ஈழத்துக் கவிதை மரபு:
ஈழத்துக் கவிதை மரபு: மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதை ஈறாகத் தொடரும் கவிதை மரபு 1. ஈழத்துப் பூதந்தேவனாரிலிருந்து நமது இலக்கிய வரலாறு தொடங்குவதாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். அதுவே ஈழத்துக் கவிதை வரலாற்றின் தொடக்கமும் ஆகும். பூதந்தேவனிலிருந்து அரசகேசரி ஊடாக ஐரோப்பியர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் வரை இலக்கிய வரலாறு மட்டுமன்றி கவிதைபற்றிய வரலாறும் இருண்டே கிடக்கிறது. சின்னத்தம்பிப் புலவர் காலத்திலிருந்து அச்சொட்டாகக் கவிதை வரலாற்றைக் கூறமுடியும். சின்னத்தம்பிப் புலவரின் கவிதை வீறும் அற்புதமானதுதான். எனினும் அதற்கு முன்னாலும் ஆற்றல் மிக்க இலக்கியங்கள் சில எழுந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பூதந்தேவனின் சங்கப் பாடலிலிருந்து, அரசகேசரியின் ‘இரகுவம்ச’த்துடன் பின்னால் ‘கோட்டுப் புராணம்’, ‘தால புராணம்’, கனகி புராணம்’ ஆகிய படைப்புகளினூடாக இன்றைய பா.அகிலன்வரையும் உள்ளோட்டமாய் ஒரு மரபின் தொடர்ச்சி ஓடியிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. இது ஈழத்துக் கவிதைக்கு மட்டுமில்லை, எந்த நாட்டுக் கவிதைக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய உள்ளோட்டத் தொடர்புதான். ஆனால் துல...