளியே ஓடிச்செல்ல மனம...

சாம்பரில் திரண்ட சொற்கள் – 9

Image
  9   காலை பத்து மணியளவில் தான் வெளியே போய்வருவதாக தனக்கேபோல் சொல்லிக்கொண்டு சுந்தரம் போவதை மலர் கேட்டிருந்தார். சாப்பாட்டு நேரத்துக்கு முன்னம் வந்துவிடுமென்று தெரியும். அனுமானம்தான். வாழ்க்கை கடந்த சில வருஷங்களாக அவ்வாறுதான் அவருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. சலிப்பு என்பதன் முழு அர்த்தத்தோடு தன் வாழ்க்கை அவ்வாறு அடங்கிக்போனதேனென்று அவருக்குத் தெரிந்திருந்தும் விடுபடும் வழியைத்தான் காணாதிருந்தார். உடல் வாதை, பெருவுடம்பின் அசைவிறுக்கம், மனவீறலெல்லாம்தான் அதற்குக் காரணம். தன் பார்வையின் கடூரங்களும், தெறிக்கும் வார்த்தைகளின் வெம்மையும் அப்போதெல்லாம் அதிகமோவென சிலவேளை எண்ணினாலும், ஏதோ சுந்தரம்தான் அதற்கான காரணஸ்தரென அவர் கொதித்துவிடுகிறார். அதற்காக சுந்தரத்திற்காக வருத்தமேதும் கொள்ளவும் மாட்டார். தன் தோழி சிவத்திக்கு இரங்குமளவுகூட அவர் சுந்தரத்திற்கு இரங்கிவிடுவதில்லை. அவளோடான நட்பு மிஞ்சிப்போனால் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு மேலேயில்லை. சுந்தரத்தோடான பந்தமோ சற்றொப்ப அரை நூற்றாண்டு. எனினும் இப்போது ஒட்டு   விட்டுப்போன உறவாகிவிட்டது அது அவரளவில். அந்த ஒட்டுவிட்ட ஸ்திதி...

சாம்பரில் திரண்ட சொற்கள் 8

Image
    15 வெளியே சுந்தரம் தூங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள் மலர். அது தூங்குகிற நேரமது. தூங்கி, விழித்த பின் படுக்கையில் கிடந்து என்ன செய்யுமோ? அப்போதும் தூங்குமென்றுதான் அவள் நினைத்திருக்கிறாள். கூடத்துள் அமைதி நிலவியிருந்தது. வெளி மரங்களில் குருவிகள் சில துயிலருண்டு கிலுகிலுத்து மறுபடி அமைதியாயின. தூரத்து நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களின் ‘சர்…’ரென்ற பேரிரைச்சல் அவ்வப்போது மெதுவாய் காற்றில் வந்தடைந்தது. அத்தகு சூழ்நிலை அவளுக்குப் பிடிக்கும். மனப் பறவையை கதவு திறந்து அவள் வெளிவிடுகிற சமயமது. அவளே கூட்டின் கதவு திறந்து பறவையை வெளிவிடும் சுதந்திரப் பிரகடனப்படுத்தல் இல்லையது. பறவையே தன் கூடு திறந்து வெளிவந்து அவள் கால காலமும் உலவிய இடமெல்லாம் பறந்துசென்று , அவள் கண்ட கனவுகளெல்லாம் மீளக் கண்டு, அவளனுபவித்த இன்பம் துன்பம் ஏக்கம் ஆதியவற்றுள்ளெல்லாம் மீண்டும் திளைத்துவிட்டு திரும்ப ஒரு சத்தத்தில்    ‘டபக்’கென கூட்டுக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்டு கதவைச் சாத்திவிடும் பெற்றி கொண்டது. அவளும் யதார்த்தத்தில் வந்து விழுந்து சமகால உடல் உபாதைகளையும் மன வேக்காடுகளையும் அனுபவிக்க...

சமகால இலங்கை நாவல்களில் முக்கியமான வரவு!

  தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் ‘பீடி’: (சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு)   தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும்   கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘...