Sunday, February 07, 2010

கலாபன் கதை: 8


கப்பலைத் தூக்கி அப்பால் இறக்கிவிட்ட விந்தை


மூன்றாவது கப்பல் பொறியாளராக கலாபன் வேலைசெய்ய ஏறிய ஆ.ஏ.ளுநுயு டீஐசுனு என்ற அந்தக் கப்பல் அவனது வாழ்வில் மறக்கமுடியாத ஓர் அனுபவத்தைக் கொடுத்திருந்தது. உலகத்தின் முக்கியமான இரண்டு கால்வாய்களினூடான பயணம் மறக்க முடியாததுதான்.

இவையெல்லாம் திட்டமிட்டோ, எதிர்பார்த்தோ நடப்பதில்லை. எங்கேயும் இதுவே நிலைமையெனினும், கப்பல் வர்த்தகத் துறையில் இது சத்தியமான வார்த்தை. எல்லா பயண அனுபவங்களையும் விழுங்கிவிடுகிற மாதிரி ஓர் அற்புதம் எதிர்பாராததும், திட்டமிட்டுமிராத ஒரு தருணத்தில் நடக்கச் செய்கிறது. அப்போது அதை அனுபவிப்பதுதான் விவேகம். கலாபன் அதை நன்குணர்ந்திருந்ததாகவே தெரிந்தது.

சுயஸ் வழியைக் கடந்து கப்பல் மத்தியதரைக் கடலுள் பிரவேசிதுக்கொண்டிருந்த பொழுதில்தான் இரவு 12-04 வேலையை முடித்துக்கொண்டு தூங்கச் சென்ற கலாபன் எழுந்து மறுபடி வேலைக்குத் தயாராக வெளியே வந்திருந்தான். சுயஸ் கால்வாயின் மேற்புறமுள்ள நைல்நதி தீரத்து அழகில் எகிப்திய அழகுராணி கிளியோபாத்திரா அன்னப்படகில் ஏறி நிலவெறிக்கும் இரவுகளில் ஓரிரு சேடிகளுடன் மட்டும் மிதந்து களித்த அழகை, தன் மெல்லிய போதையின் உந்துதலில் கற்பனைசெய்து வரலாற்றின் பக்கங்களில் பயணித்துச் சுகித்த கலாபன், வெளியே வந்தபொழுதில் விரிந்திருந்த உலகம் வித்தியாசமானதாக இருந்தது.

கிழக்கிலே சினாய் வெளி பரந்து கிடந்தது. பாலஸ்தீனத்துக்கும் மற்றும் அராபிய நாடுகளுக்கும் எதிராக இஸ்ரவேல் தொடுத்திருந்த யுத்தத்தில் எழுந்த கந்தக வெடிப்புகையை மானசீகமாக தன் நாசியில் உணர்ந்தான் அவன். நிகழ்காலச் சரித்திரத்தில் அராஜகங்களுக்கும், அநீதிகளுக்குமான ஓர் அடையாளம் இஸ்ரவேல் எனில், சுதந்திரத்திற்கும் விடுதலைக்கும் தீராத போர்க்குணத்துக்கும் அடையாளமாக அவனளவில் பாலஸ்தீனம் இருந்தது. சரித்திரம் தன் பெருவெளி முழுக்க நிறையநிறைய ஓரவஞ்சனைகளைக் கொண்டிருக்கிறது. அதில் நிகழ்காலத்தின் மகா துயரமான பாலஸ்தீனம் ஒன்று.

சரித்திரத்தில் மகாதுயரங்களைப்போல மகாசாதனைகளும் காணக்கிடைக்கின்றன. அவன் மகாதுயரங்களிலிருந்து தன்னை விடுவித்து, மகாசாதனைகளில் நினைவை ஆழ்த்தினான்.
சுயஸ் கால்வாய் மகாசாதனைகளின் உச்சங்களில் ஒன்று என்பதில் யாருக்கும் கருத்துவேற்றுமை ஏற்பட முடியாது. அதன் தொடக்கமே பல்வேறு ரசனைகளின் நிகழ்வுகளைக் கொண்டிருந்தது. ஆசியா, ஆபிரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களையும் துண்டாக்கிக்கொண்டு, செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைத்த அந்த மகா முயற்சி பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பித்ததை அவன் தன் நெடிய வாசனையில் அறிந்திருக்கிறான்.

லெப்டினன்ட் டி லெஸெப்ஸ் என்கிற பிரான்சிய அரசியலாளருக்கும், அப்போதைய எகிப்திய அரசர் முஹமட் சேத்துக்கும் இடையே ஏற்படும் ஓர் உடன்படிக்கையின் பின் சுயஸ் கால்வாயின் கட்டுமானப் பணி 1859இல் ஆரம்பிக்கிறது. இதற்கு முன் இரண்டு தடவைகள் இதுபோன்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தும், எகிப்திய பழங்குடி மக்களின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட நேர்கின்றன. அதன் காரணத்தை அறிந்தபோதிலேயே கலாபன் அதிர்ந்துபோனான்.

உலக வரைபடத்தில் மேலே இருப்பது மத்தியதரைக் கடல். அதன் கீழே எகிப்து நாடு. செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைப்பதற்காக இடையிலுள்ள நிலம் வெட்டப்பட்டால், மேலே மத்தியதரைக் கடலின் நீர் எகிப்துள் புகுந்து அதை அழித்துவிடாதா என்று அப் பழங்குடி இனம் சிந்தித்ததாம். பொதுப் புத்திக்கு தர்க்ரீதியாகப்படும் இந்தக் காரணம் உண்மையில் சரியானதில்லை என்பதோடு, மேலேயுள்ள மத்தியதரைக் கடலைவிட, கீழே அதனுடன் இணைக்கப்படவிருந்த செங்கடல்தான் ஒன்று-ஒன்றரை மீற்றர் உயரமானது என்பதே நிலவியலின் வரையறை.

இந்த உண்மையை விளக்கி எகிப்தியப் பழங்குடியினரின் எதிர்ப்பினை வெல்ல டி லெஸெப்ஸ் நிறையப் போராடவேண்டியிருந்தது. தெற்கே சுயஸ் துறைமுகமும், வடக்கே போர்ட் சேத் துறைமுகமுமாய் இரண்டு துறைமுகங்களிலும் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பும், கால்வாயில் பன்னூற்றுக்கணக்கான கப்பல்களின் பயணத்தில் கிடைக்கும் வருவாயுமாக எகிப்திய மக்கள் நிறைந்த பொருளாதாரப் பயன்களைப் பெறுவர் என ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன. இறுதியில் கால்வாயின் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டபோதும் பல்வேறு பணச் சிரமங்களால் அத் திட்ட நிறைவேற்றத்துக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. 1869இலேயே கப்பல்களின் பயணத்துக்கு கால்வாய் தயாராகவிருந்தது.

டி லெஸெப்ஸின் நோக்கம் உன்னதமானதுதான். ஆனாலும் சுயஸ் கால்வாயின் உரிமை பிரான்ஸ் மற்றும் பிரிட்டி~hரின் ஆதிக்கத்தில் இருந்ததில் எகிப்து எதிர்பார்த்ததுபோல் பயனேதும் பெறமுடியாது ஏமாற்றப்பட்டுப் போகிறது. நிர்வாகமெல்லாம் சர்வதேச உரிமைகளின் சட்டப் பிரகாரமே இருந்ததெனினும், ஒரு நாட்டின் வளத்தில் இன்னொரு நாடு பயனடைதல் என்பது சட்டங்களின் முரண். சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டதும் உலகம் இன்னும் சுருங்கிப்போனது. அத்திலாந்து சமுத்திரத்துக்குள் பிரவேசிக்க வேண்டிய அய்ரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள கப்பல்கள் இனி ஆபிரிக்க முனையைச் சுற்றிச் செல்லவேண்டிய அவசியமிருக்கவில்லை. நேரமும், எண்ணெயும் மிச்சமாகின. கால்வயைக் கடப்பதற்கு பணம் செலுத்தவேண்டியிருந்ததெனினும் அது மிச்சமாகும் நேரத்தையும் எண்ணெய்ச் செலவையும் ஒப்பிடுகையில் பெரிதானதில்லை.

கப்பல் வர்த்தகத்தில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய முக்கியமான நிகழ்வு 101 மைல் நீளமான சுயஸ் கால்வாயின் திறப்பு. இவ்வாறான முக்கியமான ஒரு கால்வாயினூடான பயண வருமானம் உண்மையில் எகிப்திய மக்களைச் சேரவில்லையென்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதா? அதனால்தான் சுயஸ் கால்வயை எகிப்திய அரசு 1956இல் தேசியமயமாக்கியது.

பிரான்சிய பிரிட்டி~; அரசுகள் கிளர்ந்தெழுந்தன. சுயஸ் கால்வயை உடனடியாக மூடியது எகிப்து. சுருக்க வழி மறுபடி நீண்ட கடல்பயண வழியாக மாறியது. பிறகு ஒரு சமரசத்தில் கால்வாய் திறக்கப்பட்டபோதும், எகிப்துவுக்கும் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இஸ்ரவேலுக்குமிடையிலான ஆறுநாள் யுத்தத்தில் மறுபடி அது 1967இல் மூடப்படுகிறது. மறுபடி கால்வாய் திறக்கப்பட எட்டு ஆண்டுகள் ஆகின்றன.

சுயஸ் கால்வாயின் நீளம் 101 மைல்களானாலும் செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைத்த தரைவழி 75 மைல்களாகவே இருந்தது. அதாவது 75 மைல்கள் தூரத்தையே வெட்டவேண்டியிருந்தது. மீதி 26 மைல்களும் நதிவழிகளாகும். மன்சாலா, திம்கா, பிற்றர் நதிகள் போன்றன இக் கால்வாயின் வழிகளைப் பங்குபோட்டுக்கொண்டன. சராசரியாக கால்வாயின் அகலம் 179 அடியெனவும், ஆழம் 40 அடியெனவும் கணக்கிடப்பட்டிருக்கின்றது. தினசரி 50 கப்பல்கள் போக்கும் வரத்துமாய் இக்கால்வாயை உபயோகிக்கின்றன. ஒரு தொன்னுக்கு கடவைக்கூலி ஆறு பிராங்குளாக ஆரம்பகாலத்தில் இருந்ததாம். அது தேசியமயமாக்கப்பட்ட பின்னரும் ஏறக்குறைய அதேயளவான எகிப்திய நாணயமே அறவிடப்பட்டது.

கலாபன் பின்தளத்தில் நின்று பார்த்துக்கொண்டேயிருந்தான். கப்பல் மெதுவாகப் பயணித்துக்கொண்டிருந்தது. பொருத்தமான இடத்தில் அது எதிர்வரும் கப்பலுக்கு ஒதுங்கிநின்று வழிவிட்டுக் கொடுத்தது. அதுபோல் ஏற்கனவே வந்துவிட்ட கப்பல் ஒரு பொருத்தமான இடத்தில் ஒதுங்கிநின்று அதற்கு வழி கொடுத்தது. துறைமுகத்தை அண்மியதும் கப்பலை மத்தியதரைக் கடலுக்குள் இறக்குகிற வேளையில் அதனை இரண்டு பக்கங்களிலும் தொடுக்கப்பட்டிருந்த பாரக்கயிற்றின் மூலம் இழுத்தெடுத்தார்கள்.
மேலே அவன் வேலைக்கு நேரமாக சாப்பிட்டுவிட்டு இயந்திர அறைக்கு இறங்கிவிட்டான்.

நான்கு மணிக்கு அவன் மறுபடி மேலே வந்தபோது மத்தியதரைக் கடலில் போர்ட் சேத் அணையைக் கடந்துவிட்டிருந்தது கப்பல். நூற்றுக்கணக்கான கப்பல்கள் கால்வாயைக் கடப்பதற்கான தங்கள் நேரம் வரும்வரைக்கும் போர்ட் சேத் வாயிலில் காத்துநின்றன. கலாபன் பிரமித்துப்போனான். எத்தனை எத்தனை நாடுகளில் பதிவுபெற்ற எத்தனை எத்தனைவிதமான கப்பல்கள்! ஜேர்மன் கொடியேந்திய மேர்ஸ்க் லைன் கப்பல்கள், பிரிட்டி~; கொடி கட்டிய Pரூழு டுiநெ கப்பல்கள், கிரேக்கக் கொடி பறக்கும் கப்பல்கள் என கப்பல்கள் நூறு நூறு! தானியவகை ஏற்றும் டீரடம உயசசநைசளஇ எண்ணெய் எடுத்துச்செல்லும் ழுடை வயமெநசளஇ வாகனங்கள் கொண்டுசெல்லும் ஊயச உயசசநைசள என கப்பல்களின் பெரு அணிவகுப்பு அது. அப்படியான ஒரு கப்பலில் என்றைக்காவது தான் ஏறி வேலைசெய்யும் வாய்ப்பு வருமா? ஓர் ஆற்றாமை சூழ்ந்தது அவனில்.
மறுநாள் ஸ்பெயின் துறைமுகத்தை அடைந்தது அவனது கப்பல். அடுத்து லண்டன் துறைமுகம்.

லண்டன் துறைமுகத்தை ஒரு மாலையில் அடைந்த கப்பலில் முதலில் ஏறியது அக் கம்பெனியின் முகவரெனின், அடுத்ததாக ஏறியது றிஸா என்ற பெண்தான். காரிலே வந்தவள் காரை துறைமுக ஓரமாக நிறுத்திவிட்டு விறுவிறென மேலே ஏறியிருந்தாள். இரண்டாம் நிலை அலுவலர் அலெக்ஸின் அறை அவளுக்குத் தெரிந்திருந்தது. நேரே அங்கேயே சென்றுவிட்டாள். அலெக்ஸி கிரேக்கன். அவளோ ஈரான்காரி. அவள் ஒரு விலைமாதாக இருக்கலாம் என எண்ணிய கலாபனுக்கு அப்போதுதான் தெரிந்தது அவள் அலெக்ஸியின் சிநேகிதியென்பது.

பின்னால் வேறு ஊழியர்கள் சொல்லி றிஸா ஒன்றும் விலைமாதிலிருந்து பெரிதாக வித்தியாசப்பட்டவளில்லையென அவன் அறிந்துகொண்டான். அந்தக் கப்பலிலேயே மூன்றாண்டுகளாக வேலைசெய்யும் மொரி~pயஸை சேர்ந்த ஜோர்ஜ் என்ற சமையற்காரன் றிஸா முதன்முதலில் அந்தக் கப்பலில் ஒரு விலைமாதாகத்தான் அடியெடுத்து வைத்ததை உறுதியாகச் சொன்னான். ஆனாலும் அலெக்ஸ் அவளை தன் சிநேகிதியாக்கி, லண்டன் வரும்போதெல்லாம் முன்னதாகவே அறிவித்து அவளைச் சந்தித்துக்கொண்டிருந்தான்.

அப்படியொரு விருப்பம் ஒரு கடலோடிக்கு ஏற்படுவதும், அதுபோன்ற இணக்கம் ஒரு விலைமாதுக்கு உண்டாவதும் சகஜம்தான் என்று ஜோர்ஜ் விளக்கினான். அவ்வாறான சிலர் சேர்ந்து வாழ்வதும், கல்யாணம்வரைகூட சென்றதும் உண்டு என்றான் அவன்.
கலாபனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படியான தொடர்புகளை அங்கீகரித்த அளவுக்கு, அவ்வாறான தொடர்புகளில் விளையும் உறவுகளை ஏற்றுக்கொள்வது அவனுக்குக் கடினமாக இருந்தது. அதை அவன் ஜோர்ஜூக்குச் சொல்லவும் செய்தான்.

‘கடலோடிகளை ஆநசஉhயவெ நேஎல என்று ஆங்கிலத்திலே சொல்லுகிறார்கள். வர்த்தகக் கடலோடிகள் எனினும் அவர்களது தொழில்முறையானது ஏறக்குறைய மரபுவழியான கப்பற்படை ஊழியருக்குச் சமமானதுதான். அவர்களும் உறவுகளைவிட்டு விலகியிருக்கிறார்கள். சிலபேர் அந்த உறவுகளின்மீதான காதலுடன் காத்திருக்கவே செய்கின்றனர். ஆனாலும் சிலருக்கு காதல் எப்போதும் வேண்டியிருக்கிறது. காதலே தேவை என்பதால் மட்டுமில்லை, சிலபேர் தொழில்முறைப் பிரிவின்போது காதலில் ஏமாற்றப்பட்டதால் ஒரு வஞ்சமாகவும் அந்த மீகாமக் காதலில் விழுந்து சுகிக்கிறார்கள். அலெக்ஸ_க்கும் றிஸாவுக்கும் காதலில்லையென்று யார் சொல்லமுடியும்? அது தற்காலிகமானதாக ஆரம்பித்ததாய் இருக்கலாம். அதுவே நிரந்தரமானதாக ஆக நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, தம்பி. பாலியல் தொழிலாளருக்கு அழகிய உடம்புகள்போல அழகிய மனங்களும் இருக்கக்கூடும். அந்த அழகிய மனத் தரிசனம் கிடைக்கிறவன் காதலனாக மட்டுமில்லை, கணவனாகவும் ஆகிவிடுவான்’ என்றிருந்தான் ஜோர்ஜ்.

கலாபனுக்கு கிளியோபாத்திரா தந்திருந்த அருட்டுணர்வு முழுதுமாய் அற்றுப் போனது. காதல்பற்றிய நினைவுகளே மேலெழுந்துகொண்டிருந்தன. நீண்டநாட்களாக மனோவின் கடிதம் அவனுக்கு வரவில்லை. லண்டன் துறைமுகத்தில் எதிர்பார்த்திருந்தான். அங்கேயும் கிடைக்கவில்லை. அனுப்பிய கடிதம்தான் தாமதமாகின்றதா? அல்லது அவள் எழுதவே இல்லையா? ஏன் எழுதவில்லை? அவனது மனம் குழம்பியது. எல்லாவற்றையும் மறக்க அன்று நிறையக் குடித்துவிட்டு படுத்துவிட்டான்.

மறுநாள் காலையில் தெரிந்தது அடுத்த பயணம் ஜப்பானை நோக்கியென்பது. அங்கிருந்து தென்கொரியா. அந்தப் பயணம் முக்கியமானது. அதில்தான் உலகத்தின் நான்கு ஐந்து முக்கியமான தொடுப்புக் கால்வாய்களில் அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த பனாமாக் கால்வாயைக் கடக்கவேண்டியிருக்கும்.

கப்பல் புறப்பட்டது. கலாபன் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நிகழ்வின் கணம் வந்தது. அத்திலாந்தினூடாக லண்டன் துறைமுகத்திலிருந்து பனாமாக் கால்வாயின் கீழை வாயிலை அடைந்த கப்பல் தன் முறைக்காக நங்கூரமிட்டுக் காத்துநின்றது.

மறுநாள் காலையில் மூன்று மணிக்கு இயந்திரத்தை ளுவயனெ-டீல வைத்திருக்க கட்டளை
மணி ஒலித்தது. கலாபனே அதைப் பயணத்துக்குத் தயார் நிலையில் வைத்தான். சுயஸ் கால்வாயைக் கப்பல் கடந்தபோது அதன் முழுப்பயணத்தையும் அனுபவிக்காத குறையை, பனாமாக் கால்வாயை அது கடக்கும் பொழுதிலும் இழந்துவிடக்கூடாது என்ற அவதானத்தில் தன்னை கப்பல் புறப்படும்போதில் எழுப்பிவிட மெஸ் ஊழியனிடம் சொல்லிவைத்திருந்தான். அதனால் கப்பல் பதினொரு மணியளவில் புறப்படத் தயாரான பொழுதில் மேலே நின்றிருந்தான் கலாபன்.

சுயஸ் கால்வாய் போன்று நீளமானதல்ல பனாமாக் கால்வாய். அதன் மொத்த நீளமுமே 50 மைல்கள்தான். ஆனால் சுயஸ் கால்வாய் செய்த பூகோள மாற்றத்தினைப்போல் அதுவும் செய்தது. தொடுப்புண்டிருந்த வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் கூறாக்கியது. அத்துடன் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தையும் இணைத்தது.
1914இல் திட்ட நிறைவேற்றம் பெற்ற பனாமாக் கால்வாய் ஆகக்கூடுதலான பொறிநுட்பம் வாய்ந்தது. அது தன் முந்திய கால்வாயின் அனுபவத்தினைப் பூரணமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தமை தெற்றெனத் தெரிந்தது.

பூகோளத்தின் அந்த விந்தையை கலாபனால் விளங்கிக்கொள்ள முடியவில்லையெனினும், அதை அவன் அனுபவித்தான்.

பனாமாக் கால்வாய் எண்பத்தைந்து அடி உயரமான மூன்று கட்ட அணைகளைக் கொண்டிருந்தது. அவை டுழஉமள எனப்பட்டன. முன்கதவு பூட்டியிருந்த முதல் அணைக்குள் கப்பல் புகுந்ததும் பின் கதவு பெரிய இயந்திரங்களின் உதவியினால் இழுத்து மூடப்படுகிறது. நீரிறைக்கும் ராட்சத பம்புகளின் மூலம் சர்சர்…என நீர் அணைக்குள் கொட்டப்படுகிறது. கப்பல் அங்குலம் அங்குலமாக மேலே எழும்புகிறது. ஏற்கனவே இரண்டாம் அணையில் குறிப்பிட்ட ஓர் உயர்மட்டத்தில் நீர் நின்றுகொண்டிருக்கும். இந்நிலையில் அதன் அளவுக்குச் சமமான மட்டத்துக்கு முதல்கட்ட அணையின் நீர் வந்ததும், ராட்சதப் பம்புகள் நிறுத்தப்பட்டு, முன்பக்கமாக உள்ள வாயில் திறக்கப்படுகிறது. கப்பல் அப்படியே இரண்டாம் அணைக்குள் வலித்திழுக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டத்துள் விN~சம் எதுவும் நடப்பதில்லை. உள்ளே வந்த கப்பல் இரண்டாம் கட்டத்தின் பின்கதவு பூட்டப்பட்டு, முன்புறக் கதவு திறக்கப்பட அதேயளவு நீர் உயரமுள்ள மூன்றாம் கட்டத்துள் நகர்த்தப்படுகிறது.

ஆனதும் மூன்றாம் கட்டத்தின் பின்கதவு பூட்டப்படுகிறது. கப்பல் ஓர் அடைப்புக்குள் இருப்பதுபோலானதும் அதிலிருக்கும் நீர் இறைத்தெறியப்படுகிறது. கப்பல் அங்குலம் அங்குலமாக கீழே இறங்குகிறது. நீர் கடல் மட்டத்துக்கு வந்ததும் மூன்றாம் அணையின் முன்கதவு திறக்கிறது. கப்பல் மெதுமெதுவாக வெளியே வலித்திழுக்கப்படுகிறது.

கப்பல் மூன்றாம் கட்டத்தைத் தாண்டியதும் ஒரு சிறிது தூரத்துக்கு அதே பகுதியில் நிறைந்த அனுபவம் வாய்ந்த பைலட்டின் கட்டுப்பாட்டில் கப்பல் எடுத்துச் செல்லப்படுகிறது. பிறகு கப்பல் கப்ரனிடம் அது கையளிக்கப்பட்டு பூம் பூம் என சைரன் அடித்துப் பின்தொடர்ந்து வரும் Pடைழவ டீழயசனஇல் பைலட் இறங்கிச் செல்கிறார். கப்பல் தன் சுயாதீனப் பயணத்தைத் தொடங்குகிறது.

அந்தக் கப்பலின் நேவ வழnயெபந 18000 தொன். புசழளள வழnயெபந 14000 தொன். ஆக மொத்தம் 32000 தொன் நிறையையும் ஒரு பொறிமுறையில் ஏற்றி இறக்கிய விந்தை அற்புதமாக இருந்தது கலாபனுக்கு. பொறியியல் விஞ்ஞான வளர்ச்சிகள் செய்திருக்கும் இன்னும் எத்தனை விந்தைகளைக் காணமுடியப்போகிறதோ! மனித வரலாறானது அரசர்களினதும் நாடுகளினதும் யுத்தங்களும் மரணங்களும் அழிவுகளும் மட்டுமானதில்லை, அது விஞ்ஞான தொழில்நுட்ப சாதனைகளாலும் தான் படைக்கப்படுகின்றதென்ற உண்மையை முதன்முதலாக உணர்ந்தான் கலாபன்.

உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி சமூக உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது எவ்வளவு நிஜமோ, அதுபோல் மனித சமூகத்துக்கு அயராது சிந்திக்கும் விஞ்ஞானிகளாலும் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன என்பதும் நிஜம். நாம் வீரர்களைப் போற்றுகின்றோம். வீரர்களைக் கொண்டாடாத தேசத்தில் வீரம் மறைந்துபோகுமென்றான் பாரதியும். ஆனாலும் உரிமைக்காகக் குரல்கொடுத்து, நாட்டுக்காகப் போரிட்டு மாண்ட அத்தனை போராளிகளும் வீரர்களும்போலவே மருத்துவ, விஞ்ஞான மற்றும் புவியல் ஆய்வாளர்களும் போற்றப்படவேண்டும் என்ற பிரக்ஞை மிகக்கொண்டான் கலாபன்.

லண்டனிலிருந்து கலாபன் அனுப்பியிருந்த கடிதம் கிடைத்த நான் அதைத் திறந்து படித்தபோது அதிர்ந்துபோனேன். காமமும் காதலும் என்ற தலைப்பிடாவிட்டிருந்தாலும் கடிதம் அந்த வி~யத்தைத்தான் பேசியது.

தன் கப்பலில் வேலைசெய்யும் இரண்டாவது அதிகாரிக்கும் லண்டனில் வசிக்கும் ஓர் ஈரான் நாட்டுக்காரிக்கும் இடையிலான காதலை அவ்வளவு அற்புதமாக விளக்கியிருந்தான் கலாபன்.

‘சரீரமூடான யாத்திரைகளில் சிலபேர் மனங்களைக் கண்டடைகிறார்கள். மனங்கள் கண்டடையப்பட்ட பின் சகதியில் கிடந்ததானாலும் அச் சரீரங்கள் ஆராதனைக்குரியனவாகி விடுகின்றன. இந்த மகிமையைச் செய்ய காமத்துக்குத் தவிர வேறு எதற்குச் சக்தி உண்டு?’ என அந்தக் கடிதம் முடிந்திருந்தது.

அந்தக் கடிதத்தை மூன்றாவது தடவையாக படுக்கும்போதும் ஒருதரம் படித்தேன்.
000

No comments:

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...