Sunday, February 07, 2010

கலாபன் கதை: 7


ஒரு பெருவிபத்து தவிர்ந்த விதம்


எண்பதுகளின் ஆரம்பம் அது. M.V.SEA BIRD என்ற கிரேக்க கப்பலில் வேலை செய்துகொண்டிருந்தான் கலாபன். கப்பலின் புதிய கட்டுமானம் அவனை எண்ணும்போதெல்லாம் வியக்கவைத்துக்கொண்டிருந்தது. எந்தப் பனிப் பாளத்தையும் தன் மூக்கினால் குத்தி உடைத்துக்கொண்டு முன்சென்று விடக்கூடியதாய் அதன் முன்முனை கட்டமைப்புக் கொண்டிருந்தது. ஒரு பிரமாண்டம் தன் எஃகு வடிவத்தின் வார்ப்பில் அலைகளில் அலைந்து திரிந்தது இறுமாந்து. அலைகள் தழுவவும், ஒருபோது அவையே சீறிச் சினந்து முட்டிமோதவும் செய்தபோது தழுவலைப்போலவே மோதல்களையும் தன் புன்சிரிப்பு மாறாமல் அது அநாயாசமாக ஏற்றுக்கொண்டிருந்ததாய்ப் பட்டது கலாபனுக்கு.
அப்போது அதன் பயணம் சிங்கப்பூரிலிருந்து சுயஸ் கால்வாயினூடாக ஸ்பெயினை அடைவதாக இருந்தது.

ஒரு நீண்ட விடுமுறையின் பின் துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலில் அவன் வந்து சேர்ந்துகொண்ட தருணம் அற்புதமானது.

முதன்முதலாக ஒரு மூன்றாம் நிலை கப்பல் பொறியியலாளனாக அவன் நியமனம் பெற்றிருந்தான் அந்தக் கொம்பனியிலே. சம்பளமும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருந்தது. கொழும்பு விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு துபாய் விமானநிலையத்தில் அவன் வந்திறங்கியபோது, அவனது பெயர் எழுதிய ஒரு தடித்த அட்டையைத் தூக்கிப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தான் ஓர் அராபியன். கலாபன் அவனை நெருங்கியபோது தானே அவர்களது கொம்பனியின் முகவர் எனக் கூறி, கப்பல் மறுநாள்தான் துறைமுகத்தை அடையுமென்றும், அதுவரை அவன் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு ஹோட்டலிலே தங்கலாமென்றும் தெரிவித்தான் மாமூத் என்று தன்னை அறிமுகப்படுத்தியிருந்த அந்த அராபியன்.

அந்த ஏற்பாடுகளெல்லாம் அவனைப் புளகிக்க வைத்தன. ஓர் அதிகாரி நிலையிலுள்ள கப்பல்காரனை அவ்வாறெல்லாம்தான் கவனிப்பார்கள் என்ற அவனது அறிகை அன்று அனுபவமாகிக்கொண்டிருந்தது அவனுக்கு. வெளிநாட்டுப் பயணிகள் தங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அது. அந்த ஹோட்டலின் குளுகுளு அறையில் இருந்து லேசாக மது அருந்தியபடி தான் மூன்றாம்நிலைப் பொறியியலாளனாகப் பதவிபெற்றதின் காரணச் சம்பவத்தை மீண்டுமொரு முறை அலுப்புச் சலிப்பில்லாமல் நினைத்துப் பார்த்தான்.
எம்.வி.சீபேர்ட்டுக்கு முந்திய கப்பலில் வேலைசெய்துகொண்டிருக்கிறான் கலாபன். கப்பல் ஆம்ஸ்ரடாம் துறைமுகத்திலிருந்து போர்த்துக்கலின் லிஸ்பாவோ துறைமுகத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் 4-8 மணிநேர வேலை அவனுக்கு. கூட வேலைசெய்யும் இரண்டாம் நிலைக் கப்பல் பொறியாளர் இன்னும் கீழேயே வரவில்லை. அவனே பொறுப்பெடுத்து கப்பல் எந்திர நிலைகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறான். எண்ணெய் நீர் போன்றனவற்றின் அழுத்தம், வெப்பநிலைகள் எல்லாம் சரியாகவே இருக்கின்றன. பலரும் தவறி அவன் தவறாது கவனிக்கிற காரியம் ஒன்றுண்டு. இயந்திர அறை பின்னுக்கிருக்கும் கப்பல்களில்கூட நீரை உந்தி கப்பலைச் செல்லவைக்கும் pசழிநடடநச எனப்படும் சுழலும் பித்தளை உலோகப் பொறியை எந்திரத்தோடு தொடுத்துள்ள ளாயகவ அறுபது அல்லது எழுபது அடிகளுக்குக் குறையாத நீளமுடையதாய் இருக்கும். அதன் சுழற்சியை இலகுவாக்கவுள்ள உருள் கருவிகளின் இருப்றைகளில் கருவியின் உராய்வு தவிர்க்க எண்ணெயும் கிறிஸ_ம் இட்டுவைப்பார்கள். சிலவேளைகளில் வெறும் உருள் கருவிகள் சூடடைந்து உருகி கப்பல் நிறுத்தப்பட்டு பயணத் தாமதம் ஏற்படுவதும் உண்டு. அந்த முக்கியத்துவத்தால் அதைத் தவறாது கவனிக்க அவன் இயல்பாகவே உந்தப்பட்டுக்கொண்டிருப்பான். அன்று அதை கவனிக்கச் சென்றிருந்தவேளை கிறீங்…கிறீங் என்ற மேலே கப்பல் செலுத்துமிடத்திலிருந்து கப்பலை நிறுத்தவோ, இயக்கவோ, விசையைக் குறைக்கவோ அல்லது கூட்டவோவான கட்டளை செலுத்தி பயங்கரமாக அலறியடித்தது.

Pசழிநடடநச ளாயகவ இன் பின்பகுதி ஒரு குகைக்குள்போல் சென்றிருக்கும். அதற்குள் நின்றிருந்த கலாபன் கட்டளை மணியைக் கேட்ட மாத்திரத்தில் பாய்ந்து வந்தபோது கட்டளைக் கருவி ‘நிறுத்து’ என்ற அடையாளத்தில் நின்றிருந்தது. தன் அதிகாரி இல்லாத நிலையில் தான் அந்தக் கட்டளையைச் செயற்படுத்தலாமா என்று ஒரு விநாடியின் சிறுபின்னமளவுதான் கலாபன் யோசித்தான். இயல்பில்லாத அந்தக் கட்டளை ஓர் அபாயத்தினையே சுட்டிநிற்க முடியும். மறுகணம் கலாபன் கட்டுப்பாட்டுக் கம்பியை இழுத்து இயந்திரத்தை நிறுத்தினான்.

கட்டளை விடுப்பியில் கப்பலின் முன்பக்க செல்லுகைக்கான நான்கு நிலைகள் ஸ்ரார் போர்ட் (ளுவயசடிழயசன) சைட் எனப்படும் வலது பக்கத்திலும், போர்ட் (Pழசவ) சைட் எனப்படும் இடது பக்கத்தில் பின்நோக்கி நகர்வதற்கான நான்கு நிலைகளும் இருக்கும். இரண்டுக்கும் மத்தியில் இருக்கிறது நிறுத்து (ளுவழி) என்ற கட்டளைச் சொல். அதன் அருகில் இருக்கிறது ‘தயாராய் இரு’ (ளுவயனெ டில) என்ற நிலை. மிக ஆறுதல் (னநயன ளடழற)இ ஆறுதல் (ளடழற)இ நடுத்தர வேகம் (hயடக)இ முழுவேகம் (கரடட) என்பவைகளே அந்த நான்கு வேக நிலைகளும்.

எதிர்பாராத நேரத்தில் கப்பல் இயந்திரத்தை நிறுத்த கட்டளை வந்ததெனில், அதன் மறுவிளைவாக அதை முன்னேயோ பின்னேயோ செலுத்தும் கட்டளையும் உடனடியாக வரலாம். கப்பலை ஒரு சடுதியில் டிசயமந போட்டதுபோல் நிறுத்துவதென்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை. கப்பல் எந்திரம் நிறுத்தப்பட்ட பின்னரும், கப்பல் வந்த வேக உந்துதலில் முன்னகர்ந்துகொண்டே இருக்கும். இந்த நிலைமையில் ஒரு சடுதி நிறுத்தத்தத்தை உடனடியாகப் பின்னகர்வதின் மூலமாகவே ஓரளவு நிறைவேற்ற முடியும். கப்பல்கள்பற்றிய ஆங்கில சஞ்சிகைகள் கிடைக்கிறபோது அவற்றைப் புரட்டுவதின்மூலம் அவன் சில அறிதல்களைப் பெற்றிருந்தான்.

கலாபனின் மூளை படபடவென யோசித்தது. ஓர் அபாயத்தின் விளைவே அந்த நிறுத்தமெனில், அது பின்னகரும் கட்டளையைப் பிறப்பிப்பது தவிர்க்கமுடியாதது. அவன் ஓடிச்சென்று பிரதான இயந்திரத்துக்கு வரும் காற்றமுக்கத் தாங்கியிலிருந்த வால்வைத் திறந்துவிட்டான். அடுத்து காற்றை தாங்கியில் நிறைக்கும் பம்புகளை இயக்குவிக்க வேண்டும். அதையும் செய்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே மறுவிநாடி நடுத்தர வேகத்தில் கப்பல் எந்திரத்தினைப் பின்னகர இயக்கும்படி கட்டளை பிறந்தது.

கலாபன் கட்டளையை ஏற்றுக்கொண்டதாக தன் பதில் அனுப்பியை சரியாக வைத்துவிட்டு, ‘கடவுளே பிள்ளையார் அப்பா’ என மனத்துள் துதித்துக்கொண்டு எந்திரத்தை இயக்கினான்.

கப்பலை இயங்கவைக்க ஒரு மோட்டார் மூலமோ, வேறு சாதனங்களாலோ முடிவதில்லை. மிக்க வேகமாக அமுக்கக் காற்றினைச் செலுத்துவதின் மூலமே அது சாத்தியமாகிறது. அப்போது கப்பல் எந்திரத்தின் பிஸ்ரன்கள் அசைய ஆரம்பிக்கின்றன. கொதி எண்ணெய் பீச்சப்படுகிறது. அப்படியே எண்ணெயில் இயல்பாய் இயங்க இயந்திரம் ஆரம்பிக்கும்வரை அமுக்கக் காற்றே அவற்றை மேல்கீழாய் இயங்கச் செய்கின்றது.

கலாபன் தன் இ~;ட தெய்வமான பிள்ளையாரை அழைத்ததற்குக் காரணமுண்டு. கப்பல் பொதுவாக பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவை தெரிவாகிப் பிரித்தெடுக்கப்பட்ட பின் கிடைக்கும் கழிவெண்ணெயிலேயே (ஊசரனந ழுடை) இயக்கப்படுவது. ஆனாலும் ‘தயார்நிலையில் இரு’ என்ற கட்டளை மேலேயிருந்து கிடைத்ததும் அதை இயக்க டீசல் எண்ணெயே பாவிக்கப்படுகிறது. டீசல் தாங்கி மூன்றாவது தளத்திலிருந்தது. சென்று அதனைத் திறந்து வந்து எந்திரத்தை இயக்குவதென்பது நடவாத காரியம். ஆகவே கழிவெண்ணெயிலேயே (ஊசரனந ழுடை) இயந்திரத்தை இயக்கவேண்டிய கட்டாயத்திலிருந்தான் கலாபன். சிலவேளைகளில் அவ்வண்ணம் கப்பல் எந்திரத்தை இயக்கவைக்க முடியாமலும் போகலாம்.

இன்னுமொன்றிருந்தது. ஒரே தடவையில் அமுக்கக் காற்றைத் திறந்து, பிஸ்டன் கீழே இறங்கி பின் அது மேலே வந்து காற்று நன்றாக அமுக்கப்பட்டு வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் எண்ணெய் திறக்கப்படவேண்டும். இல்லையேல் இரண்டாவது தடவை அவ்வாறு செய்யவேண்டி நேரிடும். அந்த இரண்டாவது தடவையில் இயந்திரத்தை இயங்கவைக்க முடியாது போனால் மேலே அபாய கட்டம்தான். அப்போது காற்றமுக்கம் வெகுவாகக் குறைந்து மறுபடி இயந்திரத்தை அவசரமாக இயக்க முடியாது போய்விட வாய்ப்புண்டு.
கலாபன் நேர்ந்த கடவுள் அவனைக் கைவிடவில்லை. ஒரே தடவையிலேயே இயந்திரம் இயங்கவாரம்பித்து, முன்னகர்ந்த விசையை முறிவடையச் செய்யும் ஒரு குலுக்கத்தோடு கப்பல் பின்னகர ஆரம்பித்தது.

ஒரு நிமிடத்தின் பின் நிறுத்தக் கட்டளை வந்தது. கலாபன் கப்பலை நிறுத்தினான்.
அதுவரை காலத்தில் கப்பலின் வேகத்தைக் குறைக்க அல்லது கூட்ட வந்த கட்டளைகளைததான் தனியாக நிறைவேற்றியிருக்கிறான் கலாபன். தனியாக அதுவும் எதிர்பாராத நேரத்தில் கப்பலை நிறுத்தவும் அதை மறுபடி இயக்கவும் எப்போதும் செய்ததில்லை.

அப்போதுதான் இரண்டாம் நிலைப் பொறியாளர் அவசரஅவசரமாகக் கப்பலுக்குள் வந்தார்.
மறுபடி இயல்பான நிலைமையில் கப்பல் தன் பயணத்தைத் தொடக்கியது.
மேலே வருகிறான் கலாபன் தன் வேலைநேரம் முடிந்து. நண்பர்கள் எல்லோரும் வியப்போடு கதைக்கின்றனர்.

ஒரு பாறையில் மோதவிருந்ததாம் கப்பல். அதுமாதிரி ஆழ்கடலிலேயே கையை உயரத் தூக்கிக்கொண்டு நிற்பதுபோல் நிமிர்ந்து நிற்கும் பாறைகள் நிறைய உண்டு. அவற்றைக் கண்டறியும் கருவி கப்பல் செலுத்துகைத் தளத்தில் பொருத்தவே பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக அது செயலற்றிருந்தது ஒருபோது கண்டறியப்பட்டு அதனைத் திருத்தும் பணிக்கு அடுத்த துறைமுகத்து கொம்பனி முகவருக்கு ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் அதிகாலையின் மூடுபனி கவிந்திருந்த அந்தப் பொழுதில் அந்தப் பாறை திடீரெனத்தான் கண்காணிப்பில் நின்றிருந்த தள கப்பல்காரனின் பார்வையில் பட்டிருந்திருக்கிறது. அவன் கண்டது மட்டுமில்லை, கப்பல் நிறுத்த உத்தரவையும், பின்னகரும் உத்தரவையும் விநாடி தாமதமின்றி நிறைவேற்றி வைத்ததும்தான் முக்கியமானது. எப்படியோ பெரிய விபத்தொன்று தவிர்ந்திருந்ததில் எல்லோரும் மகிழ்வடைந்து கலாபனைப் பாராட்டினர். அவன் சாப்பிட்டு முடிகிற வேளையில் கப்ரின் போய் வந்து கப்ரின் அழைப்பதாகத் தெரிவித்தான்.

சந்தோ~மான மனநிலையோடேயே கப்ரின் அறை சென்றான் கலாபன். சிரித்த முகத்தோடு வரவேற்றான் கப்ரின். கூட இருந்த அவனது மனைவி கண்களால் பாராட்டுத் தெரிவித்தாள். அது தனது கடமையென அடக்கமாய்ச் சொல்லி நின்றான் கலாபன்.

‘இல்லை, நீ ஒரு அசாதாரணமான வேலையை இன்று செய்திருக்கிறாய்’ என்று சொல்லி தொடர்ந்து தெரிவித்தான் கப்ரின்: ‘கலாபா, கப்பல் பொறியியல் வேலையென்பது மூன்று முக்கியமான தன்மைகளை வேண்டிக்கொண்டிருக்கிறது. ஒன்று, கப்பல் எந்திரம் சம்பந்தமான அறிவு (மழெறடநனபந). மற்றது, அது சம்பந்தமான அனுபவம் (நஒpநசநைnஉந). மூன்றாவது, சாதுர்யம் (ளமடைட). இந்த மூன்றும் உன்னிடமிருப்பதை கடந்த இரண்டாண்டுகளாகவே நான் கவனித்துவருகிறேன். இன்று நடந்த சம்பவத்தை நான் ஏற்கனவே தலைமை அலுவலகத்துக்கு அறிவித்துவிட்டேன். அடுத்த துறைமுகத்தில் மூன்றாவது பொறியியலாளர் அலெக்ஸ் விலகிச் செல்கிறார். அந்த இடத்துக்கு உன்னை நான் நியமிக்கிறேன்.’

கலாபனால் நம்ப முடியவில்லை. அவன் நன்றிகூறிக்கொண்டு திரும்பினான்.
ஒருகாலத்தே அது ஒரு தொழிலா எனச் சந்தேகத்தோடு அவன் நினைத்தது உண்டு. இனிமேல் அதுவே அவனது தொழிலாகப் போகிறது. அவன் தகுதியுள்ள பொறியாளன் இல்லைத்தான். ஆனாலும் அவனது அனுபவத்தின், திறமையின் காரணமாக அந்தப் பதவி அவனை வந்து சேர்ந்திருக்கிறது. அதற்கான படிப்பினைத் தொடரந்து ஒரு தகுதியான பொறியாளனாகும் திட்டம் அவனது மனத்தில் அன்றுதான் விழுந்தது.

மேல்தளத்திலே அதிகாரிகள் பகுதியில் அப்போது அவனது அறை இருந்தது. நல்ல அகன்ற கட்டில். நல்ல மேசை. நல்ல நாற்காலி. வெப்ப வலயத்தில் குளிரூட்டப்படவும், குளிர் வலயத்தில் எல்லா கப்பல்காரர்களது தங்குமிடத்துக்கும்போல சூடாக்கப்படவும் கூடியதாய் அது இருந்தது.

ஊரிலே வீட்டு வேலைகள் முடிந்து குடிபுகுதல் நிறைவெய்தியிருந்தது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகியிருந்தான் அவன் இப்போது. வீட்டிலே நிற்கும்போது மனோவின் காதலனாக இருக்கும் அவன், கப்பலுக்கு வந்ததும் தேடித் தேடி அனுபவிக்கும் காமாந்தகாரனாகிவிடுகிறான். ஆனாலும் இனிமேல் அவன் ஒரு அதிகாரியாக இருக்கிறவகையில் தன் கட்டுமீறிய களிச் சேட்டைகளை அடக்கிக்கொள்ளவேண்டும் என்று திட்டம் கொண்டிருந்தான். அது அவனது படிப்புக்கும் உதவியாய் இருக்கும்.
கப்பல் எகிப்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றிரவு விடிந்தால் சுயஸ் கால்வாய் முனையிலுள்ள போர்ட் சேத்தில் நின்றுகொண்டிருக்கும் கப்பல்.

சுயஸ் கால்வாய் என்றதும் எல்லோருக்கும் என்ன நினைவு வருமோ, அவனுக்கு நைல் நதியும், அந்த நதியில் உல்லாசப் படகொன்றில் பயணித்துத் திரிந்த உலக மகா அழகி கிளியோபாத்திராவும்தான் ஞாபகமாயிற்று. கண்களுக்குள் ஒரு வெண் அன்னப் படகு நீந்திச் செல்வதை மானசீகமாகக் கண்டு களித்தான் கலாபன்.

விரிந்திருந்த வெளியை ஜன்னலினூடு பார்த்தான் கலாபன். நீலவானம் பளீரென இருந்தது. அதில் வெண்மீன்கள் சில ஜொலித்துக்கொண்டிருந்தன. கடலெல்லாம் ஒளிப் பிரவாகம். விரித்திருந்த நீலச் சேலையொன்று காற்றில் மெல்ல அசைவதுபோல அது நெளிந்தது. அவ்வளவுக்கு அமைதி தழுவிய கடலாக இருந்தது அது. இந்து சமுத்திரத்தைத் தாண்டி கப்பல் செங்கடல் பிரதேசத்துக்குள் நுழைந்து விட்டிருந்தமையைத் தெரிந்தான் அவன். இனி மேற்கே எகிப்தும், கிழக்கே சினாய் பாலைவனமும்தான்.

அவனது அறை மேற்கிலே, போர்ட் பகுதியிலே, இருந்தது.

நேரம் அப்போது இரவு பத்து மணியிருக்கும். கலாபன் 12-4 மணிநேர செய்துகொண்டிருந்தான் அப்போது. இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருந்தன வேலைக்காக கீழே இறங்க.

மெல்லிய ஜொனி வோக்கர் போதை இருந்தது இன்னும் அவனில். அந்தப் போதையில் நைல்நதி கண்டான். கழுதைப் பாலில் குளித்து, மயிலின் மூளைக் கறி சாப்பிட்டு, உயர்வகை மதுவருந்தியும் அதிசுவையுடைய பழங்கள் உண்டும் தன் அழகையும் இளமையையும் தக்கவைத்துக்கொண்டிருந்த கிளியோபாத்திராவின் அந்த வெண்ணன்ன உல்லாசப் படகு நைல் நதியில் நிலா எறிக்கும் அவ்விரவில் மெல்ல மிதந்து செல்வதாய் அவன் கற்பனை எகிறியது. சீனப் பட்டின் தழுவலில் சுகம்கொண்டு அவள் தன் பாதி விழி மூடியும், இடையின் உடை விலகிதும் கவனமின்றி தன் பளிங்குக் கால்கள் நீட்டி ஒயிலாக அன்னத்தின் தூவியினாலான மென் படுக்கையில் படுத்திருப்பதானவும் காட்சிகள் அடுத்து நினைவிலெறிபட்டன. யூலியஸ் சீசரும், அந்தோனியும் அடிமையாய்க் கிடந்த அவ்வழகின் குவிமையங்களான வதனத்தில் முதலில் திளைத்த அவனது கண்கள், அடுத்து இரட்டைப் பிரமிட்டுக்களாக நிமிர்ந்து நின்ற மார்பில் நிலைத்து நின்றன. அவன் கிறங்கினான்.

எகிப்தை அடைகையில் தன் மனத்திலோடிய கற்பனைகளை எழுதிய கலாபனின் கடிதத்தைப் படித்த எனக்கு மனதில் எதுவோ செய்தது. ஒரு பக்கம் உடல் உணர்வுகளும், இன்னொரு பக்கம் என் கப்பல் கனவுகளின் நிறைவேறாத ஆசைகளின் சுமையுமாக நான் தவித்தேன். என்னால் எப்போதாவது கப்பல் ஏறமுடியுமா? கலாபன்போல் நாடுகளும், நாடுகளின் அழகுகளும் காணமுடியுமா? எனக்கு காலமாக ஆக நம்பிக்கை குறைந்து போய்க்கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்துப் பெடியள் கப்பல் முகவருக்கு இருபத்தையாயிரம்ஃமுப்பதாயிரம் ரூபா கொடுத்து கப்பல் ஏறுகிறார்களாம். என்னால் அது முடியுமா?

தீராத அவநம்பிக்கையொன்று என்னில் விழுந்தது. எகிப்து, கிளியோபாத்திராவின் அழகு, நைல்நதி, பால்அன்னப் படகு, அவளது பளிங்குக் கால்கள், நெஞ்சப் பிரமிட்டுக்கள் எல்லாம் மறைந்து வாழிடத்து நிலைமைகள் சிறிதுநேரத்தில் பூதாகார வடிவெடுத்து உறுமி நின்றன.

000


No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...